இடுகைகள்

இளவரசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருளர் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை வழங்கும் ஆசிரியர் இளவரசன்! - அரியலூரில் புதிய முயற்சி

படம்
  இன்று தேர்வு எழுதுவதும் அதில் தேர்ச்சி பெறுவதும் கடந்து நினைத்த லட்சிய படிப்பை படிப்பதற்கான வேட்கை அதிகம் உள்ளது. இதற்கு தடையாக ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் விளையாட்டுகளை விளையாடி ஏராளமான நுழைவுத்தேர்வுகளை புரியாத மொழியில் வைத்து சவால்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மாணவர்களை ஜெயிக்க வைக்க சிலர் தங்களையே தீக்குச்சியாக எரித்துக்கொண்டு உழைத்து வருகிறார்கள். அரியலூரின் ஓலையூர், பாப்பன் குளம் பகுதியில் 67 இருளர் குழந்தைகள் உள்ளனர். இவர்களைப் போன்றவர்கள் வறுமையை சமாளித்து பள்ளிப்படிப்பை தாண்டுவதே கடினம். அதிலும் வென்று கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதெல்லாம் மனோரமா இயர் புக்கில் வெளிவந்தாலும் ஆச்சரியமில்லை.  இவர்களுக்கு பயிற்றுவிக்க இளவரசன் முன்வந்து உதவி வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், மாலை நேரங்களில் இருளர் குழுந்தைகளுக்கு வகுப்புகளை எடுத்து வருகிறார். ஞாயிறு மட்டும் விடுமுறை. இப்பணியை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறார்.  1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார் இளவரசன். இவரது கல்வி நிலையத்திற்கு பெயர் மகாத்மா காந்தி மாலைநேர படிப்பகம். இங்கு க