இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தக கடை உரிமையாளரைக்கொன்ற கொலையாளி - 11 ஆண்டுகள் போராடி பிடித்த காவல்துறை!

படம்
  உணமையான சமத்துவமான நீதி என்பது உலகில் எங்குமே இல்லை. ஏனெனில் மனிதர்களிடையே சாதி, மதம், இனம், அந்தஸ்து, செல்வாக்கு, சமூக அடுக்கு என்ற வகையில் ஏராளமான பாகுபாடுகள் உள்ளன . அரசியலமைப்பு அடிப்படையில் சாமானியர் ஒருவருக்கு நீதி கிடைக்கும் இடம நீதிமன்றம், ஆனால் அங்குள்ள நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்கள், மனதிலுள்ள முன்முடிவுகளும் கருத்துகளும் கூட தீர்ப்பில் வெளிப்படுகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே பார்த்து தேவையான சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி தண்டனை வழங்குவது சரியானது. பெரும்பாலான நேரங்களில் அரசியல் அழுத்தங்கள், இறந்துபோனவரின் குடும்ப செல்வாக்கு, பணபலம், ஏழையின் நிர்க்கதியான பலவீன நிலை கூட தீர்ப்பை மாற்ற வைக்கிறது. இப்போது இங்கே நீங்கள் வாசிக்கப்போகும் குற்றச்சம்பவம் கூட அத்தகையதுதான்.  ஒரு புத்தக்கடையை வயதான பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. அவர் வழியாக பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள். வயதான பெண்ணுக்கு புத்தகடை மேல் தனிப்பிரியம் உண்டு. இவர் ஒருநாள் கடையில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். அதே கடையில்தான் அவரின்

ரிடர்ன் டு மவுண்ட்குவா செக்ட் - முற்பிறப்பில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு தீயசக்தியை வேட்டையாட வரும் முன்கோபக்கார வாள் வீரன்!

படம்
  ரிடர்ன் டு மவுண்ட்குவா செக்ட் காமிக்ஸ் ரீட்மாங்கா.காம் மவுண்ட்குவா செக்ட்டைச் சேர்ந்த பிளம் பிளாசம் வாள் துறவியின் மறுபிறப்பு பிச்சைக்காரனாக நடக்கிறது. சுயிங் மியுங் என்ற பெயரில் பிச்சைகாரர்கள் இனத்தில் பிறப்பவன் அவனது முற்பிறப்பு நினைவுகளால் வழிநடத்தப்படுகிறான். அதன் வழியாக சென்று முந்தைய தவறுகளை சரி செய்கிறான். அவனது இனக்குழுவை மேம்படுத்த முயல்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  பிளாசம் பிளம் பிச்சைக்காரனாக தனது வாழ்க்கையை தொடங்குகிறான். ஆனால் அதற்கு முன்னர் அவனது வாழ்க்கை மவுண்ட் குவா செக்டில் சிறந்த வாள் வீரன்தான். ஆனால் டீமன் செக்ட் தலைவனால் மொத்த இனக்குழுவுமே வீழ்த்தப்படுகிறது. ஒற்றைக் கை இழந்த நிலையில் பிளம் பிளாசம் எழுந்து பிணங்களின் மேல் கத்திக்குத்து பட்டு குற்றுயிராக உள்ள டீமன் செக்ட் தலைவன் சுன்மாவின் தலையை வெட்டி எறிகிறான். பிறகு அப்படியே நினைவிழந்து இறந்து விழுகிறான். தான் சிறந்த வாள் வீரனாக இல்லாத காரணத்தால் டீமன் செக்டால் வீழ்த்தப்பட்ட குற்றவுணர்ச்சி இறக்கும் முன்னர் அவனை சித்திரவதை செய்கிறது. இதன்பிறகுதான் அவனது ஆன்மா, பிச்சைக்கார சிறுவனின் உடலுக்கு செல்கிறது

