இடுகைகள்

ஹூவாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானியங்கி முறையில் இயங்கும் கார்கள், அவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்!

படம்
  என்ஓஏ, என்ஏடி, என்சிஏ, ஏசிடிஎம் என்ற சொற்களை கேட்டால் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? இதெல்லாம் கார் தயாரிப்புத் துறையில் பயன்படுகிற சொற்கள். இப்போது டிரெண்டிங்கில் இருப்பது தானியங்கியாக இயங்கும் கார்கள்தான். அப்படி இயங்குகிற கார் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி சொற்களை கண்டுபிடித்து வைத்து குழப்புகின்றன. உண்மையில் கார்களின் தானியங்கி இயக்க முறை என்பது ஒரே முறைதான். ஆனால் வெவ்வேறு பெயர்களில் தொழில்நுட்பத்தை பயனர்களுக்கு காட்டி மயக்க முயல்கின்றன.  லீ ஆட்டோவின் தொழில்நுட்பம் என்ஓஏ எனவும், ஹூவாய் என்சிஏ - நேவிகேஷன் க்ரூஸ் அசிஸ்ட் எனவும், டெஸ்லா - எஃப்எஸ்டி, எக்ஸ்பெங் நிறுவனம், எக்என்ஜிபி எனவும் பல்வேறு எழுத்துகளை இணைத்து புதுமையான பெயர்களை வைத்து வருகின்றன. இந்த கார் நிறுவனங்கள் லேசர், கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி தானியங்கி கார் சோதனைகளை செய்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துவது ஒரே தொழில்நுட்ப கருவிகள்தான். ஆனால் பெயர்களை மாற்றி வைத்து மக்களை ஏமாற்றி குழப்புகின்றன. இப்படி பயன்படுத்தும் கருவிகளுக்கு குறிப்பிட்ட தரம் இருக்கிறதா என்பதே கேள்விதான்.  பெரும்பாலான இதுபோன்ற சொல் வ

சிப் தயாரிப்பில் நுழையும் நிலப்பரப்பு ரீதியான அரசியல்!

படம்
சிப் தயாரிப்பு  சிப்களின் தயாரிப்பு முறை கணினி மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் பயன்படும் சிப்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வருகின்றன.  முன்பு கணினிகளுக்கு பயன்பட்டு வந்த சிப்கள் இன்று கார், டிவி, சலவை இயந்திரம், ஸ்மார்ட்போன் என பல்வேறு சாதனங்களிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கு ஏற்ப செயல்பட முடியாமல் தடுமாறின. இதன் காரணமாக, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் உற்பத்தி தேங்கத் தொடங்கியது. இதற்கு சிப் தயாரிப்பில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என சிலரும், சிப் தயாரிப்பு நிறுவனங்கள்  சந்தையில் குறைவாக இருப்பதால்தான் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுகிறது என விமர்சனங்கள் கிளம்பின.  உலகளவில் சிப் தொழிற்துறை  40 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக உள்ளது. இன்று  நாம் பயன்படுத்தும் ஆன்லைன் வங்கிச்சேவை, மின்னஞ்சல் என பல்வேறு சேவைகளின் பின்புலத்திலும் சிப்கள் உள்ளன. 1959ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த முகமது அடாலா மற்றும் டாவோன் காங் ஆகிய இருவர், அடிப்படை கணித செயல்பாடுகளுக்காக சிப்பை உருவாக்கினார்.  புரோச