அரசின் ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம்
ஐஎன்வி ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கீகாரம் தர முடியாது! - கோவாக்சின் பரிதாபம் கொரோனா வந்த இரு ஆண்டுகளில் பெரிய லாபம் பார்த்தது பாரத் பயோடெக் என்ற இந்திய மருந்து நிறுவனம், மக்களின் உயிர்பயத்தை பயன்படுத்தி நிறைய லாபம் சம்பாதித்தது. இதற்கு ஆளும் வலதுசாரி மதவாத கட்சியின் ஆசிர்வாதம் இருந்தது. உள்நாட்டில் அடித்துப் பிடுங்கி காசு சம்பாதித்தாலும் தடுப்பூசியை உலகளவிலான மருத்துவ அமைப்புகள், அங்கீகரிக்க மறுத்துவிட்டன. ஆனால், இந்திய அரசு தடுப்பூசி நிறுவனத்திற்கு பத்ம பூஷன் விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியது. உண்மையில், நாட்டின் மதிப்பிற்குரிய விருது, அரசியல் காரணங்களுக்காக தனது மதிப்பை இழந்து டிவி சேனல்கள் நடிகர்களுக்கு கொடுக்கும் தாம்பூலப்பை போல மாறியிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன், நேஷனல் இன்ஸ்டிடியூட் வைரலாஜி(என்ஐவி) என்ற எழுபத்தி இரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அரசு நிறுவனம் ஒப்பந்தம்போட்டு, இணைந்து கோவாக்சினை உருவாக்கின. ஆனால் மருந்து விற்பனைக்கு வந்தபோது என்ஐவிக்கான எந்த அங்கீகாரமோ, அடிக்குறிப்போ கூட இல்லை. வலதுசாரி மதவாத அரசுக்கு வாழ்நாள...