பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து
பிழைத்திருப்போம்
நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து
இந்திய பேரரசரின் மதக்கலவர ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு என்பதே முக்கியமான சுலோகம். அவர் சொல்ல மறந்துவிட்டார். இருந்தாலும் மக்கள் தாமாகவே புரிந்துகொண்டுவிட்டார்கள். சட்டவிரோதமாக குளிரில் உறைந்து செத்தாலும் தாய் நாட்டில் வாழமுடியாது என மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதுவும் பேரரசரின் பூர்விக ஆட்களே ஆள விட்டுவிடுடா சாமி என தப்பி ஓடிவருகிறார்கள்.
ஓகே கெட் டு தி பிசினஸ். தப்பி ஓடுவது சரி. அதை எப்படி திட்டமிடுவது? திட்டமிட்டாலும் கூட ஒருமுறை சாலைக்கு வந்துவிட்டால் அப்புறம் நடப்பது எல்லாம் நம் கையில் இருக்காது. அப்படியே வரும் சூழ்நிலைகளை சந்தித்து பயணிக்க வேண்டியதுதான். இருந்தாலும் சில முன்னெச்சரிக்கைகளைப் பார்ப்போம்.
பேரிடர், மதக்கலவரம், போர் என எது வந்தாலும் சரி, டிவி சேனல்களைப் பார்த்து தேசப்பற்று எனும் உச்சத்தை அடைவதை கட்டுப்படுத்தினால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம். தப்பிச்செல்லும் சாத்தியம் கொண்ட சாலைகளை அடையாளம் கண்டு அதிகம் பயன்படுத்தாத சாலைகளை தேர்வு செய்து தப்பிக்க முயலவேண்டும். எப்போதும் வாடிக்கையாக மக்கள் பயன்படுத்தும் நெடுஞ்சாலைகளில் கூட்டம் தேர்த்திருவிழா போல கூடியிருந்தால், நீங்கள் தப்பிக்க முடியாது. சாலையிலேயே தேங்கி நின்று பேரிடரில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். கூகுள் மேப் அல்லாமல் வேறு உருப்படியான ஆப்களை தேடி பயன்படுத்துங்கள். வானொலியில் போக்குவரத்து நெரிசல் பற்றி சொல்லுவார்கள். அதையும் கேட்டுக்கொண்டுமுடிவெடு்ங்கள். அனைத்து ஊர்களிலும் குறிப்பிட்ட நகருக்கு செல்ல எளிதான வழி ஏதாவது இருக்கும். அதை கண்டுபிடியுங்கள். பிறருக்கு முன்னர் அதை செய்தால் உயிர் பிழைக்கலாம்.
புயல், நிலநடுக்கம், மண் சரிவு ஆகிய நிலைமைகளில் சாலைகளில் எளிதாக பயணிக்க முடியாது. ஒருமுறை இதுபோல சாலைகள் கற்களால் அடைக்கப்பட்டுவிட்டால் அல்லது சாலை உடைந்துவிட்டால் திரும்ப வரமுடியாது. பேரிடர் மீட்பு அமைப்பிடம் போன் செய்து நிலைமைகளை அறிந்து பயணிக்கலாம். அச்சூழலிலும் டோல்கேட் காசு வாங்குவார்களா, பொதுமொழியில் அல்லாது வடமொழியில் பதில் சொல்வார்களா என்பதெல்லாம் அந்த நாட்டின் தலையெழுத்தைப் பொறுத்தது.
பேரிடர் சூழலில் கார் அல்லது வேறு வாகனத்தில் செல்லாமல் நடந்துசெல்வது நம்மை பலவீனமாக்கும். சிலர் கூட்டமாக உங்களைத் தாக்கினால் கூட ஆச்சரியப்படமுடியாது. சைக்கிளை குறைந்த தொலைவுக்கு பயன்படுத்தலாம். அதில் பொருட்களை ஏற்றிச்செல்ல முடியாது. குறிப்பிட்ட சாலை தடத்தை பயன்படுத்த முதலில் அதில் சிலமுறை பயணித்து முக்கிய அடையாளங்களை மனதில் குறித்து வைத்துக்கொள்ளலாம். சிறிய நோட்டு இருந்தால் குறிப்பும் எடுக்கலாம். இப்படி செய்வதால், வானிலை மோசமானாலும் எளிதாக அடையாளங்களை வைத்து சாலையில் பயணிக்க முடியும்.
விமானங்கள் இயங்கி வரும் சூழல் இருந்தால் நல்லது. விரைவில் அதில் டிக்கெட் போட்டுவிட்டு நாட்டை விட்டு ஜூட் விட்டுவிடலாம்.
சொந்த வாகனம் வைத்திருப்பது நல்லது. இல்லையென்றால் இன்னொருவரை கெஞ்சிக் கேட்டு கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக