இடுகைகள்

பேட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நான் யார் என்ற கேள்வியை எழுப்புவதுதான் கலை! - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

படம்
  ஸ்டீபன் ஸ்பீல்பர்க், திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் திரைப்பட இயக்குநர். ஸ்டீபனுக்கு எழுபத்தாறு வயதாகிறது. ஜாஸ்   பாகங்ள், சேவிங் பிரைவேட் ரியான், மைனாரிட்டி ரிப்போர்ட், ஈ.டி எக்ஸ்ட்ரா டெரஸ்டெரியல், ஷிண்ட்லர் லிஸ்ட் ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய தயாரித்த படங்களின் வணிக லாபம் 38.7 பில்லியன் டாலர்கள்.   சினிமாவின் சக்தியை எப்போது உணர்ந்தீர்கள்? இளமையிலேயே சினிமாவின் சக்தியை உணர்ந்தேன். திரைப்படங்களை பார்ப்பதன் வழியாக என்னுடைய பெற்றோருடனான உறவும் கூட மாறியது. குறிப்பாக என்னுடைய அம்மாவினுடைய உறவு. அவர், அப்பாவைக் கடந்து இன்னொருவரை காதலிப்பதை அறிந்தபிறகு, அவரை நான் என்னுடைய அம்மாவாக கருதவில்லை. ஒரு மனிதராக அவரை அனைத்து பலவீனங்களும் கொண்டவராக என்னை நானே பார்ப்பது போல பார்த்தேன். பத்தாண்டுகளுக்கு   எனது அம்மாவை,   அவராகவே கருதிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தது குடும்பத்தில் வேறு எவரையும் விட அவரை நெருக்கமானவராக உணரச் செய்தது. உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய சுயசரிதை படங்களை எடுக்க நினைத்துள்ளீர்களா? எனது அம்மா, எப்போது திரைப்படங்களில் நமது கதையைச் சொல

செயற்கை நுண்ணறிவோடு உரையாடும் அளவுக்கு மக்கள் மேம்படவில்லை - நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத்

படம்
பேராசிரியர் எழுத்தாளர் அனில் சேத் அண்மையில் நரம்பியல் அறிவியலாளர் அனில் சேத், பீயிங் யூ – எ நியூ சயின்ஸ் கான்ஷியஸ் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் இருபது ஆண்டு ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கிறது. மூளை, தன்னுணர்வு நிலை என இரண்டையும் மையப்பொருளாக கொண்ட நூல் இது.   மூளை, தன்னுணர்வு கொண்ட நிஜத்தை கற்பனையாக உருவாக்குகிறது என டெட்டாக் நிகழ்ச்சியில் பேசினீர்கள். அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு இடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அறிவியல் கொள்கை, தத்துவங்களில் தன்னுணர்வு நிலை என்பது இன்றும் மர்மமான ஒன்றாக உள்ளதுதான். மேலும் இது மிகவும் ஒருவருக்கு அந்தரங்கமானதும் கூட. பிறப்பதற்கு முன்னர் என்னவாக இருந்தோம், இறந்தபிறகு என்னவாக மாறுவோம் என்ற கேள்விகள் பலருக்கும் மனதில் உள்ளது.  அறிவியல் நவீனமான காலத்தில் மூளைதான் அனைத்துக்கும் காரணம் என தெரிய வந்திருக்கிறது. தன்னுணர்வு நிலை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? அது ஒரு அனுபவம். சிவப்பு நிறம் என்றால் சிவப்பு நிறம். வலி உணர்வு என்றால் வலி. த

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் அம்மாவிற்கு மகனை கண

பேராளுமைகளை சந்தித்த அனுபவத்தை சொல்ல நினைத்தேன்! - கவிஞர் குல்ஸார்

படம்
  கவிஞர் குல்ஸார் குல்ஸார் கவிஞர், பாடலாசிரியர் ஆக்சுவலி ஐ மெட் தம் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார் குல்ஸார். நூல், சினிமா, இசை, இலக்கியம் பற்றி அவரிடம் பேசினோம்.  நூலுக்கான தலைப்பை எப்படி பிடித்தீர்கள்? என்னுடைய பயணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன். ஆனால் அந்த தலைப்பு மிகவும் சாதாரணமாக இருந்தது. பிமல்ராய், பண்டிட் ரவிசங்கர், மகாஸ்வேதா தேவி ஆகியோரை சந்தித்து பேசி பழகி இருக்கிறேன். இதுபோன்ற பெரிய ஆளுமைகளை சந்தித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அதை வெளிக்காட்டும்படியாக நூல் தலைப்பை வைத்தேன்.  நூலில் சத்யஜித்ரே, கிஷோர்குமார், சுசித்ரா சென் ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.  நூலில் உள்ள பதினெட்டு ஆளுமைகளை சந்தித்து பேசி அவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக உள்ளது. இவர்களில் சிலரைப் பற்றி நூலாக எழுத நினைத்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சில மனிதர்களைப் பற்றி கவிதைகளை எழுதி வைத்துள்ளேன். அவற்றை பின்னாளில் பிரசுரிப்பேன் என நினைக்கிறேன்.  யாருடனாவது பணியாற்றவேண்டும் என நினைத்துள்ளீர்களா? அந்தப் பட்டியல் பெரிது. குருதத்துடன் பணிபுரிய நினைத்தேன். அவர் படம் எடுத