2023 - மனிதர்கள் - சம்பவங்கள் - கார்டியன் நாளிதழ்

படம்
  2023 - மனிதர்கள், சம்பவங்கள்  பிரேம் குப்தா, தனது மகளை வழக்கம் போல திருமணம் செய்துகொடுத்தார். மருமகன் வழக்கம்போல, காசுக்கு ஆசைப்பட்டு மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்த தொடங்கினார். மகள் இதைப்பற்றி அவளது அப்பாவிடம் கூறினாள். பிரேம் குப்தா என்ன முடிவெடுத்திருப்பார். பெரும்பாலான இந்தியர்கள், அடித்தாலும் உதைத்தாலும் அனுசரித்துப் போ, குடு்ம்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்றுதான் கூறுவார்கள். பெண்களை பெரும்பாலான இந்தியப் பெற்றோர் சுமையாகவே நினைக்கிறார்கள். ஆனால், பிரேம் குப்தா வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் இங்கு அவரைப் பற்றி பேச வைக்கிறது. மருமகனின் வீட்டுக்கு பேண்டு, மேளம், டிரம்பெட்டுடன் சென்று மகளை எப்படி கல்யாணம் செய்துகொடுக்கும்போது கொண்டாட்டமாக அனுப்பி வைத்தாரோ அதேபோல தாளமேளத்துடன் கூட்டி வந்துவிட்டார். உண்மையில் அவரை சுற்றி இருப்பவர்கள், திட்டியிருப்பார்கள். பணம் கொடுத்து மகளை வாழ வை என்று கூட கூறியிருப்பார்கள். ஆனால் பிரேம் குப்தா தனது மகளின் மனநிம்மதியை, பாதுகாப்பை முக்கியமாக நினைத்திருக்கிறார். வாயில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்றாலும் தனது மகளை கௌரவத்தோடு வா

சீரியல் கொலைகாரரான அப்பாவை போலீசில் பிடித்துக்கொடுத்த மகள்!

படம்
  அப்பா, தொடர் கொலைகாரர். தன்னை வெளி உலகில் நல்லவராக காட்டிக்கொண்டு கொலைகளை மறைவாக செய்துவருகிறார். இதை மகள் ஏப்ரல் மெதுவாகத்தான் சந்தேகம் வந்து விசாரணை செய்து கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட ஐந்துபேர் கொல்லப்பட்டு விடுகிறார்கள். ஆனாலும் நீதியுணர்வும், குற்றவுணர்ச்சியும் அவரை துன்புறுத்த தானாகவே சென்று காவல்துறையில் தந்தை எட்வர்ட்ஸ் பற்றி புகார் கொடுக்கிறார்.  காவல்துறையும் முப்பது ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது. ஆனால் துப்பு கிடைக்கவில்லை. ஏப்ரல் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் எட்வர்ட்ஸை பிடித்து விசாரித்தனர். அவர் ஐந்து கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் சிறையில் இறந்துவிட்டார்.  இந்த கொலை வழக்கை சற்று விரிவாக பார்ப்போம்.  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வாட்டர்டவுன் நகரம். அப்போது ஏப்ரலுக்கு ஏழு வயது இருக்கும். அவருக்குப் பிறகு நான்கு பிள்ளைகள் உண்டு. ஒருநாள் இரவில், அவரது அப்பா, சீக்கிரமாக கிளம்பவேண்டும் என ஏப்ரலை எழுப்புகிறார். கனசரக்கு வண்டி ஓட்டுநரான எட்வர்ட்ஸ், ஆண்டில் ஆ

பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

படம்
  பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ.... காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா? இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும்.  பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா? நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை மேம்படுத்தினால் செ

வட்டவடிவ பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி எதற்காக?

