கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!
பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா |
பிகஸ் திஸ்
இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப்
கே டிராமா -16 எபிசோடுகள்
ராக்குட்டன்
விக்கி ஆப்
எல்லாவற்றையும்
பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால்
காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின்
களேபர விளைவுகள்தான் கதை.
இந்த கே டிராமா,
பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின்
பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்,
காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக்
கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள். இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக
எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார்.
டேட்டிங்
ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக
முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து
குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உணவக தலைமை சப்ளையர் ஓ ரங், இவளின் காதலன் வோன்
சியோக், டேட்டிங் ஆப் தலைவர் ஆகியோர்களின்பாத்திரங்கள்தான் முக்கியமானவை. அவர்களது
வாழ்க்கை, கஷ்ட நஷ்டங்கள்தான் சொல்லப்படுகிறது.
ஏறத்தாழ மூன்று
ஜோடிகளின் கதை என்று கூட சுருக்கமாக சொல்லலாம்.
நாம் சே கி
டேட்டிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் திட்டத் தலைவர். புத்திசாலி. ஆனால் இன்ட்ரோவர்ட்.
அவர் அதிகம் பேசுவதில்லை. தனது குழுவிடமும் கூட வேலையைத் தாண்டி பேசாத மனிதர். என்ன
யோசிப்பார், என்ன செய்வார் என பலரும் பீதியடைகிற மனிதர். அவருக்கு வாழ்க்கையில் உள்ள
லட்சியம், தான் வாழும் வீட்டுக்கென வாங்கிய கடனை அடைப்பது, தனது செல்லப் பூனையை தீனிபோட்டு
ஆசையுடன் வளர்ப்பது. அவ்வளவுதான்.
வீடு பெரியது
என்பதால் இன்னொரு அறைக்கு வாடகைக்கு வரும் ஆளைத் தேடுகிறார். அப்போதுதான் அந்த அறைக்கு
டிவி தொடர் எழுத்தாளராக முயலும் ஜி ஹோ வருகிறாள். அவளது பெயரைப் பார்த்து புகைப்படம்
பார்த்து ஆண் என நம் சேகி நினைத்துக்கொள்கிறான். அதுபோலவே, ஜி ஹோ, தனக்கு அறை வாடகைக்கு
கொடுத்தவர் அலுவலகம் செல்லும் பெண் என நினைத்துக்கொள்கிறாள்.
இறுதியில் உண்மை தெரிந்தாலும் நம் சேகிக்கு, ஜி ஹோ
மீது எந்த புகாரும் இல்லை. அவள் வீட்டை சுத்தப்படுத்துகிறாள். தனது பூனைக்கு தீனி போடுகிறாள்.
குப்பைகளை சுத்தம் செய்துவிடுகிறாள். அப்புறம் இதைவிட வேறு என்ன வேண்டும்? என நினைத்து
இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இந்த நேரத்தில் நம் சேகி அவளை கான்ட்ராக்ட்
திருமணம் செய்துகொண்டால் வாடகைப்பணமும் கிடைக்கும், வீட்டையும் பார்த்துக்கொள்வாள்
என தாறுமாறாக யோசித்து திட்டம் தீட்டுகிறான்.
ஜி ஹோவுக்கு
தங்குவதற்கு கூட இடமில்லாத சூழல். பாதுகாப்பான இடத்தில் நிம்மதியாக தூங்கவேண்டும் என்பதுதான்
அவளது ஆசை. எனவே, நம் சேகியின் கான்ட்ராக்ட் திருமணத்தை ஏற்கிறாள். உண்மையில் வாழ்க்கையில் ஒரே ஒரு ஆணை அதுவும் காதலித்து
மணப்பதுதான் அவளின் திட்டம். ஆனால் நம் சேகியை திருமணம் செய்யவேண்டிய நிர்பந்தம் தங்குமிடத்திற்காக
உருவாகிறது. இந்த காரணத்தை தனது உயிர்த்தோழிகளான சூ ஜி, ஓ ரங்கிற்கு கூட சொல்லாமல்
மறைக்கிறாள். உண்மையில் தனக்கென அமைதியாக வாழ, நிம்மதியாக தூங்க வீடு வேண்டும் என ஆசைப்படுகிறாள்.
இதன் காரணமாகவே நத்தை அவளுக்குப் பிடித்திருக்கிறது.
