இடுகைகள்

சுற்றுச்சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறைமுகமாக மாசுபாடுகளை ஊக்குவிக்கும் நைட்ரஜன்!

படம்
  மாசுபாடுகளின் தலைமகன்!   மாசுபாடு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய அனைவருக்கும் தெரிந்த வாயுக்கள்தான். ஆனால் சத்தமே இல்லாமல் நீர், காற்று ஆகிய மனிதர்கள் அடிப்பதை வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்பை நைட்ரஜன் வாயு ஏற்படுத்தி வருகிறது.  பொதுவாக ஆபத்தற்றது என கருதப்படும் இந்த வாயு, வளிமண்டலத்தில் 78 சதவீதம் காணப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் இழுத்து வளமடையும் நிறைய பயிர்கள் மண்ணில் உண்டு. இப்படி நடைபெறும் செயல்பாடு சுழற்சியானது. இதில குளறுபடி நடக்கும்போது அனைத்துமே தலைகீழாகி பிரச்னை தொடங்கிவிடுகிறது.. எளிதாக நாம் பார்க்கும் பிரச்னை, நீர்நிலையில் பிற உயிரினங்கள் வாழ முடியாதபடி பாசிகளின் ஆக்கிரமிப்பு. இது வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயுவின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் முக்கியமான பாதிப்பாகும்.  காற்றிலுள்ள நைட்ரேட்டுகளை மழை கரைத்து நீர்நிலைகளில் சேர்க்கிறது. அங்கு பாசிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நைட்ரஜன், நீரிலுள்ள ஆக்சிஜனை உறிஞ்சுகிறது. இதனால் அதிலுள்ள உயிரினங்கள் மெல்ல அழிவைச் சந்திக்கின்றன. இந்த வகையில் உலகில் 400க்கும் மேற்பட்ட நீர்நிலைப்பகுத

உடை, உணவு, வாழ்க்கை என அனைத்திலும் மிதமிஞ்சிய போக்கு ஆபத்தானது! - வந்தனா சிவா

படம்
  பூமியும் மக்களின் நுகர்வும்! இன்று ஆடைகளை அணியும் நாகரிகம் என்பது வேகமாகிவிட்டது. இதனால் ஆடைகள் உடுத்தும்படியாகவே இருந்தாலும் கூட காலத்திற்கேற்ப இல்லை என்று சொல்லி நிறைய ஆடைகளை மக்கள் வாங்கிவருகின்றனர். சிறப்பங்காடிகளும் உடைகளின் விலையை தள்ளுபடி விலையில் விற்றுத்தீர்க்க அவசரம் காட்டுகின்றன. இதன் விளைவாக, ஏராளமான துணிகள் அதன் பயன்பாடு முடிவற்கு முன்னரே நிலத்தில் குப்பையாக சேர்கின்றன. இதற்கடுத்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுபற்றி பார்ப்போம். அடிப்படையில் ஒரு யூனிட் அளவுக்கு நாம் இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்தினால் பத்துமடங்கு ஆற்றலை இந்த உணவுகள் தரவேண்டும். தொழிற்சாலைகள் மூலமாக தயாரிக்கப்படும் உணவுவகைகள் பத்து யூனிட் அளவுக்கான இயற்கை ஆதாரங்களையும் சக்தியையும் பயன்படுத்துகின்றனர. பதிலாக எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லாத உணவை உருவாக்குகின்றன. இவற்றை நாம் போலி உணவு என்று கூறலாம். பொதுமுடக்க காலம் நமக்கு அவசியமான விஷயங்களை வாங்குவது பற்றிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகில் உள்ள ஒருமுறை பயன்படுத்தி எறியும் கலாசாரம் இந்தியாவுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது சூழலுக்கும், பூமி

கடலை சுத்தமாக்கி டைவர்கள்!

படம்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கடலில் அறுநூறுக்கும் மேற்பட்ட டைவர்கள் குதித்து அதனை சுத்தமாக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளனர். இதற்கு முன்பு 614 பேர் கடலில் இதுபோல சுத்தம் செய்து சாதனை செய்துள்ளனர். தற்போது 633 பேர் செய்ததால் கின்னஸ் சாதனையாக இடம்பெற்றுள்ளது. சுத்தம் செய்யும் இப்பணி ஆண்டுதோறும் டிக்சி டைவர்ஸ் எனும் அமைப்பினரால் நடத்தப்படுகிறது. இவர்களுடன் டீர்ஃபீல்டு பீச் உமன் கிளப் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து டைவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் 1,626 பௌண்டுகள் குப்பை நீக்கப்பட்டுள்ளது. இவற்றை மீன்பிடி பகுதியலிருந்து இந்த டைவர்கள் அகற்றியுள்ளது முக்கியமானது. இது மிகச்சிறப்பான நேரம் .. அனைவரும் ஒன்றாக கூடி குப்பைகளை அகற்றி கடலுக்கு நன்மை செய்தோம் என்கிறார் டைவரும் ஒருங்கிணைப்பாளருமான டைலர் பர்கைன். நன்றி: இகோ வாட்ச்

வளர்ச்சி திட்டங்களால் அழியும் சிறுத்தைகள்!

