இடுகைகள்

எறும்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூச்சி, தேனீக்களை வைத்தே கொலைவழக்கில் துப்புதுலக்கும் பூச்சி வல்லுநர்! - இன்செக்ட் டிடெக்டிவ் 1

படம்
    இன்செக்ட் டிடெக்டிவ் சீன தொடர் யூட்யூப் ஓவியத்தை அடிப்படையாக கொலை வழக்குகளை பார்த்தோம் அல்லவா.. அதேபோல, இந்த தொடர் பூச்சிகளை, புழுக்களை, எறும்புகளை அடிப்படையாக கொண்டது. நாயகனுக்கு மோசமான இறந்தகாலம் உள்ளது. அப்பா கார் விபத்தில் இறந்துபோகிறார். அம்மா, வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறார். பாட்டிதான் நாயகன் ஜின்டிங்கை வளர்க்கிறார். மாமா சூ, ஆதரவாக இருக்கிறார். உண்மையில் வங்கி நடத்திய அப்பாவின் விபத்துக்கு யார் காரணம், அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது எப்படி என்பதற்கான காரண காரியங்களை தொடர் தேடுகிறது. முதல் எபிசோடில், ராட்டினம் ஒன்றில் மாணவர் நாக்கை கடித்தபடி வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறார். அங்கு சென்ற காதலர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இறந்தவர் ஸ்மார்ட் வாட்ச் வழியாக நண்பர்கள் சிலருக்கு போன் செய்திருக்கிறார். அதில் ஒருவர்தான் பூச்சிகளை ஆராய்ச்சி செய்யும் நாயகன் ஜின். இன்ஸ்டிடியூட்டில் பிஹெச்டி படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஜின் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. விசாரிக்க போகும்போது அறையை மூடி தேனீக்களைப் பற்றிய ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கிற...

போன்சாய் மரங்களின் இயல்பு, வாசனை உணர்த்துவது என்ன? - வினோத ரச மஞ்சரி

படம்
போன்சாய் மரங்கள், சிறு தொட்டியில் வளர்க்கும்படியானவை. இவற்றை சாதாரணமாக வளர்த்தால் பெரிய மரமாகும் வாய்ப்புண்டு. ஆனால் அதன் வளர்ச்சியை சிறு தொட்டியில் கட்டுப்படுத்துகின்றனர். போன்சாயின் வேர்கள், தொட்டிக்குள் குறிப்பிட்ட அளவு வளர்கின்றன. அவற்றின் தண்டு, கிளை ஆகியவையும் பெரிய மரங்களைப் போன்ற தன்மையில் மினியேச்சர் வடிவில் உள்ளன.  வாசனைகளை முகர்ந்ததும் அது இனிமையானதா, ஆபத்தானதா என்று நாம் யோசிப்பது நமக்கு கிடைத்த முந்தைய அனுபவங்களை வைத்துத்தான். சமையல் எரிவாயு கசியும்போது, நாம் முகரும் வாசனை மோசமானது அல்ல. ஆனால் அதை ஆபத்தானது என உடனே உணர்கிறோம்.  நாம் முகரும் வாசனை மிகவும் திடமாக இருந்தால், அதனை ஆபத்தோடு இணைத்து பார்த்து எச்சரிக்கையாவது மனித இயல்பு.  எறும்புகளுக்கு நுரையீரல் இல்லை. எறும்புகள் மட்டுமல்ல பல்வேறு பூச்சிகளும் தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் சுவாசிக்கின்றன. இதன் பெயர், ஸ்பைராகில்ஸ் (spiracles).  மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடும்போது, நமக்கு மயக்கம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு முன்னதாக பார்வை மங்குவது, குமட்டல், வியர்ப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படும். மன அழு...