செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - அமீலியோ, பிளைண்ட், கிராபிகா

 








அமீலியோ - சிறைக்கைதிகளுக்கான வீடியோ அழைப்பு


டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023

 

நோவா நார்டிஸ்க்

அமெரிக்க சந்தையில் நோவா நார்டிஸ்கின் ஆசம்பிக், ரைபெல்சஸ் ஆகிய மாத்திரைகளுக்கு கிராக்கி அதிகம். ஏனெனில் இந்த மாத்திரைகள் உடல் எடை குறைப்பிற்கானவை. இந்த மாத்திரைகளை இரண்டாம் நிலை நீரிழிவுக்கும் பயன்படுத்தலாம்.

நோவா மருந்து உற்பத்தி நிறுவனம், தனது மருந்துகளை எப்படி பயன்படுத்துவது, யாருக்கு பரிந்துரைப்பது என்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. உடல் எடை குறைப்பு சந்தை பெரியது. அதில் நோவாவின் மாத்திரைகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் அதிகம். அதையும் அந்த நிறுவனம் அறிந்திருக்கிறது. அல்சீமருக்கான மருந்துகள், சிகிச்சைகளை வழங்கவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதன் இயக்குநர் லார்ஸ் ஃப்ரூயர்கார்ட்.

#Nova nordisk

கிராபிகா

செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்படும் போலி செய்திகள், போலி புகைப்படங்கள், பிரசாரங்களை அலசி ஆராய்ந்து உண்மை என்ன என்பதை கிராபிகா கண்டுபிடிக்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் செயல்படுகிறது. 2022ஆம் ஆண்டு மெட்டா, கூகுள், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து போலிச்செய்திகளைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. கடந்த ஆண்டு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் செய்த போலி பிரசாரங்களைக் கண்டுபிடித்து தடுத்தது.

இதன் இயக்குநர் ஜான் கெல்லி.

#graphika

 

பிளைண்ட்

ஆன்லைன் தளம். இங்கு உங்கள் நிறுவனம் செய்யும் அநீதிகளை பெயரின்றி பதிவு செய்யலாம். இதன் வழியாக அந்த நிறுவனம் அவமானப்பட்டு, வேதனைப்பட்டு நல்வழிக்கு திரும்பும் என நம்புகிறார்கள். அப்படி நடக்கிறதோ இல்லையோ பிளைண்டின் நோக்கம் தவறுகளை அம்பலமாக கூறுவதுதான். ட்விட்டரில் ஏராளமான ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, பலரும் நிறுவனம் பற்றிய தங்கள் கருத்தை மனக்குமுறல்களை வெளியே கொட்டிய இடம் இதுதான். முடிந்தவரை உங்களது பெயரைக் கூறாமல் தகவல்களை மட்டும் சொல்வது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. எட்டு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ள தளத்தின் இயக்குநர் யங் யுக்.

#blind

அமீலியோ

அமெரிக்காவில் உள்ள சிறைகளில் கைதிகள் பிணை கிடைக்கும்வரை குடும்பத்தினரோடு பேசாமல் இருப்பது கடினம். அப்படி பேசினாலும் அதற்கு நிறைய காசு செலவு செய்யவேண்டும். இங்குதான் அமீலியோ நிறுவனம் உள்ளே வருகிறது. கைதிகள் தம் குடும்பத்தினரோடு வீடியோ கால் பேசும் வசதியை வழங்குகிறது. கொலராடோவில் ஐயோவாவில் தற்போது வீடியோ வசதியை இலவசமாக வழங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, குடும்பத்தினரோடு வீடியோ அழைப்பில் உரையாடும் கைதிகள் திரும்ப குற்றம் செய்துவிட்டு சிறைக்கும் வரும் சதவீதம் 22 எனுமளவில் குறைவதாக கண்டறிந்துள்ளனர்.

#Ameelio

டைம் வார இதழ்

ஜெர்மி கான்ட்ஸ், அலைஸ் பார்க், ஏவிஹெச், ஜே எல்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்