விலங்குகளின் அறிவுத்திறன் அதிகரித்தால், மனிதர்களின் நிலை என்னவாகும்?

 


ஆக்டோபஸ்






விலங்குகளின் சிந்தனைத்திறன் வளர்கிறதா?

 

இன்று மனிதர்கள் முழு உலகையும் ஆளுகிறார்கள். இதை எப்படி செய்கிறார்கள்?. அவர்களுடைய சிந்தனை செய்யும் திறனால்தான். பிற விலங்குகளுக்கு இந்த திறன் குறைவு. இல்லை என்று கூறவில்லை. குறைவு என்றுதான் கருத வேண்டும். அவை பரிணாம வளர்ச்சி பெறும்போது, மனிதர்களோடு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அரிஸ்டாட்டில் மனிதர்கள் பகுத்தறிந்து செயல்படுவதால் விலங்குகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் இருப்பதாக கூறினார். மனித இனத்திற்கு அறிவியல் பெயராக ஹோமோசெபியன்ஸ் வழங்கப்படுகிறது. புத்திசாலி மனிதன் என்பதுதான் இதன் அர்த்தம். மனித குலம் முழுமைக்குமே இயற்கை வளங்கள் அழிந்து வருவது, அணுகுண்டு வெடிப்பு, போர், வரலாறு தொடர்பான பிரச்னைகள் உண்டு. விலங்குகளுக்கு இயற்கை கொடையாக கொடுத்துள்ள பற்கள், நகங்கள் அவை தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் பயன்படுத்தவே. ஆனால் மனிதர்கள் அப்படியல்ல. போர், படுகொலை, அடிமைமுறை என மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவு பெரியதாக உள்ளது.

அறிவுஜீவிகளை நாம் விரும்புகிற அளவுக்கு நாம் வாழும் பூமி நம்மை நேசிக்கவில்லை என்கிறார் டால்பின்களின் மொழி ஆராய்ச்சியாளர் ஜஸ்டின் கிரேக். ஃபிரடெரிக் நீட்ஷே ஒரு சிந்தனையாளர். உண்மையில் அவர் ஜெர்மன் த தத்துவ அறிஞராக பிறக்காமல் நார்வாலாக பிறந்திருந்தால் பாசிசத்தை ஆதரித்திருப்பார் என தான் எழுதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இயற்கையிலுள்ள எந்த ஒரு விலங்குகளைக் காட்டிலும் மனிதர்கள அதிகளவு அழிவை, இறப்பை பூமிக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். நம்முடைய அறிவு சார்ந்த சாதனைகள் மனித குலத்தின் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.

உண்மையில் இன்று மனிதர்கள் அவர்கள் உருவாக்கிய பிரச்னைக்கான தீர்வுகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்களா? உண்மையில் மனிதர்கள் அதிகம் பழகிக்கொண்டிருக்கும் விலங்குகள் என்றால் நாய், பூனை ஆகியவற்றைக் கூறலாம். இதைக் கடந்து சில தனித்துவமான ஆட்கள் புறா, கிளி, ஆமை ஆகியவற்றை வளர்ப்பது உண்டு. மனிதனுடைய மூளையின் ஆற்றலுக்கு இணையாக இன்னொரு விலங்கை தராசு தட்டில் வைக்கவேண்டுமானால், ஆக்டோபஸை கைகாட்டுகிறார்கள். 2016ஆம் ஆண்டு, பீட்டர் காட்ஃபிரே ஸ்மித் என்ற தத்துவ வல்லுநர் அதர் மைண்ட்ஸ் – தி ஆக்டோபஸ், தி ஸீ அண்ட தி ஆரிஜின்ஸ் ஆஃப் கான்சியஸ்னெஸ் என்ற நூலை எழுதினார். இதற்குப் பிறகுதான் ஆக்டோபஸ் என்ற கடல் உயிரினம் உலகம் முழுக்க பிரபலமானது. காட்ஃபிர ஸ்மித் கிழகு ஆஸ்திரேலியாவில் ஆக்டோபஸ்களைப் பார்த்து அவை ஒன்றை தெரிந்துகொள்ள விரும்புகின்றன, நெகிழ்வுத்தன்மை கொண்டன, சாகச விரும்பியாக இருப்பதோடு, வாய்ப்புகளை பயன்படுத்திக்  கொள்பவை  என அடையாளம் கண்டு கூறினார்.

மனிதர்களுக்கும், சிம்பன்சிகளுக்கும் மனிதக்குரங்கே அடிப்படையான முன்னோர். ஆக்டோபஸோடு ஒப்பிட்டால் அதன் நியூரல் கட்டமைப்பு வேறுபட்ட இயல்பில் அமைந்துள்ளது. மனிதக்குரங்குடன் உள்ள தொடர்பு ஆறு மில்லியன் ஆண்டுகள் என எடுத்துக்கொண்டால் ஆக்டோபஸை 600 மில்லியன் ஆண்டுகள் என கணக்கில் கொள்ளலாம். ஆக்டோபஸூக்கு 500 மில்லியன் நியூரான்கள் உண்டு. இது நமது வீட்டில் வளர்க்கும் நாய்க்கு உள்ள அளவுதான். ஆனால், இதன் நியூரான்கள் மூளையில் இல்லாமல் அதன் எட்டு  கைகளில் உள்ளன. எனவே, ஆக்டோபஸ் தனது கரங்களில் வாசனையை முகர்ந்து பிடிக்கும் எதையும் எளிதாக மறப்பதில்லை.

