இடுகைகள்

ராமாமிர்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவெனும் பாற்கடலை தோண்டியபோது...- பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்

படம்
            பாற்கடல் லா.ச.ராமாமிர்தம் மதுரை புராஜெக்ட் ப. 284 இந்த நூல் இலக்கியம் சார்ந்த தன்மை கொண்டதல்ல என பலரும் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது. படிக்கும்போது கூட வாசகருக்கு அப்படி தோன்றலாம். ராமாமிர்தத்தின் சுயசரிதை என்று தாராளமாக சொல்லலாம்.  நூலில் ராமாமிர்தத்தின் குடும்ப உறுப்பினர்களின் வினோதமான குணங்கள் பற்றி பகடியாக எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த குடும்பத்திற்கு இந்தளவு கஷ்டமாக எனும்படி நெகிழ்ச்சியாக உள்ளது.  இதில் நினைத்துப் பார்க்கவே ஆச்சரியம் தரும்படி லா.ச.ராவின் அம்மா பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. நூலைப் படித்து முடிந்தாலும் கூட அம்மா பற்றி குணம், காட்சி வர்ணனைகள் மனதை விட்டு நீங்கவில்லை. எழுத்துகளில் அதிக விவரிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவரின் குணத்தை தராசில் இட்டு நிறுப்பது போல கூறும் இடம். உணவு பற்றி எழுதும் இடங்களில் எழுத்து வசீகரம் கொள்கிறது. இது வாசிப்பவரகளுக்கு நேரும் மாயமா, எழுத்தாளருக்கு பிடித்த விஷயம் என்பதால் தனித்துவமாக அந்த பத்தி தெரிகிறதா என்று அறியமுடியவில்லை. எதுவானாலும் வாசிக்க நன்றாக இருக்கிறது. அம்மன் கோவிலிலுள்ள ஈட்டியில் செருகி வைக்கப்