பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் பெண்மணி! - டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள்
டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள்
ஸ்கை பெர்ரிமன்
skye perryman
அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தவர்
அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்துவிட்டார். அரசு, பல்வேறு நிதி நல்கைகளை நிறுத்திவருகிறது. ஸ்கை, மாணவர்களுக்கு அரசு வழங்கும் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோரி சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதற்காக டெமோகிரசி ஃபார்வர்ட் என்ற தொண்டூழிய அமைப்பை நடத்தி வருகிறார். நிச்சயம் அவர் செய்கிற பணி சவாலானது. ஒரு நாட்டின் அதிபரே ஜனநாயத்திற்கு, தாராள தன்மைக்கு எதிராக இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், அந்த நாட்டு மக்களே அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது நகைமுரண்.
மக்கள் அழுத்தம் கொடுத்து தங்களுக்கு தேவையான சேவைகளை பெற முடியும் என நிரூபிக்க ஸ்கை பெர்ரிமன் போராடுகிறார். நாம் ஆபத்தான நிலையில்லாத உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அதனால், எப்போதையும் விட மக்களுக்காக போராடும் போராளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள். நேரடியான தெளிவான செயல்பாடுகளுக்கு ஸ்கை பெர்ரிமன் போன்ற ஒருவர் தேவைப்படுகிறார்.
கெல்லி ராபின்சன்
சாண்ட்ரா டயஸ்
sandra diaz
இயற்கை பன்மைத்துவ போராளி
ஒரு ஆசிரியர் தனது வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, அவர்கள் யார், பலம், பலவீனம் என அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அப்படியிருந்தால் அவர் சிறந்த ஆசிரியராக இருப்பார். இயற்கையியலில் சாண்ட்ரா டயஸ் அப்படியான ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.
இயற்கையியல் துறையில், துறைசார்ந்த ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி குறைவாகவே உள்ளது. இந்தசூழலிலும் இயற்கையை, அதில் உள்ள தாவரங்கள், செடிகள், பூச்சிகள் ஆகியவற்றை அழியவிடாமல் காக்க முயன்று வருகிறார்.
அர்ஜென்டினாவின் கார்டோபா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் சாண்ட்ரா டயஸ், தனது ஆராய்ச்சி மூலம் பன்மைத்துவத்தை காக்க முயன்று வருகிறார். இயற்கையில் தாவரங்கள், பூச்சிகள் ஆகியவற்றுக்கு உள்ள தொடர்பை விளக்க முயற்சி செய்து வருகிறார்.
எலிசபெத் மருமா எம்ரேமா
கிறிஸ்டியன் ஹப்பி
தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான பயிற்சி
கிறிஸ்டியன் ஹப்பியை இருபது ஆண்டுகளாக கண்டு வந்தாலும், அவரின் ஆற்றல், நம்பிக்கை சிறிதும் குறையவில்லை. ஆப்பிரிக்காவில் தொற்று நோய்களை தடுப்பதற்கான பயிற்சியை மருத்துவர்களுக்கு வழங்கி வருகிறார். ஏஸ்ஜிட் என்ற மையத்தை உருவாக்கி இயங்கி வருகிறார். கோவிட் -19, எம்பாக்ஸ், எபோலா என பல்வேறு தொற்றுநோய்களுக்கு எதிராக இயங்கி, குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க உழைத்து வருகிறார். நைஜீரியாவில் இதற்கென மரபணு ஆராய்ச்சி மையத்தை அமைத்தது கூட இதற்காகத்தான்.
பர்டிஸ் சபேட்டி
அலிசன் செசோ
allison sesso
மருத்துவக்கடனுக்கு பொறுப்பு
இன்று உலக நாடுகளின் தலைவர்கள் கூட பிறருக்கு உதவி என்றால் வெறும் பேச்சளவில் பெரிய உதவியை செய்வதாக கூறுகிறார்கள். ஆனால், உ்ணமையில் அவர்களது கைகள் எதையும் வழங்குவதில்லை. அமெரிக்காவில் மருத்துவக்காப்பீடு என்பது முக்கியமானது. ஆண்டுதோறும் பல்லாயிரம் பேர் காப்பீடு இல்லாமல் இறந்துபோகிறார்கள். அலிசன் செசோ, மருத்துவக்கடன்களை பொறுப்பேற்றுக்கொள்ளும் தொண்டூழிய அமைப்பான அன்ட்யூ மெடிக்கல் டெப்ட்டை நடத்துகிறார். 14 பில்லியன் டாலர் கடனை அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அமைப்பு உள்ளூர் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன் இணைந்து இயங்குகிறது. மருத்துவக்கடனை ஏற்றதால் ஒன்பது மில்லியன் மக்கள் நெருக்கடியில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.
ஜூலி புர்கார்ட்
julie burkhart
கருக்கலைப்பு சுதந்திரம்
ஜூலி, பெண்களுக்கு கருக்கலைப்பு சுதந்திரம் தேவை என வாதிட்டு வருகிறார். வெல்ஸ்பிரிங் ஹெல்த் அக்சஸ் என்ற கிளினிக்கை நடத்தி வருகிறார். இதில், கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இப்போது வியோமிங் மாகாணத்தில் ஆளுநர், கருக்கலைப்பை தடை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அப்படியானபோதும், ஜூலி கருக்கலைப்புக்கு ஆலோசனை கேட்பவர்களுக்கு போன் வழியாக ஆலோசனைகளை சொல்லி வருகிறார். கூடுதலாக, அரசு மீது சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
ஜூலிக்கு, பெண்களின் கருக்கலைப்பு தனிமனித உரிமை என்று கூறி பேசி வருவதால் கொலைமிரட்டல்கள், மருத்துவமனையை எரித்துவிடுவோம் என்று கூறும் மதவாதிகளின் மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. ஹோம் கிளினிக் என்பதன் துணை நிறுவனராக இருக்கிறார். பல்வேறு மாகாணங்களில் மதவாதிகளின் அதிகரிப்பால், கருக்கலைப்பு செய்வதற்கு தடைகள் உருவாகி வருகின்றன. ஜூலி அதை சளைக்காமல் எதிர்த்து போராடி வருகிறார்.
சார்லட் ஆல்டர்




கருத்துகள்
கருத்துரையிடுக