இடுகைகள்

பிழைத்திருத்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து

படம்
  பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து இந்திய பேரரசரின் மதக்கலவர ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு என்பதே முக்கியமான சுலோகம். அவர் சொல்ல மறந்துவிட்டார். இருந்தாலும் மக்கள் தாமாகவே புரிந்துகொண்டுவிட்டார்கள். சட்டவிரோதமாக குளிரில் உறைந்து செத்தாலும் தாய் நாட்டில் வாழமுடியாது என மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதுவும் பேரரசரின் பூர்விக ஆட்களே ஆள விட்டுவிடுடா சாமி என தப்பி ஓடிவருகிறார்கள். ஓகே கெட் டு தி பிசினஸ். தப்பி ஓடுவது சரி. அதை எப்படி திட்டமிடுவது? திட்டமிட்டாலும் கூட ஒருமுறை சாலைக்கு வந்துவிட்டால் அப்புறம் நடப்பது எல்லாம் நம் கையில் இருக்காது. அப்படியே வரும் சூழ்நிலைகளை சந்தித்து பயணிக்க வேண்டியதுதான். இருந்தாலும் சில முன்னெச்சரிக்கைகளைப் பார்ப்போம். பேரிடர், மதக்கலவரம், போர் என எது வந்தாலும் சரி, டிவி சேனல்களைப் பார்த்து தேசப்பற்று எனும் உச்சத்தை அடைவதை கட்டுப்படுத்தினால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம். தப்பிச்செல்லும் சாத்தியம் கொண்ட சாலைகளை அடையாளம் கண்டு அதிகம் பயன்படுத்தாத சாலைகளை தேர்வு செய்து தப்பிக்க முயலவேண்டும். எப்போது...

வாழ்க்கையைக் காப்பாற்றும் பழக்க வழக்கங்கள்! - உடல், மனதின் இயல்பான பழக்கங்கள்

படம்
              ஆபத்து கால நடவடிக்கைகள் ! உடலைப் பொறுத்தவரை ஆயுளுக்கும் நமக்கு பாதுகாவலராகவே செயல்படுகிறது . மிகவும் இக்கட்டான நேரம் என்றால் உடல் தானியங்கியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் இறங்கிவிடும் . இதனை ஒருவர் தவிர்க்கவே முடியாது . நீரில் இறங்கினால் , நீச்சலடிப்பது , நெருப்பைப் பார்த்தால் அது ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து எச்சரிக்கையாவது , நாய் துரத்தினால் இயல்பாகவே ஓடத் தயாராவது என சில விஷயங்களைக் குறிப்பிடலாம் . நவீன நகர வாழ்க்கையில் இந்த செயல்பாடுகள் ஒருவரின் சிந்தனை வாழ்க்கை முறையைப் பொறுத்து மாற்றங்களை காண்கிறது . அடிப்படையில் தன்னைக் காத்துக்கொள்வதுதான் இதில் முக்கியமானது . அப்படி சில அம்சங்களை கீழே காண்போ்ம் தாக்குதல் அல்லது தப்பித்தல் ஆபத்து என்று வரும்போது ஒன்று அதனை எதிர்ப்பது அல்லது அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடுவது என இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் . அதுதான் விலங்காக இருந்து நாம் பெற்ற அடிப்படை இயல்பு . இன்று இதே அம்சம் வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது . உயிருக்கு ஆபத்தான நிலையில் ...