இடுகைகள்

விராட் கோலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியல்! - இந்தியா டுடே இதழில் வெளியான ஆற்றல் மனிதர்களில் சிலர்...

படம்
        ஷிவ் நாடார்     அசிம் பிரேம்ஜி     விராட் கோலி    சக்தி வாய்ந்த மனிதர்கள் அசிம் பிரேம்ஜி இந்தியாவின் மூன்றாவது பெரும் மென்பொருள் நிறுவனம் . 61,020 கோடி வருமானம் ஈட்டியுள்ளது . 1,125 கோடி ரூபாயை அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் கோவிட் -19 நிவாரண உதவிகளுக்கு வழங்கியுள்ளது . அசீம் பிரேம்ஜி இப்போது சமூகம் சார்ந்த விவகாரங்களிலும் , தொழில்துறை சார்ந்தும் பேசி வருகிறார் . அசீம் பிரேம்ஜி ஸ்டான்போர்டு பல்கலையில் மாணவராக இருந்தபோது வயது 21. 1966 ஆம் ஆண்டு தனது தந்தை இறந்தவுடன் நிறுவனத்தில் இணைந்தார் . நடப்பு ஆண்டில் விப்ரோ நிறுவனம் , 1,095 கோடி ரூபாயை டிஜிட்டல் தொழில்களில் முதலீடு செய்துள்ளது . ரத்தன் டாடா , 82 டாடா அறக்கட்டளைக்கு தலைவர் . கோவிட் -19 பிரச்னைக்கு 500 கோடி ரூபாய் உதவியை அறிவித்த நல்லிதயம் கொண்டவர் . இரண்டு டஜன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் . 2012 இல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து விலகினார் . டாடா சன்ஸ் நிறுவனம் கோவிட் -19 நோய்த்தொற்று உதவியாக ரூ .1000 கோடி அளித்துள்ளது . எல்பின்ஸ்டோன் கட்டிடத்தில் இல்லை என்றாலும் அன

நடுவராவதற்கு கடுமையான முன்தயாரிப்புகள் அவசியம்!

படம்
நேர்காணல் ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டஃபல் , தற்போது ஓய்வு பெற்றுள்ளார். பணிக்காலத்தில் பிறருக்கு எடுத்துக்காட்டாக பணியாற்றியவர் இவர். தற்போது அதிகாரிகளுக்கான ஆளுமைப்பயிற்சிகளை அளித்து வருகிறார். அவரிடம் கிரிக்கெட் பற்றிப் பேசினோம். விராட் கோலி, தோனி இருவரின் ஸ்டைல் மற்றும் பிளஸ் மைனஸ்களை சொல்லுங்கள்.  விராட் கோலி ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் போட்டிகளில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வென்றபிறகு அளித்த பேட்டியைப் பார்த்தேன். என்னால் அந்த நிகழ்வை மறக்கவே முடியாது. மிகவும் கவனமாக அணியை ஒருங்கிணைத்து வெற்றியைப் பெற்றுத்தந்தவர். அணியின் முன்னாள் அணித்தலைவரான தோனி மீது பெரும் மரியாதை கொண்டவர் விராட். இன்றைய நவீன தலைமுறைக்கான புதுமையான வழிமுறையைக் கொண்டது கோலியினுடையது. ஆனால் தோனியினுடையது, நிதானமாக ஒருங்கிணைப்பட்டதாக இருக்கும். நீங்கள் பணிக்காலத்தில் ஐசிசி அளிக்கும் ஆண்டின் சிறந்த நடுவர்  விருதை ஐந்து முறை பெற்றிருக்கிறீர்கள். எப்படி சாத்தியமானது? தொண்ணூறுகளில் நான் நடுவராக பணியாற்றத் தொடங்கினேன். அப்போது விளையாட்டுத்துறை மீது கவனம் குவியத் தொடங்கியது. இத்துறையில் கிடைக்கும் பணம், புகழுக்