இடுகைகள்

அறிவோம் தெளிவோம்- மின்சாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய கிராமங்களுக்கு மின்சக்தி கிடைத்தது உண்மையா?

படம்
அறிவோம் தெளிவோம் ! இந்தியா நூறு சதவிகித மின்சாரவசதி பெற்றுவிட்டது என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில் 17 சதவிகித வீடுகளில் இன்றும் மின்வசதி கிடையாது என்ற உண்மை வெளியாகியுள்ளது . பிரதான் மந்திரி சாகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா திட்டஅறிக்கை , 17.4% கிராமப்புற வீடுகள் இன்னும் மின்வசதி பெறாமல் உள்ளன என்று கூறுகிறது . 1950 ஆம் ஆண்டு வரை 3,061 கிராமங்களுக்கு மட்டுமே மின்வசதி கிடைத்திருந்தன . 1991-2003 காலகட்டத்தில் மாநில மின்வாரியங்களின் பணிகளால் 44 ஆயிரம் கிராமங்கள் மின்வசதி பெற்றன . 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 க்குள் நூறு சதவிகித வீடுகளுக்கு மின்வசதியைப் பெற்றுத்தர மின்துறை அமைச்சர் ஆர் . கே . சிங் , முயன்றுவருகிறார் . உ . பி , பீகார் , ஒடிஷா , ஜார்க்கண்ட் , அசாம் , ராஜஸ்தான் , ம . பி ஆகிய மாநிலங்களில் மத்தியப்பிரதேசம் மட்டுமே அமைச்சர் சொன்ன நாட்களுக்குள் மின்வசதியை தருவதே சாத்தியம் . ஐந்து மாதங்கள் செலவிட்டால் போதும் .