இடுகைகள்

தீர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா?

படம்
  இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா? தூக்கத்திற்கு நேரம் முக்கியம் சூரியன் காலையில் எழுந்து மாலை மறைகிறது அல்லவா, அதே முறையில் தூக்கம் அமையவேண்டும். அதுபோல உங்கள் வேலை நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.  காலையில் எழுந்து சூரிய ஒளி மேலே படும்படி உலாவ வேண்டும். உணவு உண்டபிறகு சிறிது நேரம் நடக்கலாம். நாய் இருக்கிறதா, அதை அழைத்துக்கொண்டு வெளியே உலாவச் செல்லலாம்.  ஒருநாளுக்கு இருபது நிமிடங்களேனும் பசுமையான நிலப்பரப்பை பார்க்கவேண்டும். மரத்தில் அடியில் உட்கார்ந்து உணவை உண்ண முயலலாம்.  முட்கள் இல்லாத புற்கள் உள்ள இடத்தில் செருப்பை அணியாமல் வெற்று கால்களோடு சிறிது நடக்கலாம். அசுத்தமான இடங்களில் காலணி இன்றி நடப்பது நோய்களைக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.  வெளியே மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் சமயங்களில் போன், வாட்ச் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் மேகத்தை, பறவைகளைப் பார்க்க முடியும். வீசும் குளிர்ந்த தென்றலின் இனிமையை உடலும் மனதும் உணரும்.  தோட்டத்தை பராமரிக்க முயலலாம். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால், அதில் பூக்கள், காய்கறிகளை...

ஓமியோபதி நோயைத் தீர்க்கும் முறையை நோயாளி அறிந்துகொள்வது அவசியம்!

படம்
  மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி ஒருவரின் நோயை தீர்ப்பது தீர்க்கவில்லை என்பது வேறுவகையான விவாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நோயை தீர்க்க செய்யும் செயல்முறை, நோயை விட கடினமான இயல்புடையது. ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்றால் ஓமியோபதியில் கொடுக்கும் மருந்து, வலிப்பை பல மடங்காக உருவாக்கி பிறகே குறைக்கும். அதுவரை நோயாளி வலியை தாங்கிக்கொண்டிருந்தால் அவருக்கு நோய் குணமாகலாம். மாரடைப்பு, தலைசுற்றல், உடல் எடை குறைப்பு என பல நோய்களும் இதே திசையில் இதே வழிமுறையில் குணமாக்கப்படுகிறது. உடலில் இயற்கையாக உருவாகியுள்ள நோயைத் தீர்க்க அதேபோன்ற ஆனால் சற்று வீரியமான நோயை செயற்கையாக உருவாக்குவதே ஓமியோபதி தத்துவம். ஒருவரின் நோய் அறிகுறிகளைப் பார்த்து அதற்கேற்ப, வீரியமான மருந்துகளைக் கொடுத்து நோயை உருவாக்குகிறார்கள். நோயை உருவாக்கினாலும் உடலில் வேறு ஏதாவது இடர்ப்பான அறிகுறிகள் தோன்றினால் அதை கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். உண்மையில் அக்கறையான நேர்மையான ஓமியோபதி மருத்துவர் உங்களுக்கு கிடைத்தால், விபரீதமாக ஏற்பட்ட அறிகுறிகளைப் பற்றி கூறி, அதை தீர்க்க உதவிசெய்வார். தனியாக மருத்த...

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரே வழி!

