இடுகைகள்

மாற்றுத்திறனாளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பிற்கு உதவும் கர்ணா வித்யா பவுண்டேஷன்!

படம்
  சென்னையின் கிண்டியில் கர்ணா வித்யா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் லட்சியமே பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதுதான். 1999ஆம் ஆண்டு, சென்னை ரோட்டரி கிளப் தொடங்கிய நிறுவனம்தான்   கர்ணா வித்யா பவுண்டேஷன். 2013ஆம் ஆண்டு தன்னார்வ நிறுவனமாக மாற்றப்பட்டு கல்வி, வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் நிறுவனமாக மாறியது. பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு ஆலோசனை, பயிற்சி, போக்குவரத்து, தொழில்நுட்ப உதவிகளை கர்ணா வித்யா பவுண்டேஷன் வழங்குகிறது. இந்த நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதன் காரணமாக, பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர முடிகிறது. 2023ஆம் ஆண்டு கர்ணா வித்யா பவுண்டேஷன் பயிற்சியளித்த மாணவர்களில் 25 பேர், இருபது கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்களிலும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று வருகின்றனர்.   சாதாரண ஆட்களுக்கு வேலைவாய்ப்பு என்பது நேர்காணல் நடத்தினாலே வேலைவாய்ப்ப

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

மாற்றுத்திறனாளி பெண்ணைக் கொல்லத் துரத்தும் புத்திசாலி சைக்கோ! - மிட்நைட் 2021 - கொரிய திரைப்படம்

படம்
  மிட்நைட் தென்கொரிய திரைப்படம் திரில்லர் சொகுசு வேனில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் சுற்றுகிறான். அவன் ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கிறான். அடிபட்டு கிடப்பவளை வாய் பேசமுடியாத காது கேளாத பெண் பார்த்து உதவுகிறாள். இதனால் கொலைகாரன், அவளையும் அவளது அம்மாவையும் கொல்லத் துரத்துகிறான். அவள் அந்த கொலைகாரனிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.  படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர் (வி ஹா ஜூன்), வாய் பேச முடியாத பெண் (ஜின் கி ஜூன் ) என இருவருமே சிறப்பாக நடத்திருக்கிறார்கள். அதிலும் இறுதிக்காட்சியில்  திக்கித்திணறி பேச்சிலும், செய்கையிலும் தனது கனவு பற்றி விவரித்து தன்னை உயிரோடு விட்டுவிடும்படி கெஞ்சும் காட்சி. அடுத்து, தன்னைக் காப்பாற்ற கத்திகுத்துபட்ட பெண்ணின் அண்ணனிடம் (பார்க் ஹூன்) உதவி கோரி, இறுதியில் அவன் சுயநலமாக தனது தங்கைக்காக வாய் பேச முடியாத பெண்ணை கைவிடும்போது விரக்தியாகி அழும் காட்சி.  வள்ளுவர் கோட்டத்திலிருந்து போரூர் வரை பல்வேறு சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி வேகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஓடும் தடகள காட்சியை பதினைந்து நிமிடங

பத்ம விருதுகளைப் பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள் - சிறு அறிமுகம்

படம்
  இந்தியாவில் உள்ள பத்ம விருதுகளுக்கு யாருடைய பெயரையும் யாரும் பரிந்துரைக்கலாம். இதற்கான குறிப்புகளை இணையத்தில் பதிவேற்றி அதனை கமிட்டி ஏற்றுக்கொண்டால் உள்துறை அமைச்சகம் இறுதிப்பட்டியலை வெளியிடும். விருதுகளை பெறுகிறவர்களை அமைச்சகம் போன் செய்து தகவல் தெரிவிக்கும். சிலர் அதனை ஏற்க மறுத்தால், அதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களது பெயரை உள்துறை அமைச்சகம் விருதுப் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடும். இதுதான் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.  இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட சிலரைப் பற்றி படிக்கப் போகிறோம்.  கே வி ரபியா கே வி ரபியா 55 கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். கழுத்துக்கு கீழே உடல் இயக்கம் கிடையாது. இதனால் வீல்சேரில்தான் வாழ்கிறார். அப்படியிருந்தும் கூட பிறரைப் பற்றி யோசிக்கிறார் என்ற நோக்கில் விருதை அறிவித்திருக்கிறார்கள். பனிரெண்டு வயதில் போலியோ பாதிப்பு, புற்றுநோய் ஆகியவற்றைக் கேட்டு மனமொடிந்தவரின் உடலும் மெல்ல செயலிழந்து போனது. இதனால் அப்படியே கலங்கி நிற்காமல், தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முயன்று வருகிறார்

மாற்றுத்திறனாளி தன் குறைகளை மறைத்து சாதாரண மனிதராக காதலித்து வாழ முடியுமா? வேர் ஸ்டார்ஸ் லேண்ட்? கொரிய டிவி தொடர் 2008

