சூழலியல் மாறினால்,மக்களின் தினசரி வாழ்க்கையும் மாறி மேம்பாடு அடையும் - இம்மானுவேல் மாக்ரன்,அதிபர் பிரான்ஸ்
காலநிலை மாற்றம் - தேவைப்படும் செயல்பாடுகள் என்னென்ன? காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா சபை மாநாடு நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 195 உலக நாடுகள், மாநாட்டில் பங்கேற்று வெப்பநிலை இரண்டு டிகிரிக்கு அதிகமாக செல்லாமல் தடுப்பதாக உறுதிகூறின.அப்படி உயர்ந்தாலும் ஒன்றரை டிகிரி செல்சியஸ் அளவுதான் அதிகபட்ச அளவு. பிரான்ஸ் நாடு, இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து செயல்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு நாம் எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி வந்துள்ளோம் என்பதைப் பெருமையாக பார்க்க முடிகிறது. தொண்ணூறுகளோடு ஒப்பிடும்போது, நாங்கள் முப்பது சதவீத பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்துள்ளோம். இதில், 2014-25 காலகட்டத்தில் இருபது சதவீத அளவு என்பதும் உள்ளடங்கும். 2017ஆம் ஆண்டுக்கு முன்னர், பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்பாடு ஒரு சதவீதம் என்றுதான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு வரையில், அரசு எடுத்து முயற்சி காரணமாக அந்த அளவு இரண்டு சதவீதமாக அதிகரித்துள்ளது. 22-25 ஆண்டு காலத்தில் பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவது நான்கு சதவீதமாக கூடியுள்ளது. இது தோராய அளவுதான். நம...