படம்
      மக்கள் அதிகாரத்துவர்கள், ஒரு விஷயத்தில் நீதி கிடைக்கவேண்டுமென்றால் எந்த தரகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் நாடுவதில்லை. அதில் அவர்கள் பெரிதாக நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாக களத்தில் இறங்கி நடைபெறும் செயலை உடனே தடுக்க முயல்வார்கள். அதனால், இதை பார்ப்பவர்களுக்கு வன்முறை இயல்பு  கொண்டவர்கள் போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியானவர்கள் இல்லை. செயலை உடனே தடுக்கவேண்டும் என நினைப்பார்கள். உடனே களத்தில் குதித்துவிடுவார்கள். இந்தியாவில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ இயக்கத்தை அறிவீர்கள். மரங்களை கட்டிப்பிடித்து தடுத்து இயற்கையைக் காத்தவர்கள். அதுபோலத்தான். இவர்களும் செயல்படுகிறார்கள். புல்டோசர்களைக் கொண்டு காடுகளை அழிக்கிறார்களா, அவர்களது வண்டியின் பெட்ரோல், டீசல் டேங்கில் சர்க்கரையைப் போட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன முழு எஞ்சினும் பழுதாகிவிடும். நாம் கவனிக்கவேண்டியது எதிர்தரப்பு எந்த மெக்கானிக்கிடம் செல்வார்கள் என்பதல்ல. நடைபெற்ற செயல் நின்றுபோனதல்லவா, அதுதான் மக்கள் அதிகாரத்துவர்களின் வெற்றி. இயக்கமாகவும் அவர்கள் மேலிருந்து கீழ் என ஆணையிட்டு ச...

பிரச்னைகளை பேசித்தீர்த்துக்கொள்ளலாம் வாங்க! யொஹான் கால்டுங்கின் 'தகராறு'

படம்
  தகராறு யொஹான் கால்டுங் தமிழில் சுப உதயகுமாரன் விகடன் பிரசுரம் அணு உலைக்கு எதிராக போராடிய போராளியான சுப உதயகுமாரன்தான் நூலை அனுமதி பெற்று மொழிபெயர்த்திருக்கிறார். நூலை எழுதியவர் வேறு யாருமல்ல, அவரின் குருநாதர்தான். தந்தி போன்ற சுருக்கமான மொழியை தனக்கு புரிந்தவகையில் விளக்கியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.  தகராறு என்பது என்ன, அதை எப்படி தீர்ப்பது, இதுபற்றிய பேச்சுவார்த்தையை நடத்துவது எப்படி, அங்கு நாற்காலிகள், மேசைகள், அலங்காரம் எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பது வரை நூலில் விளக்கமாக பேசப்படுகிறது. கூடுதலாக, எந்தெந்த உலக நாடுகளில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன, அதில் தீர்வு எப்படி கிடைத்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என நிறைய விஷயங்களை கால்டுங் விளக்கி உள்ளார்.  கால்டுங், அமைதி பேச்சுவார்த்தைக்காக பல்வேறு அரசு அமைப்புகளில் இடம்பிடித்த அறிவாளி. ட்ரான்ஸ்சென்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ்நூலில் மூல நூல் ஆசிரியரின் பகுதிகள் முடிந்தபிறகும் கூட சுப உதயகுமாரன் திருக்குறள் பகுதியை இணைத்துள்ளார். அதுவும் வாசிக்க நன்ற...

உலகம் முதல் உள்ளூர் பிரச்னை வரை உட்கார்ந்து பேசுவோமா? - பிரேக் தி டிவைட் அமைப்பு பற்றி தெரிஞ்சுக்கோங்க

படம்
  அபய்சிங் சாச்சல் தனது சகோதரருடன்... உலக பிரச்னைகளை உட்கார்ந்து பேசும் பள்ளி மாணவர்கள்!  உலகில் ஏற்பட்டு வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டு. இதற்கு பிரச்னையை எதிர்கொள்ளும் தரப்புகள் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும். இந்த வகையில் உலக நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்கள், சமூகப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க உருவானதுதான் பிரேக் தி டிவைட் என்ற நிகழ்ச்சி. இதனை பிரேக் தி டிவைட் (Break the divide) என்ற தன்னார்வ அமைப்பு நடத்துகிறது. 2016ஆம் ஆண்டு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அபய்சிங் சாச்சல் என்ற பள்ளி மாணவர், இந்த அமைப்பைத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அபய்யின் சகோதரர் சுக்மீத், ஆர்க்டிக் பகுதிக்கு சென்றிருந்தார். அபய்சிங், தனது சகோதரர் சுக்மீத்துடன் வீடியோ அழைப்பு வழியாக பேசத் தொடங்கினார். இருவரும் தொடக்கத்தில் டிவி நிகழ்ச்சி, திரைப்படம் என்று தான் பேசினார்கள். பிறகு மெல்ல சமூகப் பிரச்னைகளைத் தீவிரமாகப் பேசி விவாதிக்கத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், படித்த சீகுவாம் பள்ளி மாணவர்களும் விவாதத்தில் இ...

