இடுகைகள்

மருத்துவம்-செவித்திறன் கருவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காது கேட்க புதிய கருவி!

காது கேட்கும் ! ஜெர்மனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதியவகை காதுகேட்கும் கருவியை (Cohlear Implant) கண்டுபிடித்துளளனர் . கேட்கும் திறன் பாதிக்கப்பட்டவரின் காதில் பொருத்தினால் ஒலியை மின் சிக்னல்களாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது . இது கேட்கும் திறனை வழங்காது ; ஆனால் ஒலியின் தன்மையை உணரும் ஆற்றலை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குகிறது . புதிய செவித்திறன் கருவி இன்னும் மேம்பாடு தேவைப்படும் கருவி . மங்கோலிய கெர்பில் என்ற பிராணியை இதுதொடர்பான ஆய்வுக்கு பயன்படுத்தி தற்போதைய செவித்திறன் கருவிகளைவிட புதிய கருவி சிறந்ததாக உள்ளது என்ற உண்மையைக் கண்டறிந்துள்ளனர் ." புதிய கருவி இயல்பான செவித்திறனுக்கு நிகரானது " என்கிறார் கொட்டிங்கென் மருத்துவ மையத்தின் பேராசிரியரான டோபியாஸ் மோசர் . மின்சாரம் மற்றும் ஒளியை மேற்கண்ட ஆய்வுகளில் சோதித்துவருவதால் விரைவில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான காது கேட்கும் கருவி கிடைக்கலாம் .