படம்
  பழமொழிகளை நாம் நிறைய இடங்களில் பயன்படுத்துவோம். நிறைய நம்பிக்கைகளை முன்னோர்கள் கூறினார்கள் என அப்படியே பின்பற்றுவோம். அதை ஏன் என கேள்வி கேட்டால்தானே அதன் பின்னணி தெரியும். அப்படி சில விஷயங்களை தேடிப்பார்த்த அனுபவம் இது.  தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது இப்படி கூறுவதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. பொதுவாக வாக்கிங் சென்றால் நல்லது என்ற நிலைக்கு நீரிழிவு நோய் வந்தவர்கள் வந்துவிட்டார்கள். எனவே பத்தாயிரம் அடி என்பது கூட இப்போது போதுமா என்று தெரியாத நிலை. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்த காலம். 1960ஆம் ஆண்டு, மான்போ கெய் என்ற கருவி விற்பனைக்கு வந்தது. இதை பத்தாயிரம் அடி மீட்டர் என்று அழைத்தனர். இக்கருவியை தயாரித்த யமாசா என்ற நிறுவனம் பத்தாயிரம் என்ற எண்ணைக் குறிக்கும் ஜப்பானிய எழுத்தைக் கவனித்தது. அது ஒரு மனிதர் நடப்பது போலவே இருந்ததால்,அதேயே விற்பனைப் பொருளுக்கு பயன்படுத்தியது.  உடல் ஒரே இடத்தில் இருந்தால் அது கெடுதலை உருவாக்கும், எனவே சிறிது நடங்கள், உட்காருங்கள். உடலை பல்வேறு வடிவங்களில் நிலைகளில் மாற்றி உட்கார்ந்து பாருங்கள். இதெல்லாமே உடலுக்கு ப

குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!

படம்
  இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும்.  அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது.  ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது

கடிதங்களை மேடையில் வாசிக்கும் பெருமை மிக்க நிகழ்ச்சி!

படம்
  கடிதங்களைப் படிப்போம் வாங்க! இங்கிலாந்தில் கடிதங்களைப் படிப்பதை பிரபலமான திரைப்பட, நாடக கலைஞர்கள் செய்கிறார்கள். இதை லெட்டர்ஸ் லைவ் என்ற நிகழ்ச்சியாக நடத்துகிறார்கள். இதில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் அதிகம். கடிதங்களை நீங்கள் எப்படி தயாரிப்பீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதுவதாக அல்லது பிறருக்கு எழுதியதை வைத்திருந்தால் கூட படிக்கலாம். யாரோ ஒருவருக்கு எழுத விரும்பியதைக் கூட எழுதி வந்து மேடையில் படிக்கலாம்.  இப்படி படிப்பதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. இங்கு வந்து கடிதங்களைப் படிக்க பெரிய முன்னேற்பாடுகள் எதையும் ஒருவர் செய்யவேண்டியதில்லை. கடிதங்களை எழுதிக்கொண்டு வந்து சத்தமாக படிக்க தெரிந்தால் போதும். ஆனால் இதற்கே பலரும் பதற்றப்படுகிறார்கள். ஏனெனில் திரைப்பட கலைஞர்களுக்கு இங்கு எப்படி முகத்தை உடலை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவதில்லை. எனவே, கடிதங்களை படிக்கும்போது ஏற்படு்ம் உணர்வுகளை ஒருவர் எளிதாக பிறருக்கு கடத்த முடியும். சுற்றியிருக்கும் பார்வையாளர்களும் கடிதத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை கவனித்துக் கேட்கிறார்கள்.  நீங்கள் கடிதங்களை படிக்கும்போது, இன்

2023 ஆம் ஆண்டில் சிறந்த கிராபிக் நாவல்கள், அரசியல் நூல்கள்! - கார்டியன் நாளிதழ் பரிந்துரை