விவசாய கருவிகளை வடிவமைக்கும் விவசாயி!

படம்
  விவசாய கருவிகளால் புகழ்பெற்ற விவசாயி! கர்நாடகத்தின் தார்வாடிலுள்ள அன்னிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர் நாடாகட்டின். இவர், விவசாயிகளுக்கு பயன்படும் 24 விவசாய கருவிகளைக் கண்டுபிடித்துள்ளர். கிராமத்தில் சக விவசாயிகள் இக்கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.    அப்துல்,  சிறுவயதிலிருந்தே புதுமையாக யோசித்து வருபவர். பள்ளி செல்லும்போது, அதிகாலையில் நேரமே எழ முடியாமல் தவித்தார். இதற்காக,  அலாரம் கடிகாரத்துடன் நீர் பாட்டிலை இணைத்து கருவியை உருவாக்கினார்.  அலாரம் ஒலிக்கும்போது, அதனை உடனே எழுந்து நிறுத்தாதபோது நீர்பாட்டிலிலுள்ள நீர் முகத்தில் கொட்டும். இப்படி ஒரு கருவியை அப்துல் கண்டுபிடித்தபோது அவரின் வயது 14 தான்.  இந்த நுட்பமான முறையில்தான் அதிகாலை எழுந்து படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றார்.  அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் விவசாய பட்டப்படிப்பு படிக்கும் கனவை கைவிட்டார். 1974ஆம் ஆண்டு முதல் குடும்பத்திற்கு சொந்தமான  60 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். படிப்...

கலைப்படைப்பையும், அறிவியல் படிப்பையும் இணைக்கவேண்டும்

படம்
சந்திரிகா டான்டன் கல்வி செயற்பாட்டாளர் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயில்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா? அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். பல்வேறு பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கான குழு தலைவராக இருக்கிறேன். மாணவர்கள் தன்னம்பிக்கையாக இருக்கிறார்கள். உறுதியான மனதுடன் படிக்கிறார்கள்.       இந்திய மாணவர்கள் இன்னும் ஸ்டெம் துறையை மட்டுமே கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். உயிரிபொறியியல், சுகாதாரம் ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்துவது எதிர்கால வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். இயந்திர பொறியியல் என்பதை நீங்கள் படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதோடு சேர்த்து மெக்கட்ரானிக்ஸ் என்பதையும் சேர்த்துப் படியுங்கள் என்கிறேன். கல்வி நிறுவனங்கள் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான மாணவர்களை உருவாக்குவதை கடமையாக கொள்ள வேண்டும்.  உயர்கல்வியில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன?  முந்தைய ஆண்டுகளில் வேண்டாம் என்று நினைத்து ஒதுக்கிய விஷயங்கள் இன்று முக்கியமான இடத்தைப் பிடித்து கவனத்தை ஈர...

செல்போனில் அதிகரிக்கும் சூதாட்ட மோகம்! - இங்கிலாந்து மருத்துவமனையின் தீர்வு!

