இடுகைகள்

முகாபே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராபர்ட் முகாபே - ஜனநாயகவாதியின் தவறுகள்!

ஜிம்பாவே நாட்டின் முன்னால் அதிபர் ராபர்ட் முகாபே 95 வயதில் காலமாகியுள்ளார். 37 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர், மக்களில் வாழ்விலும் கொடுமையான ஆட்சியின் அடிச்சுவட்டை பதித்துச் சென்றிருக்கிறார்.  2017 ஆம் ஆண்டு கலகம் தொடங்கியது. இதனால் பதவியிழந்து சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்துபோயிருக்கிறார். இவரை விடுதலையின் அடையாளம் என்று அதிபர் எமர்சன் நங்காவா கூறியுள்ளார். பலரும் முகாபேயை சர்வாதிகார அதிபராகவும், நாட்டை நசித்த தலைவராகவும்தான் அடையாளம் காண்கிறார்கள். புதிய அலை எழுந்து அல்ஜீரியா முதல் சூடான் வரை முகாபே போன்ற தலைவர்களை பதவியிழக்கச் செய்த து சுவாரசியமான ஆய்வாகவே இருக்கும். ஜிம்பாவே ஆப்பிரிக்கன் தேசிய யூனியன் எனும் கட்சியை தலைமை தாங்கியவர் முகாபே. செய்த போராட்டத்தால், பத்தாண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த தண்டனை முடிந்தபோது மக்கள் அவரை நாயகனாகவே நினைத்து பேசினர். புகழ்ந்தனர். 1980 ஆம் ஆண்டு புத்திசாலி நாயகனாக இவரையே தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆட்சிக்கு வந்ததும் முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. முகாபே , கருப்பினத்தவர்களுக்கான கல்வி, மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். திட்டங்