படம்
  2023 - கிராபிக் நாவல்கள்  ஒய் டோண்ட் யூ லவ் மீ - பால் பி ரெய்னி கார்ட்டூனிஸ்ட் தனது கதையை நகைச்சுவையைப் பயன்படுத்தி கூறுகிறார். வேலையில் தடுமாற்றம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெற்றோரின் பிரச்னைகள், நூலில் பேசப்பட்டுள்ளன. நூலின் சம்பவங்கள், உணர்ச்சிகள் சிறப்பாக கைகூடி வந்திருக்கின்றன.  மோனிகா - டேனியல் குளோவ் இந்த ஆண்டில் வாசகர்கள் காத்துக்கிடந்து வெளியான படைப்பு. நூலில் நிறைய தத்துவங்கள், கோட்பாடுகள், நிரூபிக்கப்படாத கருத்துகள் பேசப்படுகின்றன. ஒரு இளம்பெண், தனது தாயைத்தேடுவதுதான் கதை. மூத்த கார்ட்டூனிஸ்டான ஆசிரியரின் படங்கள் அருமையாக வந்துள்ளன. கதையும் படிக்க சுவாரசியமாக உள்ளது.  தி டாக் - டாரின் பெல் இது ஒரு சுயசரிதை. ஆப்பிரிக்க அமெரிக்கரான டாரின் பெல், தன்னுடைய இனம் சார்ந்த சிக்கலுக்காகவே பள்ளி கல்லூரிகளில் கேலி, கிண்டல், சித்திரவதைகளை அனுபவிக்கிறார். இதை நூல் விரிவாக விளக்குகிறது. நூலாசிரியர் புலிட்சர் பரிசு வென்றவர்.  தாமஸ் கிர்டின் - தி ஃபார்காட்டன் பெயின்டர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஓவியர் ஆஸ்கர் ஸராடேவின் நூல். கிர்டின் என்ற வாட்டர்கலர் ஓவியரைப் பற்றிய கதை.  பிளட் ஆஃப் தி

2015ஆம் ஆண்டு சூழல் ஒப்பந்தம் மீறப்பட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேரும்?.....

படம்
  2015ஆம் ஆண்டு பாரிஸ் சூழல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குப் பிறகு எட்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 1.5 டிகிரி செல்சியஸ் என வரையறை செய்துகொண்டு நாடுகள் முயற்சிகளை செய்தன. ஆனால், காலப்போக்கில் பெருநிறுவனங்கள் கார்பன் வெளியீடு பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வருமானம் எந்தளவு பெருகியுள்ளது. பங்குச்சந்தையில் பங்கு விலை அதிகரித்துள்ளது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அரசும் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.  திரைப்படத்தின் வருமானம் என்பதைவிட அதைப்பற்றிய கருத்தியல் ரீதியான விமர்சனமே முக்கியம். ஆனால் இன்று மோசமான படம் கூட வருமான சாதனை செய்கிறது. அதை வைத்தே படத்தின் கருத்து சரியில்லை என்று கூறுபவர்கள் மீது வழக்கு தொடங்குகிறார்கள். அவர்களின் பதிவுகளை நீக்க முயல்கிறார்கள். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தபிறகே, மாசுபாடு, கார்பன் வெளியீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தலைவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவருகிறார்கள். போராளிகளை சிறையில் அடைத்து வருகிறார்கள். 

பசுமைக் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் மத்தியதர வர்க்கத்தின் சுயநலம்! - குஸ்தாவோ பெட்ரோ, கொலம்பியா அதிபர்

படம்
  குஸ்தாவோ பெட்ரோ, அதிபர், கொலம்பியா உலகில் இன்று நடைபெறும் பெரும்பாலான மோசமான அரசின் செயல்பாடுகளுக்கு பின்னால் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உள்ளது. இவர்களால்தான் வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து பாசிச செயல்பாடுகளை முடுக்கிவிடுகின்றனர். பசுமைக் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். நிறைய அரசியல் கட்சிகள் இந்த கருத்தை வாக்கு வங்கி கருதி கூறமாட்டார்கள். ஆனால் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கை பற்றிய பயமே பசுமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார்.  2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று அதிபரானவர் பெட்ரோ. இவர் முன்னாள் கொரில்லாவாக செயல்பட்டவர். பிரேசில் அரசு, அமேசான் காட்டில் கச்சா எண்ணெய் எடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் சூழல் காக்கும் பணியில் அமேசான் காடுகள் முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன. அதன் முக்கியத்தை கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.  வசதியான சொகுசான உயர்தர வாழ்க்கை வாழும் மக்கள் கொண்ட நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா , சீனா ஆகியவை கார்பன் வெளியீட்டில் முன்னணி வகிக்கி

பதற்றக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறையை உருவாக்கிய பால் சால்கோவ்ஸ்கிஸ்!