எனவே, இதன் அறிவுத்திறன் மனிதர்களுக்கு நிகராக வர வாய்ப்புள்ளது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இன்றும் கூட விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது என்ற கேள்விக்கு நம்மால் பதில் கண்டறிய முடியவில்லை. அமெரிக்க உளவியலாளர் பிஎஃப் ஸ்கின்னர், எலிகளுக்கு பரிசு தண்டனை என்ற விதமாக அதன் குண இயல்புகளைப் பற்றி ஆய்வு செய்தார். பரிசு என்றால் உணவு, தண்டனை என்றால் மின்சார தாக்குதல். சிம்பன்சிகளுக்கு தனித்தனி பெயரிட்டு அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஜேன் குட்டால் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சிம்பன்சிகளின் குண இயல்புகள் பற்றிய ஆராய்ச்சி செய்தவர்களில் ஜேன் முக்கியமானவர். உண்மையில் நாய், பூனையுடன் ஒருவர் வாழ்வது கடினமானது. ஏனெனில் மனிதர்களின் உணர்ச்சிகளை, மனதை அவற்றால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்று கூறினார். விலங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இது தெரியும். எனவே, அவர்கள் வெளிப்படையாக இதைப்பற்றி பேசுவதில்லை என்று கருத்து தெரிவித்தார்.

மனிதர்கள் எதிர்காலத்தை மனதில் கொண்டு நிகழ்காலத்தில் தியாகங்களை செய்கிறார்கள். இதற்கு அவர்களின் யோசிக்கும் குணமும், ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்வதும் காரணம். இந்த குணத்தை ரெசிஸ்டிங் டெம்ப்டேஷன் என ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். இப்படி எதிர்கால நன்மைக்காக நிகழ்காலத்தில் உள்ள விஷயங்களை தியாகம் செய்யும் குணம் பறவைகளுக்கும் உள்ளது. இதை ஆராய்ச்சியாளர் டே வால் தனது பழுப்பு நிற கிளியை வைத்து நிரூபணம்செய்திருக்கிறார். இந்த கிளி, அதற்கு வழங்கப்படும் உணவைத் தவிர்த்தால் அதற்கு பதிலாக மதிப்பு மிகுந்த சுவையா முந்திரி பருப்பைக் கொடுக்கச் செய்தார். எனவே, உணவு வைக்கப்பட்டால் கூட அதை 90 சதவீத நேரம் கிளி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக சிறகு விரித்து அதன் மூலம் உணவைக் கீழே கொட்டியது. அல்லது கத்தியது. சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்திக்கொண்டது.  சிறுவர்கள் இதுபோல தங்கள் ஆசையைக் கட்டுப்படுத்த செய்வது உண்டு.

மனிதர்களுக்கு காட்சி, ஒலி ஆகியவற்றின் வழியாக பெறும் தகவல்கள் அதிகம். முகர்தல் வழியாக ஒன்றை அடையாளமறிவது சற்று பலவீனமாகவே உள்ளது. விலங்குகளுக்கு பிற விலங்குகளை அடையாளம் கண்டறிய வாசனையை முகர்வது அடிப்படையானது. இதுபற்றி அறிவியல் பத்திரிகையாளர் எட் யங்  இம்மென்ஸ் வேர்ல்ட் என்ற நூலை எழுதியிருக்கிறார்.  இதில், யானைகளின் முகர்தல் திறன் பற்றி லூசி பேட்ஸ் செய்த ஆய்வு பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.  ஒரு யானைக்கூட்டத்தின் தலைமை யானைக்கு, அதன் குழுவில் உள்ள யானையின் சிறுநீரை பிடித்து எப்போதும் செல்லும் வழியில் தெளிக்கும்போது அதைக் கண்டுபிடிக்க அந்த யானை ஆர்வம் காட்டியிருக்கிறது. தவறான இடத்தில் சிறுநீர் தெளிக்கப்பட்டிருந்தாலும் கூட அந்த இடத்தை முகர்ந்து பார்த்து யானை அதை அறிய முயன்றது.

விலங்குகளைப் பொறுத்தவரை சிறுநீர் என்பது பிற விலங்குகளை அறிவதற்கான அடையாளம். அதை குறிப்பிட்ட யானை உள்ள எல்லையில் அறிவது எல்லை சார்ந்த சண்டையை உருவாக்குகிற விதிமீறல்களில் ஒன்று.

யானையைப் போலவே நாய்கள் இந்த வகையில் வாசனையை முகர்வதில் கெட்டிக்காரத்தனம் கொண்ட விலங்கு. உரிமையாளரின் பேச்சு சத்தம், உடலின் வாசனையை முன்னமே அடையாளம் கண்டு வரவேற்க தயாராகிவிடும். ஒருமுறை உடல் நறுமணத்தை அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் எளிதாக மறக்காது. மனிதர் அல்லது விலங்கு ஒரு அறையில் இருந்துவிட்டு சென்றால் வெகுநேரம் அவர்களின் உடல் வாசனை அங்கு இருக்கும். உடனே மறைந்து விடாது.

தொடரும்…

 

 

தி கார்டியன் வீக்லி

https://pixabay.com/photos/octopus-sea-life-underwater-ocean-3232758/

கருத்துகள்