படம்
அதிகரிக்கும் அடிமைத்தனம்! செய்தி: ஸ்மார்ட்போன்களின் வழியாக திரைப்படங்கள், விளையாட்டு, டிவி தொடர்கள் ஆகியவற்றின் மீதான அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து அரசின் ஆய்வுகள் கூறுகின்றன. இன்று பேருந்துகளிலும், கார்களிலும் செல்பவர்கள் அனைவருமே போனில் ஏதாவது செய்தியைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அது திரைப்படமாக, விளையாட்டாக அல்லது சமூகவலைத்தள பதிவாக கூட இருக்கலாம்.  மது, புகையிலை போன்ற அடிமைத்தனத்தை இவை ஏற்படுத்துகின்றன என்று உளவியலாளர்கள் கூறி வருகின்றனர்.  இங்கிலாந்து அரசு அமைப்பான கேம்ப்ளிங் கமிஷன் 2017 ஆம் ஆண்டு ஆய்வொன்றைச் செய்தது. இதில் 4 லட்சம் பேர்களுக்கு மேல் ஆப் வழியாக சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். தற்போது இளைஞர்களிடையே  இணையம் சார்ந்து அடிமைத்தனம் அதிகரித்துள்ளது. “அடிமைத்தனத்தைப் பழக்கம், பொருட்களை தொடர்ச்சியாக கவனமின்றி பயன்படுத்துவது என்றுகூட கூறலாம்” என்கிறார் அடிக்சன் எனும் பத்திரிகையின் ஆசிரியரும், புகையிலை ஆராய்ச்சியாளருமான ராபர்ட் வெஸ்ட். இணையம் சார்ந்த நெட்ஃபிளிக்ஸ் அமேசான் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் தினசரி நடவடிக்கைகளை...

இந்தியாவின் முக்கிய பிரச்னைகளுக்கு காந்தியத் தீர்வுகள்!

படம்
பின்டிரெஸ்ட் இந்தியாவின் பிரச்னைகளும் - காந்தியத் தீர்வுகளும்! இந்தியா சுதந்திரமடைந்தபோது,  அதனுடன் பல்வேறு சமஸ்தானங்கள் ஒன்றாக இணைந்தன. பின்னர்தான் அரசியலமைப்புச் சட்டப்படி ,மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. இவையெல்லாம் நிர்வாகரீதியானவையே. அன்றிலிருந்து இன்றுவரை நிலப்பரப்பு, கலாசாரம், மக்கள் என்று பார்த்தால் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய மாநிலங்கள் பலவும் தமக்கிடையே உள்ள இயற்கை வளங்களை, பல்வேறு பூசல்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றன.  அரசியல்கட்சிகள், இதனைப் பயன்படுத்திக்கொள்வதால் மாநில பிரச்னைகள் தேசிய அளவிலான பிரச்னைகளாக மாறுகின்றன. ஆட்சியாளர்கள், மாநில நலன் சார்ந்த பார்வையில் முடிவு எடுக்க நேரிடுகிறது. அப்போது, மாநிலங்களுக்கிடையே கடும் பிரிவினை போராட்டங்கள் மூளுகின்றன. சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிரம்மபுத்திரா நதி மற்றும் கர்நாடகம், தமிழகத்திற்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு, இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதற்கு காந்தியடிகள், நீதிமன்றத்தை நாடுவதும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்வதையும்  தனது ...

தியானம் செய்யும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?

படம்
sf ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தியானம் செய்யும்போது உடலுக்கு என்னாகிறது? கண்களை மூடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும். அதனால், நான் தியானம் செய்வதில்லை. உண்மையிலேயே ஆழ்ந்து தியானம் செய்யும்போது மூளையில் பல்வேறு மாறுதல் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  மூளையிலுள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான அமிக்டலா(amygdala), மெல்ல ஓய்வு பெறுவது தியானம் செய்யும்போதுதான். இதனால்தான் தியானம் செய்தபின் புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள்.  உடலில் காயம்பட்டிருந்தால் அல்லது திருப்பால் பூசியும் தீராத எரிச்சல்கள் மெல்ல ஓய்கின்றன. அதாவது, பாதிப்பு குறைவதோடு அவை குணமாகும் வாய்ப்பும் உருவாகிறது.  பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தால் கூட பச்சைப் பிள்ளையாய் சிரிக்கும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதும் தியானத்தில்தான். இதனால் இதயம் நல்லெண்ணெய் பயன்படுத்தாமலேயே இதயம் ரிலாக்ஸ் ஆகிறது.  சிகரெட் பிடிக்கும் பழக்கம் குறையவும், முதுகுவலி தீரவும் வாய்ப்புள்ளது. அதற்காக தியானம் என்பதை சர்வரோக நிவாரணியாக நினைக்காதீர்கள். மனதிற்கு நிம்மதி தருவது. ...