இடுகைகள்

ஓளரங்கசீப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்ற