இடுகைகள்

மருத்துவம்- தீக்காயங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீக்காயங்களை குணமாக்கலாம் பிளாஸ்டிக் மூலமாக!

படம்
தீப்புண்களை குணமாக்கும் பிளாஸ்டிக் ! நெருப்பினால் உண்டாகும் காயங்களை குணப்படுத்துவது மருத்துவத்திற்கே சவாலான ஒன்று . தோல் முற்றிலும் சிதைவடைவதால் , பாக்டீரியாத்தொற்று ஏற்படுவதை தடுப்பது பிரம்ம பிரயத்தனமாக உள்ளது .   பாலிஸ்ட்ரீன் , பாலிபுரோபலீன் ஆகிய பெட்ரோகெமிக்கல்களிலிருந்து மைக்ரோபெட்ஸ் எனும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன . இவற்றை multivalent adhesion molecule 7 என்ற பொருளுடன் இணைத்து தீப்புண்களை குணப்படுத்த பயன்படுத்தலாம் என பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . " இக்கலவை மூலம் பாக்டீரியா தொற்றை எளிதில் தடுக்கலாம் . இதன்மூலம் பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டை குறைக்கலாம் " என்கிறார் மருத்துவர் ராபர்ட் . PLOS மருத்துவ இதழில் இதுதொடர்பான மருத்துவக்கட்டுரை வெளியாகியுள்ளது .