இடுகைகள்

வெளியீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல்களைத் திருத்தி செம்மையாக்க ஆசிரியர் தேவையில்லை - எடிடிரிக்ஸ் ஏஐ போதும்!

படம்
          நூல்களை செம்மையாக்க எடிடிரிக்ஸ் ஏஐ போதும்! ஓராண்டு செயற்கை நுண்ணறிவு புரோகிராமுக்கு உழைத்து கடந்த மே மாதம் 2024 அன்று தனது கண்டுபிடிப்பை எழுத்தாளர், ஆசிரியர் மேரு கோகலே வெளியிட்டிருக்கிறார். இவர், பெங்குவின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் நூல்களை செம்மையாக்கம் செய்யும் பதிப்பக ஆசிரியராக பணிபுரிந்தவர். பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகள், நூல்கள் என அனைத்துமே நாளிதழ் அல்லது பதிப்பு நிறுவன ஆசிரியரால் பல்வேறு முறை திருத்தி எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியாகின்றன. இதில், திருத்தங்களை செய்யும் நூல் மேம்பட உழைக்கும் ஆசிரியர்கள் பெயர் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பெயர்களை வெளியிடுகிறார்கள். தமிழில், அதுபோன்ற நடைமுறை குறைவு. உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர வழங்கமாட்டார்கள்.  எடிடிரிக்ஸ் என்ற ஏஐ மூலம் எழுத்தாளர் ஒருவர், நூல்களை எளிதாக திருத்தி, பிழைகளை நீக்கிக்கொள்ள முடியும். உலகம் முழுவதுமே தொண்ணூறு சதவீத எழுத்தாளர்களுக்கு, அவர்களின் நூல்களை செம்மைப்படுத்தி திருத்தி தரும் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. அந்தக்கு...

பேராசை பூதம் - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 பாகம் 1 - மின்னூல் வெளியீடு

படம்
  அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய அம்சங்களை திரு. இரா.முருகானந்தம் தமிழாக்கம் செய்ய அறிவுறுத்தினார். பங்குச்சந்தை, முதலீட்டு நிதி  என்பதெல்லாம் நான் இதுவரை செய்யாத விஷயங்கள். ஆனாலும் முருகு அவர்களின் நம்பிக்கை என்னை எழுத வைத்தது. அப்படித்தான் ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆங்கில அறிக்கையின் ஒருபகுதி நூலாகி இருக்கிறது.  அதானி குழுமத்தின் மோசடிகளில் ஒருபகுதிதான் இந்த நூல். மொத்தம் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றில் நீங்கள் அதானி குழுமம் எப்படி இயங்குகிறது, நிதி பரிவர்த்தனை முறை, மோசடியாளர்களின் கூட்டு, மோசடி முறை, வெளிநாட்டு மோசடி நிறுவனங்கள் எங்கெங்கு உள்ளன, அதற்கான ஆதாரங்கள் என அனைத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.  ஒரு நிறுவனம் வளர்கிறது, உச்சமான சொத்து மதிப்பு பெறுகிறது, உலகளவில் தொழிலதிபர் வணிக இதழ்களின் பெருமைக்குரிய பட்டியல்களில் இடம்பெறுகிறார். இதெல்லாம் சாதாரண மக்களுக்கு எள் அளவு கூட பயனில்லாத செய்தி. ஆனால் அந்த தொழிலதிபர், பங்கு விலையை செயற்கையாக உயர்த்தி பொதுத்துறை வங்கிகளில் கடன்களைப் பெறுகிறார். அதை வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார். இதனால் நிறுவ...

தேதியிடா குறிப்புகள் எக்ஸ்டென்ஷன் 2 - சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - விரைவில் கூகுள் பிளே புக்ஸ் தளத்தில்....

படம்