நான் யார் என்ற கேள்வியை எழுப்புவதுதான் கலை! - ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

 





ஸ்டீபன் ஸ்பீல்பர்க், திரைப்பட இயக்குநர்








ஸ்டீபன் ஸ்பீல்பர்க்

திரைப்பட இயக்குநர்.

ஸ்டீபனுக்கு எழுபத்தாறு வயதாகிறது. ஜாஸ்  பாகங்ள், சேவிங் பிரைவேட் ரியான், மைனாரிட்டி ரிப்போர்ட், ஈ.டி எக்ஸ்ட்ரா டெரஸ்டெரியல், ஷிண்ட்லர் லிஸ்ட் ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர். இவர் உருவாக்கிய தயாரித்த படங்களின் வணிக லாபம் 38.7 பில்லியன் டாலர்கள்.

 

சினிமாவின் சக்தியை எப்போது உணர்ந்தீர்கள்?

இளமையிலேயே சினிமாவின் சக்தியை உணர்ந்தேன். திரைப்படங்களை பார்ப்பதன் வழியாக என்னுடைய பெற்றோருடனான உறவும் கூட மாறியது. குறிப்பாக என்னுடைய அம்மாவினுடைய உறவு. அவர், அப்பாவைக் கடந்து இன்னொருவரை காதலிப்பதை அறிந்தபிறகு, அவரை நான் என்னுடைய அம்மாவாக கருதவில்லை. ஒரு மனிதராக அவரை அனைத்து பலவீனங்களும் கொண்டவராக என்னை நானே பார்ப்பது போல பார்த்தேன். பத்தாண்டுகளுக்கு  எனது அம்மாவை,  அவராகவே கருதிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தது குடும்பத்தில் வேறு எவரையும் விட அவரை நெருக்கமானவராக உணரச் செய்தது.

உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய சுயசரிதை படங்களை எடுக்க நினைத்துள்ளீர்களா?

எனது அம்மா, எப்போது திரைப்படங்களில் நமது கதையைச் சொல்லப்போகிறாய்? அப்படி எடுத்தால் என்னிடம் நிறைய விஷயங்கள் உள்ளன என்று கூறியிருக்கிறார். எனக்கு இயக்குநர் ஆவது தொழிலமுறை  திட்டத்தில் இல்லை என்பதால், அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. அம்மா கூறியபடி, விஷயங்களை பொதுவெளியில் பகிரங்கமாக கூறுவது தலைவலியை ஏற்படுத்தக் கூடியது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது, எனது வாழக்கை பற்றிய நிறைய நினைவுகளை சேகரித்துக்கொண்டேன். அதேசமயம் நான் எனது அம்மாவை இழந்துவிட்டேன்.  குடும்ப விஷயங்களை படமாக எடுப்பதை அப்பா விரும்பவில்லை.

ஈ.டி, குளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃப் தி தேர்ட் கைண்ட், வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், கேட்ச் மீ இஃப் யூ கேன், எம்பயர் ஆஃப் தி சன் என நீங்கள் எடுத்த இவ்வகை படங்களில் எல்லாம் குழந்தைகளுக்கு உடைந்த சிதைந்துபோன குடும்ப உறவுகளே இருக்கின்றன. சேவிங் பிரைவேட் ரியான் படத்தில், குடும்பம் ஒன்றாக இணைகிறது அல்லவா?

அது என்னுடைய தொழிலில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதை என்னுடைய பெரிய அடையாளமாக கொள்ள முடியாது. அடையாளச் சிக்கல்கள் பற்றிய விஷயங்களைக் குறிப்பிடாமல் என்னால் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை.  மக்கள் என்னுடைய சொந்தவாழ்க்கையை விட படத்தின் கதைகளைப் பற்றித்தான் அறிய நினைக்கிறார்கள் என நினைக்கிறேன்.

‘ஈ.டி’ படத்தில் வரும் மூன்று குழந்தைகளுக்கு அன்பு காட்ட அவர்களின் அப்பா வீட்டில் இருப்பதில்லை. விருந்தினராக வருபவர்தான் அந்த குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக இணைக்கிறார். ‘குளோஸ் என்கவுன்டர்ஸ்’ படத்தில், அழுகின்ற தந்தையின் சட்டையைப் பிடித்து அவரது மகன் அழுகிற குழந்தை என்று கூறுகிறான்.  இந்த சம்பவம் எனது பத்து வயதில் நடைபெற்றது. அப்போது எனது அப்பா, அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். ஆனால் இதைப் பார்த்த பார்வையாளர்கள் அம்மா தொடர்பான பாசமான அக்காட்சியாக அதைப் புரிந்துகொண்டார்கள்.

உங்களின் உடைந்துபோன குடும்ப சம்பந்தமான காட்சிகளை சற்று புனைவாக திரைப்படங்களில் உருவாக்குவது மனதிற்கு திருப்தி அளிக்கிறதா?

திரைப்படங்கள் உங்களுக்கு போலியான பாதுகாப்பை அளிக்கின்றன. அனைத்து விஷயங்களின் மீது கட்டுப்பாடு உள்ளது போல உங்களுக்குத் தோன்றும். ஆனால் அது உண்மையில்லை.

உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது?

டேவிட் லீன் எடுத்த ‘லாரன்ஸ் ஆஃப் அராபியா’. இன்றுவரையில் அந்த படம் போல சிறப்பானதாக ஒரு படத்தை என்னால் எடுக்க முடியவில்லை. அதில் ஒரு காட்சி முக்கியமானது. கால்வாயை கடக்கும் லாரன்ஸை ஆங்கிலேயே அதிகாரி ‘’ யார் நீ?’’ என்று கேட்பார். அந்த கேள்வியைக் கேட்டு அவர் அப்படியே திகைத்து நிற்பார. அந்த கேள்வியைக் கேட்கும்போது கேமரா லாரன்ஸின் முகத்தை குளோசப்பில் காட்டும். உண்மையில் அதற்கான பதிலை அவரே தேடிக்கொண்டிருப்பது போல அமைந்த காட்சி.  உண்மையில் படம் எடுக்கும் நாமும் இதே கேள்வியை கால்வாயின் எதிர்ப்புறமாக நின்று எழுப்பிக்கொள்கிறோம். நான் யார்? என்ற கேள்விதான் கலை. நான் உருவாக்கும் அனைத்து படங்களும் இதே கேள்வியை எழுப்புபவைதான்.

புதிய திரைப்பட இயக்குநர்களுக்கு சொல்ல விரும்பும கருத்து என்ன?

உங்களுக்கு சுவாரசியமாக உள்ள ஆர்வமூட்டும் கதைகளை சொல்ல முயலுங்கள். பிறருக்கு சுவாரசியமாக இருக்கும் என நினைக்கும் கதைகளை திரைப்படமாக எடுக்காதீர்கள். தொடர்ச்சியாக நகர்ந்து செல்வதை விட முக்கியமானது வேறு எதுவும் கிடையாது.

ஜொனாதன் டீன்

ரீடர்ஸ் டைஜஸ்ட்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்