உரையாடலில் தேவையை, உணர்வுகளை வெளிப்படுத்த கற்கவேண்டும்!
நம் உணர்வுகளை வெளிப்படுத்த கற்க வேண்டும்! ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் இருக்கும். மனைவிக்கு கணவர் தான் பேசினால் அதற்கு பெரியளவில் எதிர்வினையோ, கருத்து கூறுதலோ செய்வதில்லை என வருத்தம். கோபத்தில் அவர், நீங்கள் எதையும் பேசாமல் சுவர் போல இருக்கிறீர்கள் என கூறிவிடுகிறார். இப்போது அங்கே என்ன விதமான உரையாடல் நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். பெரிதாக ஏதும் நடக்காது. கணவர் சுவர் என்ற விமர்சனத்தால் பாதிக்கப்பட்டு முன்னைவிட மயான அமைதியை கடைபிடிப்பார். மனைவிக்கு கணவரோடு உரையாடுவது இஷ்டம். அதை அவர் தனது உணர்வுநிலை இப்படி இருக்கிறது என கூறலாம். நீங்க என்னிடம் பேசினால் சந்தோஷமா இருக்கும் என கூறினால், அங்கு உரையாடல் நடக்கலாம். இந்த வாக்கியத்தை கவனித்தால், இதில் அவர் தனக்கு என்ன தேவை என்று கூறியிருக்கிறார். கணவர் மீதான விமர்சனம் ஏதுமில்லை. முன்முடிவுகள் இல்லை. மனைவி அவரது மனநிலையைக் கூட குறிப்பிடலாம். தவறில்லை. தேவையை வெளிப்படையாக கூறுவதில் தவறேதும் இல்லை. ஒரு நாடு இருக்கிறது. அங்கு மக்களுக்கான புதிய திட்டங்களை சிந்தனையாளர்கள் குழு உருவாக்குகிறது. அதை அ...