சீனாவிலுள்ள பள்ளி வகைகள்




 

எலைட் பள்ளி




இதில் தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் உண்டு. சீனாவில் தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை எலைட் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஆங்கில வழிக் கல்வி, கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கல்வி, மாணவர்களுக்கான வசதி, சூழல் ஆகியவை சொகுசு ஓட்டல் போல உயர்தரமாக இருக்கும்.




நகர மேல்நிலைப்பள்ளிகள்




அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள். இப்பள்ளியில் மாணவர்கள் சேர்வது, பல்கலைக்கழக அனுமதி தேர்வில் வெற்றி பெறுவதற்காகவே. தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வேலை செய்வதற்கான திறன்களை பெற முடியும். சுயாட்சி முறை என்பதால் சுதந்திரம் உண்டு. அரசின் பாடங்களை கற்றுக்கொடுத்தபிறகு வேறு விருப்ப பாடங்களை மாணவர்கள் கற்கலாம். அரசுப்பள்ளிகளை விட வசதிகள் நன்றாக இருக்கும். குறைபாடு, நிதியுதவி. வயதான ஆசிரியர்கள்.




தொழில்பயிற்சிபள்ளிகள்




கல்விக்கடன் வாங்கிப் படிக்க எல்லோராலும் முடியாது. எனவே, படித்து முடித்த உடனேயே வேலைக்கு செல்ல உதவும் பள்ளிகள் இவை. வாகனம் ஓட்டுதல், சமையல், உலக வணிகம், சுற்றுலா, சேவை நிர்வாகம், அலுவலக உதவியாளர் பணி ஆகியவை பாடங்களாக இருக்கும். வேலைவாய்ப்புக்காக குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகளோடு தொடர்பில் இருக்கின்றன.
















கிராம தனியார் பள்ளிகள்




இ்ங்கு, பாடம் சொல்லித்தருவதற்கான வசதிகள் குறைவு. கட்டணமும் குறைவு. அடிப்படை கல்வியை இவர்களை மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள். உள்ளூர் அரசு, மத்திய அரசு இத்தகைய பள்ளிகளை அங்கீகரிப்பதில்லை. அரசு பள்ளிகளி்ல படிக்கவும் ஏராளமான செலவுகள் உண்டு. அச்செலவை செய்ய முடியாதவர்களுக்கான பள்ளி இது.




காசு சம்பாதிக்க, சில அரசு பள்ளிகள் தங்களின் வளாகத்திற்குள்ளாகவே தனியார் பள்ளிகளை உருவாக்கி நடத்துகின்றன. அரசு பள்ளிகளின் பாடத்திட்டமேதான். மாணவர்களை ஈ்ர்க்கும் உத்தியாக தனியார் பள்ளிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. நிலம், வசதிகள் அரசுடையது. நிர்வாகம் தனியாருடையது.




சீன அரசு, அரசு பள்ளிகள் சிலவற்றை தனியார் வசம் ஒப்படைத்து நடத்தவும் அனுமதிக்கின்றன. கட்டிட வாடகையை அரசுக்கு தனியார் செலுத்தவேண்டும்.




தனியார் பல்கலைக்கழகங்கள்




அரசின் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடுகையில் அளவில் சிறியவைதான். பொருளாதார அடிப்படையில் பார்த்தால், மக்களுக்கு பல்வேறு பாடங்களைக் கறறுத்தர உதவுகிறது. 1997ஆம் ஆண்டில் சீனத்தில் 1,200 பல்கலைக்கழகங்கள் இருந்தன.




தனியார் பல்கலைக்கழகங்கள் பலவும் பெரியளவு நிதிச்சுமை கொண்டவை. மாணவர்களுக்கான கற்பிக்கும் பட்ஜெட்டே மிக குறைவு. பெரும்பாலான மாணவர்களிடையே கல்வியை கொண்டு சென்றது தனியார்தான்.




தொண்ணூறுகளில் பொருளாதார சீர்திருத்தம் செயல்பாட்டுக்கு வந்தது. அதில் கல்வித்துறையும் பயன்பெற்றது. கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கலாசாரம், உடல்நலம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றி்ல சீர்திருத்தம் வழியாக மாற்றங்கள் நடந்தன.




