புலிகளைப் பெருக்குவது எளிதான காரியமல்ல
நேர்காணல்
ராஜேஷ் கோபால் (முன்னாள் வனத்துறை அலுவலர்)
வேட்டையாடுதல் அதிகரிக்க காரணம் என்ன?
புலிகள் காப்பகத்தில் வேட்டையாடுதல் அதிகரித்திருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. புலிகளை பாதுகாப்பதில் உள்ளூர் காரர்களின் ஆதரவும் தேவை. இல்லையெனில் அதனை சாத்தியப்படுத்த முடியாது.
குளோபல் டைகர் ஃபாரம் இதற்கு என்ன திட்டம் வைத்துள்ளது.?
தெற்காசிய நாடுகளில் புலிகளின் பாதுகாப்பை குளோபல் டைகர் ஃபாரம் உறுதி செய்கிறது. திட்டம், அதற்கான விஷயங்களை தீர்மானிப்பது ஆகியவற்றை எங்கள் அமைப்பு செய்கிறது.
காட்டு விலங்குகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என கூறலாமா?
இந்த வாதத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பதிமூன்று புலிகள் காப்பகத்தில் அதிக புலிகளை பாதுகாத்திருப்பது இந்தியாதான். ஏறத்தாழ 70 சதவீதம்தான். உலகிலுள்ள 60 சதவீத காடுகளில் இந்தியாவின் பங்கு 0.06 ஹெக்டேர்கள்தான். காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல்களை தவிர்க்க அரசு இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2020 ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கிவிட முடியுமா?
புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இயற்கணிதம் போன்ற முயற்சியல்ல. புலிகளின் வனம் உள்ள பகுதிகளிலுள்ள மக்களின் ஆதரவின்றி எதுவும் சாத்தியம் கிடையாது. அனைத்தும் பிரிக்க முடியாத கண்ணிகளால் இணைந்துள்ளது.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா(விஜய் பின்ஜார்கர்.)