இடுகைகள்

கத்தரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணுமாற்று செடிகளுக்கான ஆய்வு விரைவில் தொடங்கவிருக்கின்றன! ஏன்? எப்படி?எதற்கு ?

படம்
            வேகமெடுக்கும் மரபணுமாற்று ஆய்வுகள் ! விரைவில் மரபணுமாற்று காய்கறிகளுக்கான கள ஆய்வுகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கின்றன . மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பீஜ் ஷீட்டல் ஆராய்ச்சி நிறுவனம் ஜனக் , பிஎஸ்எஸ் 793 என்ற இரு மரபணுமாற்ற கத்தரி விதைகளை சோதித்துப் பார்க்க அனுமதி கோரியிருந்தது . இக்கோரிக்கையை ஆராய்ந்த மரபணுமாற்ற கமிட்டி (GEAC), அனுமதி வழங்கிவிட்டது . விரைவில் தமிழ்நாடு , பீகார் , ஒடிஷா , மேற்குவங்கம் , கர்நாடகம் , மத்தியப்பிரதேசம் , ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மரபணுமாற்ற ஆராய்ச்சி நிறுவனம் சோதனைகளைத் தொடங்கவுள்ளது . இந்திய விதைகள் ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் ராம் கௌன்டின்யா , அரசின் முடிவை வரவேற்றுள்ளார் . ’' இந்திய விவசாய அமைப்பு , மரபணுமாற்ற தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது . இந்திய நிறுவனமான பீஜ் ஷீட்டல் நிறுவனம் சோதனைகளை நடத்துவதற்கான முயற்சிகளில் உள்ளது . சுயசார்பு இந்தியாவுக்கு பொருத்தமான முடிவு '’ என உற்சாகமாக பேசினார் ராம் கௌன்டின்யா . மத்திய அரசு முடிவு செய்தாலும் மாநில அரசுகள் மரபணுமாற்ற பயிர் சோதனைகளுக்கு ஆட்சேபம் தெரிவ