சீனர்களுக்கு தங்களது கலாசாரம் கல்வி மீது தீராத பெருமை உண்டு. அதற்கு அடிப்படையான காரணம், கன்பூசியஸ் என்ற ஒற்றை ஆளுமை. வாழும் காலத்தில் நாடோடியாக திரிந்தவர், பல்லாயிரம் மாணவர்களுக்கு கற்பித்து சீனத்தின் நவீன முன்னேற்றத்திற்கு அடிகோலியவர். அவர் காலத்தில் கல்வி என்பதற்கு உண்டான பொருள் வேறு. இன்று வேறு. நவீன காலத்தில், குழந்தைகள் எங்கள் குழந்தைப் பருவத்தை திருப்பிக்கொடு என பெற்றோரைக் கேட்டாலும் அவர்கள் அதற்கு தயாராக இல்லை. பிள்ளைகளை எப்படியாவது எலிப்பந்தயத்தில் முன்னே ஓடுமாறு செய்யவே கல்வியை நாடுகிறார்கள். சமூக பொருளாதார வாழ்க்கையை முடிவு செய்வதில் கல்விக்கு முக்கியப் பங்குண்டு.




1966-76 காலகட்டத்தில் நடைபெற்ற கலாசார புரட்சி, பெரும்பாலான மக்களை கிராமப்புறத்திற்கு இடம் மாற்றியது. இவர்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் கல்வி கற்பித்தனர். இதில் உயர்கல்வி வாய்ப்பு அரசியல் பதவி அடிப்படையில் வழங்கப்பட்டது. மக்களில் பெரும்பாலானோர்க்கு கல்வி சென்று சேரவில்லை. கல்வி, திறன் வளர்ப்பு என்பதை விட அரசியலில் அதிகம் ஈடுபட்டிருந்த காலமது. சீனாவில் தேசியவாதிகள், கம்யூனிசவாதிகள் என மக்கள் சமூகமே இரண்டு பிரிவாக பிளவுபட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்தது.




1977ஆம் ஆண்டு தேசிய பல்கலைக்கழக அனுமதி தேர்வு கொண்டு வரப்பட்டது. இதில், தேர்வெழுதி உயர்கல்வி பெற மாணவர்கள் முண்டியடித்தனர். வயது வரம்பு இருப்பதால், ஒரு மாணவர் நான்காண்டுகளுக்கு படித்துக்கொண்டே இருக்க குடும்பத்தினர் செலவு செய்ய முடியாது. எனவே, நிறைய மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை பெறவில்லை.




கல்வி இல்லையென்றால் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலைமை இருந்தது. எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைக்கு தங்களைப் போன்ற மோசமான பணி நிலைமை வரக்கூடாது என நினைத்தனர். தாங்கள் கல்வியை இழந்தாலும் அதன் வழியாக உழைத்துப் பெற்ற பணத்தை வைத்து பிள்ளைகளை கரையேற்ற நினைத்தனர்.




1990களுக்குப் பிறகு பட்டதாரிகள் அரசு வேலைகளை நம்புவது குறைந்துவிட்டது சீர்திருத்த காலகட்டம் என்பதால், அரசு ஊழியர்களும் பலநூறுபேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். குடும்ப செல்வாக்கு, தொடர்புகள் இல்லாதவர்களுக்கு அரசு தேர்வு மட்டுமே ஒரே வழி. அதை வைத்துத்தான் அவர்கள் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து என இரண்டையும் எட்டிப்பிடிக்க முடிந்தது.




1950-70 காலகட்டத்தில் அதிபராக மாவோ இருந்தார். அன்றைக்கு அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர். தொடக்க பள்ளி படிப்பு மட்டுமே படித்தவர்களாக இருந்தவர்களே அதிகம். இன்றைக்கு, அரசு அதிகாரிகள் வெளிநாட்டு விருந்தினர்களோடு ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொண்டுள்ளனர். சீனமொழியோடு ஆங்கிலம் பேசக்கற்பது சீன வணிகர்களுக்கு முக்கியமான தகுதி.













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!