மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!



Image result for disabled emoji




மாற்றுத் திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!

 மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  59 எமோஜிக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
எழுத்தை விட படமாக பார்த்துப் புரிந்துகொள்வது எளிது. குறுஞ்செய்திகளை பயன்பாட்டை எமோஜிகள் அறிமுகமாகி முடித்து வைத்தன. தற்போது மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும்படி 59 புதிய எமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜப்பான் மொழியில் எமோஜி என்ற சொல்லில் ’இ’(E) என்பதற்கு படம் என்றும், மோஜி(Moji) என்பதற்கு கதாபாத்திரம் என்றும் பொருள். இப்புகழ்பெற்ற வார்த்தை 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதியிலும் சேர்க்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

ஆப்பிள், கூகுள் மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் எமோஜிக்களை யுனிக்கோட் கான்சார்டியம் (The Unicode Consortium) என்ற அமைப்பு, தர நிர்ணயம் செய்து வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐகான்களை அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டே யுனிக்கோட் கான்சார்டியத்திடம் கோரியது. புதிய எமோஜிக்களைத் தயாரிக்க ஆப்பிள் பார்வையற்றோர் கௌன்சில், செரிபெரல் பால்சி பவுண்டேஷன், காதுகேளாதோர் சங்கம் ஆகிய அமைப்புகளின் உதவிகளைக் கோரி பயன்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் எமோஜி மொழி  வெகு பிரபலம். எமோஜி ஐகான்களை  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து மக்கள் பயன்படுத்திய சித்திர எழுத்து வடிவமான  ஹைரோகிளிபிக்ஸ்( hieroglyphics) உடன் ஆய்வாளர்  வைவ் ஈவன்ஸ் ஒப்பிடுகிறார்.  “படத்தை புரிந்துகொள்வது எளிது என்பதால் மொழி எல்லைகளைக் கடந்து எமோஜி அனைத்து மக்களிடம் பிரபலமாகிவிட்டது” என்றார் வைவ் ஈவன்ஸ்.

நடைமுறைக்கு வரும் எமோஜி

”தற்போது போன்களில் பயன்படுத்தும் எமோஜிக்கள், பொதுவான மக்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் குறிக்கின்றன. ஆனால்  மாற்றுத்திறனாளிகளைக் குறிப்பிட இதில் எமோஜிக்கள் இல்லை” என்று ஆப்பிள் நிறுவனம் தன் அறிக்கையில் குறிப்பிட்டது. ஹியரிங் எய்டு, சேவை நாய், சக்கர நாற்காலி ஆகிய எமோஜிக்கள் மாற்றுத்திறனாளிகளைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. புதிய எமோஜிக்கள் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் முதல் புழக்கத்திற்கு வரவிருக்கின்றன.

நன்றி: Hrw.org