இடுகைகள்

மோப்பசக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காம்பியா நாட்டில் மலேரியாவைக் கண்டறிந்த நாய்!

படம்
  நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.அதனுடன் மனிதர்களை ஒப்பிடக்கூட முடியாது. அந்தளவு தொலைவில் வாசனையைக் கண்டறியும் மோப்ப சக்தியின் இடைவெளி உள்ளது. இரட்டையர்களாக பிறந்தாலும் கூட ஒருவரின் உடல்மணம் வேறுபட்டிருக்கும். நாயால் அதை உடனடியாக கண்டறிய முடியும். ஒருவர் வீட்டுக்கு வரும் வழியில் குப்தா பவனில் சாப்பிட்ட குலோப்ஜாமூன், நண்பரின் செல்ல பூனையைத் தூக்கி கொஞ்சியது. யார்லி சென்ட் மணக்கும் காதலியை கட்டி அணைத்தது, பூங்கொத்துகளை பாராட்டாக நண்பரிடம் பெற்றது என மோப்பம் பிடித்தே நாயால் அனைத்தையும் அறிய முடியும். நான் லீனியராக இருந்தாலும் உண்மையை அறிந்துவிட முடியும். போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள், கொலை தடயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய அதற்கென பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் உள்ள மனநிலையை, அவரது உடலில் சுரக்கும் வேதிப்பொருட்களை வாசனையை முகர்ந்தே நாயால் உணர முடியும். தற்போது, அறிவியலாளர்கள் நாயின் மோப்பம் பிடிக்கும் திறனை அடிப்படையாக கொண்டு வேபர் டிடெக்டர் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். இப்போதைக்கு அதன் செயல்திறன் நாயின் மோப்பத் திறனை விஞ்சும் அளவுக்கு இல்லை. ஆனால் எதிர்கா

களைத் தாவரங்களை கண்டறியும் நாயின் மோப்பசக்தி!

படம்
  அமெரிக்காவில் அரிசோனா தொடங்கி வியோமிங்   வரையில ‘டையர் வோட்’   என்ற ஆக்கிரமிப்பு தாவரம்   பரவி வருகிறது. முழங்கால் அளவு உயரத்தில் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டது. இந்த தாவரம் வேகமாக வளர்ந்து, புதிய செடிகளை உருவாக்குவதால் அங்கு வளர்ந்து வந்த மரபான செடிகள் அழிந்து மறைந்தன.   இதைக் கட்டுப்படுத்த அரசு முயன்றது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, செடியை துல்லியமாக கண்டறிய இரண்டு நாய்களை பயிற்றுவித்து பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, நாய்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது கடினமானது. ஏறத்தாழ ஆயிரம் நாய்களில் ஒன்றுதான் களைத் தாவரத்தை எளிதாக கண்டறியும் திறன்பெற்றதாக உள்ளது. மனிதர்கள் கவனிக்காமல் விட்ட தாவரத்தை நாய் தவறவிடுவதேயில்லை. ‘டையர் வோட்’ என்ற களைத் தாவரம் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது. இத்தாவரத்தை அகற்றும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. மனிதர்களால் கண்டறிய முடியாத விஷயங்களை நாய் மோப்பத்திறனால் கண்டுபிடித்து வருகிறது.வனவிலங்கு காட்சி சாலையில் உள்ள   நரிக்குட்டிகள், வெடிமருந்து, பண்ணை விலங்குகளை அழிக்கும் பாக்டீரியா, களைத்தாவரங்கள் என கூறிக்கொண்டே ச

ஆர்க்டிக் பகுதியில் வாழும் பனிக்கரடி உறையாமல் இருப்பது எப்படி?

படம்
                பனிக்கரடிகளின் சிறப்பம்சங்கள் பனிக்கரடிகளின் உடலில் 4 அங்குல அளவிற்கு கொழுப்பு நிறைந்துள்ளதால் , அதன் உடல் எப்போதும் கதகதப்பாக இருக்கிறது . அடுத்து , அதன் உடலிலுள்ள இரண்டு அடுக்கு முடிக்கற்றைகள் . சிறிய முடிக்கற்றைகள் காற்றை உள்ளே அனுமதித்து உடல் வெப்பத்தை பராமரிக்க உதவுகிறது . நீண்ட முடிக்கற்றை , நீரில் வேட்டையாட கரடிகள் செல்லும்போது உடலுக்குள் நீர் செல்லாமல் வாட்டர் ப்ரூப்பாக உதவுகிறது . பனிக்கரடிகள் இடைவேளை இன்றி , நூறு கி . மீ . தூரம் துணிச்சலாக நீந்தும் . இதன் கண்களிலுள்ள கூடுதலான இமைகள் கடலில் இரையை வேட்டையாடும்போது தெளிவாக பார்க்க உதவுகிறது . எப்படியென்றால் , பனிப்புயல் வீசும்போது கூட தனது இரையைத் தெளிவாக பார்க்கும் திறன்கொண்டது . கரடியின் மூக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும் மோப்பம் பிடிப்பதில் சிறந்தவை . 30 கி . மீ தொலைவுக்குள் சீல்கள் இருந்தால் உடனே அதனை அறிந்துவிடும் . இதன் முடியில் மற்றொரு ஸ்பெஷல் உள்ளது . அதுதான் அதன் ஹாலோ தன்மை . இதனால் கிடைக்கும் சூரியனின் வெப்பத்தை எளிதாக உடலுக்கு கடத்திக் கொள்ளமுடியும் . இதன் பா