பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

 







பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ....


காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா?


இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும். 

பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர்


காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா?


நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை மேம்படுத்தினால் செரிமானம் சீராகும். அதிலுள்ள பிரச்னைகள் தீரும். இவற்றை ஆய்வகத்தில் வளர்த்து ஆய்வு செய்யும்போக்கு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. நுண்ணுயிரிகளை ஆய்வுநோக்கில் பார்க்கும்போது, அவற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளமுடியும். தற்போதுள்ள தகவல்கள் மிக குறைவானவையே.


போனி வேரிங், கிரான்ட்ஹாம் இன்ஸ்டிடியூட்


அமேசான் அல்லது காங்கோ மழைக்காடுகளில் பன்மைத்துவம் உண்டா?


மழைக்காடுகளில் நூறு மீட்டரை ஆய்வு செய்தாலே அங்குள்ள தொன்மையான உயிரினங்களைப் பற்றி அறியலாம். விலங்குகள் எப்படி இரைதேடுகின்றன, பிற உயிரினங்களுடன் பழகுகின்றன என்பதை புரிந்துகொள்ளலாம். பன்மைத்துவ உயிர்ச்சூழலுக்கு விலங்குகளின் பங்கு என்ன, அவை எப்படி உலகை, பூமியை மாற்றி அமைக்கி்ன்றன என்பதை அறியலாம். 


யாட்விந்தர் மால்ஹி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்



விலங்குகளும், தாவரங்களும் ஒன்றுபோலவே பரிணாமவளர்ச்சி அடைகின்றனவா?


இரண்டும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை.இவற்றுக்கு இடையிலான ஒற்றுமை மிக குறைவுதான்.தாவரங்களும் விலங்குகளும் ஒன்றுபோவே பரிணாமவளர்ச்சியை எட்டும் என்பது போன்ற பொதுவிதிகள் ஏதும் இல்லை. இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் நிலை உள்ளது. அவ்வளவுதான்.


சாண்ட்ரா மிர்ணா டைஸ், கொலராடோ தேசிய பல்கலைக்கழகம்





கருத்துகள்