பொருட்களை திரும்ப பயன்படுத்தும் வட்டப் பொருளாதாரம்!
வட்ட பொருளாதாரம்
ஒரு பொருளைப்
பயன்படுத்திவிட்டு அதை அப்படியே பயன்பாடு முடிந்ததும் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப்
பார்க்கப் போவது சூழல் பிரச்னையை தீவிரமாக்குகிறது. இதற்கு எதிரானது, வட்டப் பொருளாதாரம்.
அதாவது சர்குலர் எகனாமி. இக்கருத்துப்படி, மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து
அதைப் பயன்படுத்துவது, பிறகு அந்தப் பொருளை மீண்டும் மறுசுழற்சி செய்வது ஆகியவை உள்ளது.
இதனால், கழிவுகள் உருவாவது குறைக்கப்படும்.
இதன்மூலம்
இயற்கை சூழல் கெடுவது பெருமளவு குறைக்கப்படுகிறது. லீனியர் எகனாமி முறையில் பொருட்கள்
பயன்பாடு முடிந்ததும் நேரடியாக குப்பைக்கு சென்றுவிடுகிறது. அதில் பயன்பாடு ஏதுமில்லை.
அந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இந்த முறையில்தான் பல நூற்றாண்டுகளாக
தொழில் உற்பத்தி நடைபெற்று வந்தது.
நன்னீருக்கான
தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து
மீண்டும் பயன்படுத்துவது தொடங்கப்பட வேண்டும். அல்லது நீர்த்தேவையைக் குறைத்து சிக்கனமாக
செயல்படுவது முக்கியம்.
பசுமை இல்ல
வாயுக்களை அதிகரிக்காத வகையில் வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். சரக்குப் போக்குவரத்திற்கும்
கார்பன் வெளியீடு குறைந்த வழிவகைகளை வாகனங்களை பயன்படுத்தினால் நல்லது. ஆனால், தற்போதைக்கு
அந்தளவு வலிமையான சரக்கு வாகனங்கள் உருவாக்கப்பட இல்லை.
மறுசுழற்சி
செய்யும் வகையில், இயற்கை வள ஆதாரங்களை குறைவாக பயன்படுத்தும் பொருட்களை தயாரிப்பதும்,
பயன்படுத்துவதும் முக்கியமானது. மின் வாகனங்களை
ஒருவர் பயன்படுத்தலாம். உயிரி எரிபொருட்களை பயன்படுத்தலாம். தன்னால் முடிந்தளவு இயற்கை
சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செயல்படுவது முக்கியம்.
வீட்டை கட்டும்போது
அதை இயற்கை சூழலைப் பாதிக்காத வகையில் பல்வேறு பொருட்களை வாங்கி திட்டமிட்டு கட்டலாம்.
விளக்குகளை அமைக்கலாம். மழைநீர் சேகரிப்பு வசதிகளை உருவாக்கலாம். இயற்கையான வெளிச்சம்,
காற்றோட்டம் கிடைக்குமாறு திட்டமிடலாம்.
வீட்டைச்சுற்றி
உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடலாம். தோட்டங்களில் பழமரங்களை நடலாம். பொதுவாக ஒரு வீட்டை
பத்து கி.மீ. தொலைவில் கிடைக்கும் பொருட்களை
வைத்தே சூழலுக்கு கெடுதல் இல்லாமல் எளிமையாக கட்டினால் எந்த பிரச்னையும் இல்லை. வீடு கட்டப்படும் பகுதியில் உள்ள காலநிலை மாற்றங்களை
அடிப்படையாக கொண்டு வீடுகளை உருவாக்குவது முக்கியம். மலைப்பகுதியில் கான்க்ரீட், அடுக்குமாடி
வீடு என்பது இயற்கை பேரிடரின்போது, பரிதாப தோல்வியில் முடியும்.