படம்
  இருபதாம் நூற்றாண்டின் அரைபகுதியில் மருத்துவ உளவியலில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று, மனநல குறைபாடுகளுக்கு அதுவரை பயன்படுத்திய தெரபி முறைகளை மாற்றத் தொடங்கினர். 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலுள்ள பல்வேறு உளவியலாளர்கள் ஃப்ராய்டிய முறையை மாற்றி உளவியலாளர் ஆரோன் பெக் கண்டறிந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினர். பின்னாளில், காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி சிபிடி என்று அழைக்கப்பட்ட சிகிச்சை முறையை பால் சால்கோவ்கிஸ் என்பவர் கண்டறிந்தார்.  இதை ஆண்டுக்கு ஆண்டு உளவியலாளர்கள் மாற்றி மேம்படுத்தி வந்தனர். சிபிடியைப் பயன்படுத்தி அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டர் குறைபாட்டிற்கு சிகிச்சை செய்தனர். ஆனால் இப்படி ஒரு குறைபாடு தோன்றுவதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று தெரியாமல் தவித்தனர்.  எதிர்காலத்தில் அப்படி நடக்குமோ, இப்படி நடந்துவிடுமோ என்று மனதி்ல் எழுதும் கருத்துகள் வலிமையாகும்போது அப்செசிவ் குறைபாடு உருவாகிறது என பால் கண்டறிந்தார். இப்படியான மனக்கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இருக்காது. அவருக்கு ஏதாவது துக்கம் அல்லது நோய் வந்திருக்கும். ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில்

ஒருவரை மிரள வைக்கும் பயங்கள் நான்கு!

படம்
  ஒருவரின் பிள்ளை, அவரின் அப்பாவை இரண்டு விதமாக புகழ்பெறச்செய்யலாம். அவரை விட மோசம். அவரே பரவாயில்லைப்பா என இரண்டு விதமாக தனதுசெயல்களை அமைத்துக்கொள்ளலாம். நல்லவிதமாக இயங்கலாம். கெட்டவிதமாகவும் செயல்படலாம். இதெல்லாம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது? அவரின் மரபணுவா, அல்லது அவர் வளர்ந்த சூழ்நிலையா? இந்த விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. பரிணாம உளவியலில் இதைப்பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்தான், கனடாவைச் சேர்ந்த உளவியலாளர் ஸ்டீவன் பிங்கர். இவர் மனிதர்களுக்குள் உள்ள நான்கு பயங்களை சுட்டிக்காட்டினார். அதில் முதலாவதாக வருவது பாகுபாடு. ஒருவர் உலகில் குழந்தையாக பிறக்கும்போது அவர் மனது எழுதப்படாத சிலேட் பலகையாக உள்ளது. அனைவரும் ஒன்றானவர்களாக இருக்கிறார்கள். பிறகுதான் அவரின் குடும்பம், பணம், அரசியல் கருத்தியல் என வேறுபாடு தொடங்குகிறது.  இரண்டாவது, சீரற்ற தன்மை. அனைவரும் ஒன்று போலவே நகலெடுத்த சீனப்பொருட்கள் போல இருப்பதில்லை. பற்றாக்குறை, போதாமை கொண்டவர்களாக உள்ளனர். இப்படி உள்ளவர்கள் தங்களை மாற்றங்களுக்கு தயார்படுத்திக்கொள்வதில்லை. இவர்கள் அதிகாரத்தில் உள்ளபோது ச

ஒரே நேரத்தில் மூன்று இளம்பெண்களை காதலிக்கும் ரோமியோ!

