இடுகைகள்

காதல் விகடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அள்ளிக் கொஞ்சேன் எனது காதலை....

படம்
  பேசணும்போல இருக்கு என்று உன் முதல் செய்தி வந்தது. அழைப்பதற்குள் அடுத்த செய்தி ஆனால் கூப்பிடாதே என்று. இரண்டு செய்திகளுக்கும் இடையிலான உன் தயக்கம் சற்றே தாமதமாக வந்தடைந்தது என் விரல்களுக்கு -முகுந்த் நாகராஜன்   கல்லூரிக்கு நீ பிரயாணிக்கும் அரசுப் பேருந்து நீ ஏறியவுடன் அரசிப் பேருந்தாகிறது -சண்பகீ.ஆனந்த்   எனது காதலை ஒரு குழந்தையாகவோ, பொம்மையாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாய்   எனது ஆன்மாவை முட்டை கேக்காகவோ, சாக்லெட்டாகவோ மாற்றத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் உனக்குப் பிடித்திருந்தால் சாப்பிடுவாய் இல்லையெனில் குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம். -ஜானகிராமன் படம் - பிக்ஸாபே  காப்புரிமை - ஆனந்தவிகடன்

நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!

படம்
  காதல் விகடன் கவிதைகள்   உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள் ஒரு கடிதம் இடேன்   யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் கைதட்டி அழைத்தபோது திரும்பிய உன்னை யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை -ஜா.பிராங்க்ளின் குமார் ஒரு சில முத்தங்களிலேயே உதறி விலகினாய் நாணமா என்றேன் நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய். அடிகள்ளி நாளைய முத்தங்களை இன்றுவரையா வைத்திருப்பேன்? -மா.காளிதாஸ் திருக்கல்யாணம் வண்டி கட்டி வந்து குவிகிறது ஊர் மொத்தமும் நம் திருமணத்திற்கு தேர் கட்டி வந்து குவிவார்கள் கடவுள் மொத்தமும் -பொன்.ரவீந்திரன் உன் விழி வில்லால் உயிர் உடைந்திட்ட ராமன் நான்   -ப்ரியன் கனிவானதொரு சொல்லோ நேசம் துளிர்க்குமொரு பார்வையோ சில்லறையற்ற பொழுதில் நீயெடுக்கும் பயணச்சீட்டோ போதுமானதாயிருக்கிறது உன்னை நேசிக்க -யாழினி முனுசாமி உப்பைக் கொட்டியவர்கள் கூட அள்ளிக்கொண்டு போகிறார்கள் ஆனால் நீயோ உன் உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே -தபூ சங்கர் நீ நடந்த தடங்களின் அடியில்தான் கிடக்கிறது நம்