இன்று நிறைய
ஆற்றல் சிக்கன அமைப்புகள் வந்துவிட்டன. உங்களின் உடல் அமைப்பு, அசைவைப் பொறுத்து உள்ளே
வந்தால் மின் விளக்குகள் எரியும். அறையில் இருந்து வெளியேறிவிட்டால் விளக்கு தானாகவே
அணைந்துவிடும். இவற்றை வைஃபை மூலம் இணைத்துவிட்டால் உலகில் எங்கிருந்தாலும் கட்டுப்படுத்த
முடியும். இப்போதைக்கு மின்சார சிக்கனத்திற்கு எல்இடி விளக்குகள் பயன்படுகின்றன. விளக்குகளை
அமைக்கும் நேரத்தில் உள்ள தொழில்நுட்ப மேம்பாடுபடி விளக்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
சோலார் பேனல்கள்
மீது இன்று மக்களுக்கு ஆர்வம் பெருகிவருகிறது. அரசுகளும் இந்த திட்டங்களுக்கு மானிய
உதவிகளை அளித்து வருகிறார்கள். சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உணவு சமைப்பது நீரை சூடுபடுத்துவது
என பல்வேறு வேலைகளை செய்யலாம். பெரியளவில் சோலார்களை அமைத்தால் 1000 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையை பெறமுடியும்.
உலகில் உள்ள
முப்பது நாடுகளில் 450 நியூக்ளியர் ரியாக்டர்களின் மூலம் பத்தில் ஒரு பகுதி மின்சாரம்
உற்பத்தியாகிறது. யுரேனியத்தை அடிப்படையாக கொண்டு அணு உலைகளில் உற்பத்தி செய்யும் மின்சாரம்
தூய்மையானது.
ஆனால், பழைய
ரியாக்டர்களை எப்படி தூக்கி எறிவது என்ன செய்வது என்பது பிரச்னையாக உள்ளது. அணுக்கழிவுகளில்
கதிர்வீச்சு அபாயம் உண்டு என்பதால் இதனால் பாதிக்கப்படும் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
யுரேனியத்தை சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுப்பது, அதைப் பயன்படுத்துவது சூழலுக்கு
பேரளவு அபாயமாக உள்ளது. எனவே, நிறைய நாடுகள் அணு உலைகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு
வருகின்றன.
அணு உலையைக்
கட்டினால் அதை பதினைந்து ஆண்டுகள் பயன்படுத்தலாம். பிறகு அதைப் பயன்படுத்த முடியாது.
உருவாக்குவதற்கும், பிறகு கைவிட்டால் அதை பாதுகாப்பதற்கும் அரசுக்கு பல்லாயிரம் கோடி
செலவாகிறது. இப்படி செலவாகும் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஐஸ்லாந்து,
கென்யா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மின்சார உற்பத்திக்கு புதுவித வழியைக்
கையாள்கிறார்கள். இங்கு குளிர்ந்த நீரை பூமிக்கு அடியில் உள்ள வெப்பமான பாறைகளின் மீது
செலுத்துகிறார்கள் . சூடாகும் நீரை எடுத்து டர்பைன்களை சுற்றவைத்து மின்சாரம் தயாரிக்கிறார்கள்.
ஐஸ்லாந்து தனது மின்சாரத் தேவையில் 27 சதவீதத்தை இப்படித்தான் பெறுகிறது.
இதற்கான இடங்கள்
குறைவாக இருப்பது, செலவு அதிகம், இந்த செயல்முறையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அதிக
வாய்ப்பு ஆகியவை பலவீனங்களாக உள்ளன.
காற்றாலைகளை
நிறுவி மின்சாரம் தயாரிப்பது புதுமையானது என்று
கூற முடியாது. நூறாண்டுகளாக இச்செயல்பாடு நடைமுறையில் உள்ளது. முதலில் காற்றின் சக்தியைப்
பயன்படுத்தி கிணற்றில் இருந்து நீர் எடுப்பது, மாவு அரைப்பது ஆகியவற்றை செய்தவர்கள்
பின்னாளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மாறினர்.
நிலம், நீர் என இரண்டு இடங்களிலும் மின்சாரத்தை உற்பத்தி
செய்வது பற்றி ஆய்வுகள் செய்து ஏராளமான காற்றாலைகளை நிறுவி வருகிறார்கள். 152 மீட்டர்,
324 மீட்டர், 260 மீட்டர், 190 மீட்டர் என பல்வேறு அளவுகளில் காற்றாலைகளை நிலத்திலும்
நீரிலும் நிறுவி வருகின்றனர்.
சிம்ப்ளி
கிளைமேட் சேஞ்ச்
டிகே புக்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக