இடுகைகள்

மன்மோகன்சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!

படம்
                  1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30 நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன . 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை . உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது . அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் . உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள் .    இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது . ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை . நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை . ஆனாலும் சந்தையை விரிவாக்கியதில் இந்தியா முக்கியமான சாதனையை செய்துள்ளது

சாதனைகளை செய்தும் கூட அனைத்து புகழையும் விட்டுக்கொடுத்த பிரதமரின் துயரக்கதை! - தற்செயல் பிரதமர் - சஞ்சயா பாரு

படம்
          தற்செயல் பிரதமர் சஞ்சயா பாரு தமிழில் பி . ஆர் . மகாதேவன் கிழக்கு 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பற்றியும் அதில் பிரதமரான பதவி வகித்த மன்மோகன் சிங் பற்றியும் நூல் விலாவரியாக உண்மைகளைப் பேசுகிறது . பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் ஊடக ஆலோசகரான வணிகப் பத்திரிக்கை ஆசிரியரான சஞ்சயா பாரு , பணியில் சேர்கிறார் . அங்கு அவர் பார்த்த தனிப்பட்ட ஆளுமையான மன்மோகனும் , பிரதமராக இருந்த மன்மோகனும் எப்படி சூழலுக்கு ஏற்ப வெளிப்பட்டார்கள் என்பதை பெரியளவு சமரசப்படாமல் நூலாக எழுதியுள்ளார் . அடிப்படையில் இந்த நூலை யார் படித்தாலும் அவர்களது மனம் காங்கிரஸ் கட்சி , சோனியா காந்தி ஆகிய இரண்டுபேரையும் விரோதமாகவே எண்ணும் . அந்தளவு பல்வேறு அதிகார மையங்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உழைப்புக்கான பலன்களுக்கான பெயர் கிடைக்காமல் அவமானப்படு்த்தப்பட்ட பொருளாதார நிபுணரின் கதை இது . இந்த நூலைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கை பலம் , பலவீனத்தை சரியாக எடை போட்டு அணுகுகிறது . கொடுத்த வேலையை சிறப்பாக செய்யும் தன்மை கொண்ட ப

காங்கிரஸ் கட்சி அரசு ஆளும் மாநிலங்களில் கோவிட் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் - சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்

படம்
            சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் செயல்பாடு தற்போது எப்படியுள்ளது . உங்களது மருமகன் கூட கோவிட் பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டுள்ளார் அல்லவா ? ராகுலின் செயல்பாடு மேம்பட்டுள்ளது . டாக்டர் மன்மோகன் உட்பட பலரும் பாதிக்கப்பட்டது எனக்கு கவலை அளித்தது உண்மைதான் . மக்கள் இந்நோயினை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் . மோசமான காலகட்டத்தை நாம் இம்முறையில்தான் கடக்க முடியும் . மத்திய அரசு நோய்தடுப்பிற்காக காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகளை கேட்டால் அதனை ஏற்பீர்களா ? நிச்சயமாக . எனது பதில் ஆமாம் என்றுதான் இருக்கும் . அந்த காரணத்தினால்தான் நாங்கள் பிரதமருக்கு கோவிட் பிரச்னையை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்தோம் . காங்கிரஸ் கட்சி பேரிடர் மேலாண்மை தொடர்பாக பல்லாண்டுகள் அனுபவம் கொண்டது . இப்போதுள்ள நிலையில் அரசுக்கு நீங்கள் கூறவேண்டிய அறிவுறுத்தல்கள் என்ன ? இந்தியா தினசரி 7500 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருகிறது . ஆனால் இன்று தன்னுடைய மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை தரமுடியவில்லை . எங

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார் . அதற்க