டைம் 2023 செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் - லெக்ஸி ஹியரிங், மாவென் கிளினிக், சர்க்கிள்
![]() |
மாவன் கிளினிக் |
![]() |
லெக்ஸி ஹியரிங் |
![]() |
சர்க்கிள கிரிப்டோகாயின் |
இன்டிரிபிட்
டிராவல்
மாசு இல்லாத
சுற்றுலா
அறிவியல்
ரீதியாக மாசுபாடு ஏற்படுத்தாத சுற்றுலா நிறுவனம். பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு விமானம்
இல்லாத பயணத்தின் மூலம் மக்களை கூட்டிச் செல்கிறார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள்,
போகுமிடமெல்லாம் மதுபான புட்டிகளை உடைப்பது, உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர்,
பெட்டிகளை அங்கேயே தூக்கிபோட்டுவிட்டு வருவது இயல்பானது. ஆனால், இந்த நிறுவனம் இதுபோல
மக்கள் சுற்றுலா செல்வதை மாற்றியிருக்கிறது. இதன் இயக்குநர், ஜேம்ஸ் தோர்ன்டன். இன்டிரிபிட்
டிராவல் நிறுவனம் தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது.
#intrepid
travel
வார்ட்சிலா
தூய ஆற்றலுக்கு
பல்லாயிரம் கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. சோலார், காற்றாலை என
ஏகத்துக்கும் செயல்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம் தீவிரமாக உள்ள
காலத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்காதபோது, காற்று தீவிரமாக வீசாதபோது என்ன செய்வது?
அப்போது கிடைத்த சேகரித்த மின்னாற்றலை சேமிக்கும் வழிவகைகளை வார்ட்சிலா நிறுவனம் வழங்குகிறது.
மின்சாரத்தை சேமிப்பதற்கான மையங்களை ஹவாய், டெக்ஸாஸ் ஆகிய இடங்களில் அமைத்திருக்கிறது.
இதன் இயக்குநர் ஹக்கன் அக்னேவல்.
டுவோலிங்கோ
கல்வி சம்பந்தமான
ஆப். செயற்கை நுண்ணறிவை தற்போது செயல்பாட்டில் இணைத்துக்கொண்டுள்ளது. உலகில் அதிகம்
தரவிறக்கி பயன்படுத்தப்படும் கல்வி ஆப்களில் டுவோலிங்கோவும் ஒன்று. பேர்ட்பிரெய்ன்
எனும் எந்திரவழிக் கற்றல் கொண்ட மாடலை ஆப்பில் பயன்படுத்தி, மக்களை ஈர்த்து வருகிறது.
கடந்த ஆண்டை விட 63 சதவீத பயனர்கள் அதிகரித்துள்ளனர். இதன் இயக்குநர் லூயிஸ் வான ஆன்.
#duolingo
மாவென் கிளினிக்
பெண்களின்
உடல்நலத்திற்கான ஸ்டார்ட்அப் நிறுவனம். இந்த நிறுவனம் பெண்கள் திட்டமிடாத கர்ப்பம்
தரிப்பது, அதை கலைப்பது,, பெண்களின் சிகிச்சை தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. மாவென்
கிளினிக்கில் மொத்தம் 15 மில்லியன் பயனர்கள் உள்ளனர். கடந்த நவம்பரில் நிறுவன இயக்குநர்
கேட் ரைடர் 90 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ளார்.
#Maven
clinic
லெக்ஸி ஹியரிங்
செவித்திறன்
குறைபாடு கொண்டவர்கள் பயன்படுத்தும் கருவி. இதற்கு முன்னர் அதிக விலையில்தான் இத்தகைய
கருவிகள் விற்று வந்தன. லெக்ஸி அதை மாற்றத்தொடங்கியுள்ளது. போஸ் நிறுவனத்துடன் இணைந்து
தனது ஹியரிங் கருவிகளை விற்றுவருகிறது. நடப்பு ஆண்டில் அறுபது மில்லியன் டாலர்களை வருமானமாக
பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் செயல்பாட்டு அதிகாரி செலின் வான் டெர்
வாட்.
#lexie
hearing
சர்க்கிள்
சர்க்கிள்
நிறுவனம், அமெரிக்க டாலர்களை கிரிப்டோகாயினாக மாற்றி உலகில் பாதிக்கப்படும் மக்களுக்கு
மனிதநேய உதவிகளை செய்துவருகிறது. சர்க்கிளின் கிரிப்டோகாயின்களை அமெரிக்க நிதி அமைப்புகள்
கண்காணித்து ஒழுங்குபடுத்துகின்றன. இந்த வகையில் ரஷ்யாவின் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன்
நாட்டு அகதிகளுக்கு உதவி வருகிறது. இந்த வகையில்
30 பில்லியன் டாலர்கள் மாற்றப்பட்டன. இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.
டைம் வார
இதழ்
ஜஸ்டின் வோர்லேண்ட்,
தாரா லா, ஜேமி டுசார்ம், டான் ஸ்டெய்ன்பர்க்
கருத்துகள்
கருத்துரையிடுக