செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - மைக்ரோசாஃப்ட், பைடு, சாம்சங்

 




பைடு, சீனா

ஜேபி மோர்கன் சேஸ்

சிஏடிஎல், சீனா

லேண்ட் ஓ லேக்ஸ்

லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட்

சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் இயக்குநர்






மைக்ரோசாஃப்ட்

செயற்கை நுண்ணறிவு உலகின் வாசல்

மைக்ரோசாஃப்ட்  டெக் உலகில் இருக்கிறதா இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் இயக்குநர் சத்யா நாதெள்ளா மாற்றியிருக்கிறார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அதை தன் வசப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் டெக் உலகில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களை விலக்கி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட், சாட் ஜிபிடியை தனது அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது, அதன் இணைய உலாவியான பிங் தொடங்கி ஆபீஸ் வரையில் அனைத்துமே இனி மாறிவிடும். மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். டெக் வல்லுநர்கள் பயன்படுத்தி வந்த கிட்ஹப்பும் கூட மைக்ரோசாஃப்ட் வசம் சென்றுவிட்டது. எனவே, இதிலும் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கும். இதில் கோடிங் எழுதுவதற்கு பயன்படுத்தும் கோபைலட் என்ற கருவியை செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தவிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை கோடிங் எழுதும் டெக் வல்லுநர்களுக்கு பயன்படும் என கூறுகிறார்கள்.

பைடு

மின்வாகனங்களில் ராட்சசன்

அமெரிக்கர்கள் கேள்விப்படாத நிறுவனமாக பைடு இருக்கலாம். இந்த நிறுவனம் சீனாவைச் சேர்ந்தது. சீனாவில் விற்கும் மின்வாகனங்களில் 39 சதவீதம் பைடு நிறுவனத்துடையதுதான். உலகளவில் மின் வாகனச் சந்தையில் டெஸ்லாவுக்கு கடும்போட்டியை அளிக்கும் நிறுவனம். உலகில் உள்ள 53 நாடுகளில் பைடுவின் கார்கள் விற்று வருகின்றன.’ உங்கள் கனவுகளை உருவாக்குங்கள்’ என்பதுதான் பைடு என்பதன் அர்த்தம். நிறுவனத்தின் மதிப்பு நூறு பில்லியனாக உள்ளது. 2023ஆம்ஆண்டு 3.7 மில்லியன் கார்களை விற்க லட்சியம் கொண்டிருக்கிறார்கள். பைடுவின் நிறுவனர், இயக்குநர் வாங் சுவான்ஃபு. பைடு நிறுவனத்தில் வாரன் பஃபட் முதலீடு செய்திருக்கிறார். டெஸ்லாவோடு போட்டியிட்டு அதிக கார்களை விற்க முயன்று வருகிறது பைடு.

#Byd

லேண்ட் ஓ லேக்ஸ்

உணவில் மாற்றம்

லேண்ட் ஓ லேக்ஸ் என்பது, வெண்ணெய் விற்கும் நிறுவனம். நூற்றாண்டுகளுக்கு மேலாக தனது தொழிலை நடத்தி வருகிறது. அதேசமயம் பொருட்கள் உற்பத்தியோடு, விவசாயிகள் தங்கள் செயல்பாட்டில் கார்பன் வெளியீட்டைக் குறைத்தால் அவர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. மண் வளம் காக்கும் பல்வேறு பயிர்களை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறது. லேண்ட் ஓ லேக்ஸின் இயக்குநர் பெத் ஃபோர்ட் மூலம் சூழல் சார்ந்த ட்ரூடெரா என்ற வணிகம் உருவானது. 4,62,000 மெட்ரிக் டன் கார்பனுக்கு 9 மில்லியன் டாலர்களை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளில் பால் பொருட்களை தயாரிக்கும் தனது தொழிலில் 6.9 மில்லியன் மெட்ரிக்  அளவில் கார்பனைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

#land o lakes

ஜேபி மோர்கன் சேஸ்

பாதுகாக்கும் காவலன்

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மோர்கன் சேஸ், வணிக வட்டாரத்தில் பிற நிறுவனங்கள் வீழும்போது அதைக் காக்கிறது. ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் என்ற நிறுவனம் வீழ்ந்தபோது அதை 10.6 பில்லியன் டாலர்களைக் கொடுத்து காப்பாற்றியது. 2008ஆம் ஆண்டு இதேபோல சிக்கலான நிலையில் இருந்த வாஷிங்டன் மியூச்சுவலை ஜேபி மோர்கனே வாங்கி காப்பாற்றியது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் ஜேமி டைமன். ஜேப மோர்கனின் செயல்பாடால் வீழ்ச்சியுற்ற ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

#jp morgan chase

சாம்சங்

உலகளவில் சாம்சங், ஆப்பிள் என இரு நிறுவனங்களும் முக்கியமான டெக் நிறுவனங்களாக உயர்ந்து நிற்கின்றன. மடித்து பயன்படுத்தக்கூடிய போன்களில் சாம்சங், பெரிய நிறுவனமாக முன்னிலையில் உள்ளது. கொரிய நிறுவனமான சாம்சங், ஐந்தாவது தலைமுறை கேலக்ஸி இசட் ஃபோல்ட், கேலக்ஸி இசட் ஃபிலிப் மாடல்களை இந்த ஆண்டு வெளியிடவிருக்கிறது. பல்வேறு டெக் நிறுவனங்களோடு இணைந்து ஒத்திசைவாக இருப்பதால் தனது போன்களில் பிற நிறுவனங்களில் செய்ய முடியாத விஷயங்களை சாத்தியப்படுத்துகிறது போன்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தாலும் அதில் யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது. மைக்ரோசாஃப்டின் ஆப்களை ஸ்பிளிட் திரைகள் வழியாக பார்ப்பது என நிறைய ஆச்சரியங்களைத் தருகிறது.

#samsung

சீமன்ஸ்

பொறியியல் பொருட்களை தயாரிக்கும் பெரு நிறுவனத்திற்கு வயது 175. வீட்டு பயன்பாட்டு பொருட்களை தயாரித்து விற்கிறது. முக்கியமாக தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. இந்த வகையில் எக்ஸலரேட்டர் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மென்பொருள் மூலம் ஒருவர் உற்பத்தியை நேரில் காண்பது போல துல்லியத்துடன் உருவாக்கிப் பார்க்க முடியும். கார் உற்பத்தி நிறுவனங்களின் சீமன்ஸின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்வாகனங்களை உருவாக்கி வருகின்றன.

அமெரிக்காவின் எஃப்டிஏவுடன் ஒப்பந்தமிட்டு அங்குள்ள நிறுவனங்களின் மருந்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதன் இயக்குநர் ரோலண்ட் புட்ச்.

#siemens

லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட்

ஆண்டுக்கு நூறு விழாக்களுக்கும் அதிகமான பல்வேறு விழாக்கள், 40 ஆயிரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிற நிறுவனம். நிறுவனத்தின் பலமே, நேரடியான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருவது, அதற்கான விளம்பரங்களை செய்வதுமே ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் 73 சதவீதம் உயர்ந்துள்ளது. அரசு புலனாய்வுத்துறையின் விசாரணைக்குள் சிக்கினாலும் கூட தனது தொழிலில் போட்டியாளர்களை விட பலபடி முன்னேதான் சென்றுகொண்டிருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை பெருமளவில் விற்பதில் சாதனை படைத்து வருகிறது.

#Live nation entertainment

சிஏடிஎல் – கான்டெம்பரரி ஆம்பெரக்ஸ் டெக்னாலஜி கோ. லிட்.

சீனாவில் உள்ள ஃபியூஜியன் நகரில் செயல்பட்டு வரும் பேட்டரி தயாரிப்பு நிறுவனம். உலகின் மின்வாகன பேட்டரி தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களில் ஒன்று. தற்போது கிளின் என்ற பெயரில் புதிய பேட்டரியைத் தயாரித்து வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் மின்வாகனத்தை அறுநூறு மைல்களுக்கு இயக்கலாம். அமெரிக்காவில் உள்ள பேட்டரிகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 மைல்கள்தான் செல்ல முடியும். அண்மையில் பிற நிறுவனங்களை விட லித்தியம் பேட்டரியில் இருமடங்கு  ஆற்றலை உள்ளடக்க முடியும் என கூறியுள்ளது. நிறுவனம் கூறியபடி அதன் செயல் அமைந்தால், மின் வாகனங்கள் பயன்பாடு இன்னும் கூடும்.

#catl

டைம் வார இதழ்

பில்லி பெரிகோ, சார்லி கேம்ப்பெல், நோவிட் பார்சி, டான் ஸ்டெய்ன்பர்க், குவாட்லுப் கான்சால்ஸ், மரியா எஸ்படா

கருத்துகள்