நம் சேகி
ஏன் பணம், வீடு, பூனை என இறுக்கமானவராக மாறினான் என்பதற்கு சுருக்கமான ஃபிளாஷ்பேக்
உள்ளது. அவரது இறுக்கத்தை கான்ட்ராக்ட் மனைவி ஜி ஹோ மெல்ல மெல்ல நீக்குகிறாள். இருவரும்
ஒருவரையொருவர் காதலிக்க தொடங்குகிறார்கள். இன்ட்ரோவர்டான நம் சேகிக்கு காதலை எப்படி
சொல்வது என்று தெரியவில்லை. அப்படி இப்படி அவனின் அன்பு புரிந்தாலும் தன்னை கட்டியணைத்து
காதல் சொல்லமாட்டேன்கிறான் என ஜி ஹோவுக்கு மனத்தாங்கல்.
இருவரும்
கான்ட்ராக்ட் திருமணத்தை நெருக்கமான நண்பர்கள் பெற்றோர்களுக்கு சொல்லி, பிரிய நினைத்து
பிறகு காதலில் கசிந்துருகி, அரசாங்கத்தில் பதிவு செய்து நல்ல குடிமகன்களாக வாழ்க்கை
நடத்துவதுதான் இறுதிப்பகுதி. இறுதிப்பகுதியில் நம் சேகியும், ஜி ஹோவும் ஒன்றாக இணைவது
சப்பென போய்விட்டது. இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாம். அன்பை எதிர்பார்த்து
ஆனால் அது கிடைக்காமல் போன விரக்தியை ஜி ஹோ மென்மையாக வெளிப்படுத்துவது பொருத்தமாக
இல்லை.
தொடரில் நாயகன்,
நாயகியை விட துணைப்பாத்திரங்களின் காதல் கதைகளும், முரண்களும் நன்றாக இருக்கின்றன.
குறிப்பாககார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் சூ ஜி., அங்கு பாலியல் சீண்டல்களுக்கும்
பேச்சுக்கும் உள்ளாகி அதிலிருந்து அவள் மீண்டு வந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வது
நன்றாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. அவளுக்கு பக்க துணையாக காதலனாக நம் சேகியின்
நிறுவன தலைவர் வருகிறார். இருவரும் பேசும் வசனம், நடிப்பு என அசத்தியிருக்கிறார்கள்.
சூஜி பாத்திரம்
தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதைப் பற்றி கோபமாக பேசும் காட்சி சிறப்பாக
உள்ளது. அதற்கு அவளது காதலர் பதில் தருவதும் பொருத்தமாக உள்ளது.
ஆப் உருவாக்கும்
வோன் சியோக்கும், உணவகத்தில் வேலை செய்யும் ஓ ரங்கும் பிரமாதமான வித்தியாசமான ஜோடி.
வோன் சியோக் கணினி பொறியியல் படித்த ஆள். ஆனால் அவனது காதலிக்கு, உணவு சார்ந்த துறை
வேலை. தனது காதலனின் வேலை பற்றியெல்லாம் அவளுக்கு கவலையே கிடையாது. அவன் தன்னை திருமணம்
எப்போது செய்வான் என ஏழு ஆண்டுகளாக டேட்டிங் செய்தபடி காத்திருக்கிறாள். இருவரும் லிவ்
இன்னாக வாழ்கிறார்கள்.
எதற்கு திருமணம்
செய்யவேண்டும், உறவில் காதல் என்பது தேவையா, நட்பின் முக்கியத்துவம், வாழ்க்கையை மகிழ்ச்சியாக
வாழ்வதற்கு என்ன தேவை என நிறைய விஷயங்களை இயக்குநர் பேசியிருக்கிறார். உண்மையில் இரண்டுபேர்
இணைந்து வாழ பொருளாதாரத்தை விட காதலே அவசியம் என தீர்ப்பு சொல்லியிருக்கிறார். பொருளாதார
வளர்ச்சி, வசதி என யோசித்து கையில் உள்ள நிகழ்கால வாழ்க்கையைத் தொலைத்துவிடக்கூடாது
என்பதை சற்று மறைமுகமாக காட்சிகளால், சில இடங்களில் வசனங்களில் கூறியிருக்கிறார்.
கோமாளிமேடை
டீம்
f irst episode date: 9 October 2017 (South Korea)
Final episode date: 28 November 2017
Executive producer: Lee Jung-hee
Genre: Romantic comedy
Hangul: 이번 생은 처음이라
Literal meaning: This Life Is Our First
Director: Park Joon-Hwa
Writer: Yoon Nan-Joong
Network: tvN
கருத்துகள்
கருத்துரையிடுக