படம்
    வேர் ஸ்டார்ஸ் லேண்ட் sbs tv தொடர் 16 எபிசோடுகள் October 1 to November 26, 2018 Genre: Romance, Melodrama Written by: Kang Eun-kyung Directed by: Shin Woo-chul இன்ச்கான் விமானநிலையம். கதை முழுக்க இங்குதான் நடைபெறுகிறது. இங்கு பணிக்கு சேர்ந்து ஒரு ஆண்டாக சென்று வந்துகொண்டிருக்கிறாள் மிஸ் ஹான். வேலை பார்ப்பது சரியில்லை என இவளை மிஸ் யாங் குழுவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது மிஸ் யாங்கின் சீனியர் ஆபீசர் லீ செய்யும் வேலைதான். அவருக்கு ஹானைப் பார்க்க, தான் பயிற்சி கொடுத்த மிஸ் யாங்கை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது போலவே இருக்கிறது. ஹானைப் பொறுத்தவரை விமானங்களை நட்சத்திரமாகவே பாவிக்கிற கனவு ஜீவி. நன்றாக தூங்குவது அடித்து பிடித்து ஆபீஸ் வருவது, அங்குள்ள அலுவலகங்களை பார்த்து மிரள்வது, அனைத்துக்கும் ஸாரி கேட்டு மேனேஜர் காங்கை ரத்த அழுத்தம் வரும்படி அலறவைப்பது என ஏகத்தும் செய்கிறாள். பயணிகளின் சேவைப்பிரிவு ஹானுக்கு புதியது. அங்கு வரும்போது, லீ சூ என்பவரை சந்திக்கிறாள். லீ சூ காசு கொடுத்தால் கூட பேசாத ஆள். அவர் ஹானை முன்னமே சந்தித்த  அனுபவம் கொண்டவர். ஹானைப் பொறுத்தவரை எப்படியோ வேல

பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றி அறிந்துகொண்டேன் மானசி ஜோஸி

படம்
            பாட்மின்டன் - மானசி ஜோஸி இந்தியா டுடே, சுகானி சிங் பாராலிம்பிக்ஸ் 2021இல் உங்கள் திட்டம் என்ன? இதில் பாட்மின்டன் பிரிவு இல்லையே? நான் கலப்பு இரட்டையர் பிரிவில் ராகேஷ் பாண்டேவுடன் இணைந்து விளையாடப்போகிறேன். இவருடன் இணைந்து விளையாடி 2015இல் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி வென்றுள்ளேன். நாங்கள் இணைந்து விளையாடி போட்டிகளில் தகுதிபெற விரும்புகிறேன். அதிகளவு அழுத்தத்தை என்மேல் திணித்துக்கொள்ள விரும்பவில்லை. கடந்த ஆண்டு உலக சாம்பியனான பிறகு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தூதராக செயல்பட்டீர்கள். இதில் உங்களுக்கு என்ன பொறுப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? உறுப்புகளை இழந்த மக்களின் சார்பாக மட்டும் பேசுவதாக நினைக்கவேண்டாம். இதுபோல வாழும் மாற்றுத்திறனாளிகளின் சதவீதம் அதிகம். நான் இந்த பொதுமுடக்க காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பற்றி அறிந்துகொண்டேன். உங்களைப் போலவே பார்பி மாடல் உருவாக்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெண்கள் பிரிவில் இதுபோல பெருமை பெற்ற இரண்டாவது இந்தியப்பெண் நான் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. பொம்மை என்னை சிறப்பாக நகல் செய்து உருவாக்கப்

முதல் மனிதர்களை சந்திப்போம்!

படம்
இந்தியாவில் அனைத்து விஷயங்களும் சாதி, மதம், நிறம், மொழி சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. காரணம், நிலப்பிரபுத்துவ மனநிலை, பாரம்பரியம். இதையெல்லாம் தாண்டி சமத்துவம், சகோதரத்துவம், சாதனைகளை நிறைய இந்தியர்கள் இந்தியாவிலும் , இந்தியா கடந்தும் செய்கிறார்கள். அப்படி முதன்முதலாக சாதித்த மனிதர்களை சந்திப்போம் வாருங்கள். கரிமா அரோரா -33 மிச்சலின் ஸ்டார் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியப்பெண். இந்தியாவில் மருத்துவர், பொறியாளர் ஆக காட்டும் ஆர்வத்தை பிற துறைகளில் காட்டுவதில்லை. அதிலும் சமையலை அவர்கள் அவமானகரமான ஒன்றாக கருதுகிறார்கள். நான் இத்துறையில் சாதித்துள்ளேன். ஆனால் இத்துறையில் நானே முதலாகவும் கடைசியாகவும் இருக்கமாட்டேன் என்பது உறுதி என தெம்பாக பேசுகிறார் கரிமா. பாங்காங்கில் கா எனும் இந்திய உணவகத்தைத் தொடங்கினார். தொடங்கி பதினெட்டு மாதங்களில் மிச்சலின் ஸ்டார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.  தற்போது வணிகநோக்கமின்றி, பழங்குடிகளின் உணவு வகைகளை சமைத்து மக்களுக்கு பரிமாற உள்ளார். இந்திய உணவுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதே இவரின் இலக்கு. அருணிமா சின்கா -30 எவரெஸ்ட் ஏறிய மாற்றுத்

மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!

படம்
மாற்றுத் திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  59 எமோஜிக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. எழுத்தை விட படமாக பார்த்துப் புரிந்துகொள்வது எளிது. குறுஞ்செய்திகளை பயன்பாட்டை எமோஜிகள் அறிமுகமாகி முடித்து வைத்தன. தற்போது மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும்படி 59 புதிய எமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜப்பான் மொழியில் எமோஜி என்ற சொல்லில் ’இ’(E) என்பதற்கு படம் என்றும், மோஜி(Moji) என்பதற்கு கதாபாத்திரம் என்றும் பொருள். இப்புகழ்பெற்ற வார்த்தை 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதியிலும் சேர்க்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி ஆப்பிள், கூகுள் மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் எமோஜிக்களை யுனிக்கோட் கான்சார்டியம் (The Unicode Consortium) என்ற அமைப்பு, தர நிர்ணயம் செய்து வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐகான்களை அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டே யுனிக்கோட் கான்சார்டியத்திடம் கோரியது. புதிய எமோஜிக்களைத் தயாரிக்க ஆப்பிள் பார்வையற்றோர் கௌன்சில், செரிபெரல் பால்சி பவுண்டேஷன், காதுகேளாதோர் சங்கம் ஆகிய அமைப்புகளின் உதவிகளைக் கோரி பயன்படுத்த