படம்
  ரோமியோ மலையாளம்  திலீப்,விமலா ராமன், சம்யுக்தா,ஹனீபா சாதி,மதம் மாறி மூன்று பெண்களை காதலிக்கும் ரோமியோ ஒருவரின் கதை. உண்மையில் வதந்தி நாளிதழில் வரும் செய்தியைப் போன்றதல்ல. இங்கு நாயகன் மனு கிருஷ்ணன், தனது வேலை, அதில் வரும் சம்பளத்தையே நம்பியிருக்கிறார். அதில் பிரச்னை வரும்போது, பெயர் மாற்றி, சாதி மாற்றிக்கொண்டு ஓரிடம் செல்கிறார். அங்கு வாழும் ஒரு அய்யங்கார் பெண்,சுப்பிரமணி என்ற பெயருடைய நாயகனை விரும்பத் தொடங்குகிறாள். ஏன் என்றால் அதற்கென அவளுக்கென சில காரணங்கள் உள்ளன. அவளுக்கென பார்த்த மாப்பிள்ளை குடிநோயாளி. சுப்பிரமணிதான் அவனுடைய பெயரும் கூட.  நாயகன், அய்யங்கார் பெண்ணிடம் வாய்ப்பாட்டு கற்கவும் கூட முயல்கிறான். இப்படி சில விஷயங்கள் ஒற்றுமையாக இருக்க அந்தப்பெண் நாயகனை காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் நாயகன் அவளை காதலிப்பதில்லை..   அடுத்து, டிவி நிகழ்ச்சி பாடகியின் அப்பாவிடம், வாங்கிய காசை அடைப்பதற்காக பாடகியை மணக்க முடிவெடுக்கிறார் மனுகிருஷ்ணன். ஆனால் இந்த சமாச்சாரம் அந்தளவு எளிதாக இல்லை. பாடகியின் அப்பா, நாயகன் மனுவை மதம் மாறச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார். இதனால் மானுவேல் என பெயர் மாற

தன் தந்தையை துரோகத்தால் வீழ்த்தியவர்களை தேடிச்சென்று பழிவாங்கும் வடக்கு வாள்!

படம்
  லெஜண்ட் ஆஃப் நார்த்தர்ன் பிளேடு காமிக்ஸ்  ரீடுமங்காபேட்.காம் வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஜின் மோ வோன், என்பவன் நார்த் ஹெவன்லி செக்ட் என்ற சிறிய அரசின் ஒரே வாரிசு. அவரது அப்பா பேராசையற்ற ஆட்சியாளர். காலப்போக்கி்ல் அவருக்கு செல்வாக்கு பெருகியதால், அவர் மீது தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். இதனால் அவர் தனது மகனைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்.  அவர் இப்படி இறந்துபோக அவரது நான்கு நண்பர்களே முக்கிய காரணம். சென்ட்ரல் அலையன்ஸ், நைன் ஸ்கைஸ் என இரு அமைப்புகளிடம் பரிசுகள், பணம் பெற்று, ஜின்னின் அப்பாவுக்கு துரோகம் செய்கிறார்கள். நாட்டின் நூலகத்தில் உள்ள தற்காப்புக்கலை நூல்களை ஜின் படித்து வீரனாகிவிட்டால் என்னாகும் என அத்தனை நூல்களையும் எடுத்துசெல்கிறார்கள்.  ஜின்னின் அப்பா இறந்தபிறகு, நாட்டின் அரசு கலைக்கப்படுகிறது. சென்ட்ரல் அலையன்ஸ் சார்பாக கண்காணிப்பு மட்டும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, ஜின்னை அங்கு உள்ள காவலர்கள் அடித்து சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் அவன் அதை பொருட்படுத்தாமல் வாழ நினைக்கிறான்.  ஜின்னின் அப்பா, அவனுக்கு மட்டுமே குறிப்பிட்ட முன்னோர்களின் எழுத்து