இடுகைகள்

மருத்துவம் - நீலநிற ஒளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீலநிற ஒளியே மருந்து!

படம்
ரத்த அழுத்தத்திற்கு நிறமே மருந்து! சர்க்கரை வந்தால் அதன் தோஸ்த் ரத்த அழுத்தமும் விரைவில் ஆஜராகிவிடும். என்ன செய்யலாம்? அருகம்புல் ஜூஸ், டீஷர்ட் நனைய உடற்பயிற்சி, டயட் கட்டுப்பாடு இதனோடு நீலநிறத்தையும் பயன்படுத்தலாம் என இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகம் ஆலோசனை கூறியுள்ளது. தினசரி 30 பேர்களை நீலநிற ஒளியில்(450 நானோமீட்டர்) வைத்து நடத்திய 30 நிமிட பரிசோதனையில் உடலின் ரத்த ஓட்டத்தை சுலபமாக்கி ரத்த பிளாஸ்மாவில் வெளியாகும் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து இதயநலம் காப்பது தெரிய வந்துள்ளது. நீலநிற ஒளி மன அழுத்தத்திலிருந்து மக்களை காப்பதோடு தொற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. நீலம் மற்றும் பர்பிள் நிற உணவுகளில் ரெஸ்வெராட்ரோல் மற்றும் ஆந்தோசயோனின் ஆகிய ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலை நோயிலிருந்து காப்பாற்றுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறியுள்ளன. நீலம் மற்றும் பர்பிள் வகை உணவுகள், பொதுவாக நமது உணவுமுறையில் மிக அரிதான உணவுகள். இதயநோய், உடல்பருமன், சர்க்கரைக்கு எதிரான நோய்எதிர்ப்பை நீலம் மற்றும் பர்பிள் நிற காய்கறிகள் ஏற்படுத்துகின்றன.