படம்
இந்தியா வளருகிறது சிறுத்தைகள் அழிகின்றன.  2019 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் 219 சிறுத்தைப்புலிகளை நாம் இழந்துவிட்டோம். இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு 500 சிறுத்தைகள் இறந்தன. இதுகுறித்த அறிக்கையை இந்திய கானுயிர் சொசைட்டி வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு முதல் சிறுத்தைகளைக் கண்காணித்து அவற்றைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறது. பெரும்பாலான சிறுத்தைகள் உணவு, நீருக்காக அலைந்து கிணற்றில் விழுந்தும், அடித்து கொல்லப்பட்டும், சுடப்பட்டும் இறந்துபோகின்றன. குறிப்பிடத்தக்கபடி ரயிலில் அடிபட்டும் சிறுத்தைகள் நிறைய இறந்துபோகின்றன. 2014 ஆம் ஆண்டு 41, 2015 ஆம் ஆண்டு 51, 2017 இல் 63, 2018 இல் 80 என சிறுத்தைப்புலிகள் இறந்துபோயுள்ளன. மேற்சொன்ன காரணங்களோடு  விவசாய நிலங்களில் அமைக்கப்படும் மின்வேலிகளும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்இறந்துபோக முக்கியக்காரணம். உலக இயற்கை கானுயிர் யூனியன் அமைப்பில் சிறுத்தைகள் சிவப்பு பட்டியலில் ஏற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் வனச்சட்டம் 1972 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தைப்புலி உள்ளது. சிறுத்தைப்புலிகள்

கிரேட்டா துன்பெர்க்- இளைய போராளி

படம்
கடந்த ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் சிறுமி ஒருத்தி போராட அமர்ந்தாள். என்ன கோரிக்கை, என்ன விஷயம் என யாருக்கும் புரியவில்லை. அப்புறம் பார்த்தால் வெப்பமயமாதலுக்கான போராட்டம் அது. அரண்டு போன ஊடகம், மைக்கையும் கேமராவையும் எடுத்துக்கொண்டு ஓடிவர மெல்ல கிரேட்டா துன்பெர்க்கும், அவரது போராட்டமும் உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியது.  இதன் விளைவாகத்தான் லண்டனில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக நடந்த போராட்டமும் கூட.  கடந்த ஆகஸ்டில் துன்பெர்க் செய்த போராட்டத்திற்கு அவரது பெற்றோர், சக நண்பர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால் இன்று எட்டு மாதத்திற்கு பிறகு அவரை ஆதரிக்காத ஆட்கள் உலகிலேயே கிடையாது என்ற அளவு துன்பெர்க்கை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.  71 நாடுகளில் 700 நகரங்களுக்கு மேலாக சுற்றுச்சூழல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது எனக்கு பெரிய ஆச்சரியம் என கண்கள் மினுங்கப் பேசுகிறார் துன்பெர்க். இவரது தந்தை புகழ்பெற்ற நடிகர் எழுத்தாளர் ஸ்வெந்தா துன்பெர்க், தாய் பிரபலமான ஓபரா பாடகி. துன்பெர்க் பெரியளவு யாரையும் கவனம் ஈர்க்கும் சிறப்புகளைக் கொண்டவர் அல்ல. காலையில் ஆற

விதைகளை சேமிக்கும் வங்கி!

படம்
உலக மக்களின் எதிர்காலம் காக்கும் வங்கி ! - ச . அன்பரசு ஒருபுறம் க்ரீன்லாந்து கடலுக்கும் மறுபுறம் ஆர்க்டிக் கடலுக்கும் அருகில் வங்கி அமைக்க நிச்சயம் ஒருவருக்கு உச்சபட்ச தைரியம் வேண்டும் . ஆனால் அந்த இடத்திற்கு மக்கள் எப்படி வருவார்கள் என்று கேட்கலாம் ஆனால் இது பணப்பரிமாற்றத்திற்கான வங்கி அல்ல ; அடுத்த தலைமுறைகளை வாழவைக்கும் விதைகளுக்கான ஸ்பெஷல் வங்கி . நார்வே அரசின் உணவுத்துறை , மரபணு மையம் மற்றும் பயிர்அறக்கட்டளை இணைந்து ஸ்பிட்ஸ்பெர்ஜன் தீவில் அமைத்துள்ள ஸ்வால்பார்ட் விதை வங்கிக்கு இந்த ஆண்டு பத்தாவது பர்த்டே . மைனஸ் பதினெட்டு டிகிரி செல்சியஸில் கவனமாக பாதுகாக்கப்படும் விதை வங்கியில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 557 விதைகள் பாதுகாக்கப்படுகின்றன . எதற்கு இவ்வளவு பாதுகாப்பு ? நார்வேயிலுள்ள இந்த விதை வங்கி விதைகள் , அரிய தாவரங்கள் நமக்கானதல்ல ; எதிர்கால தலைமுறையினருக்காக . நிலநடுக்கம் , பூகம்பம் , தீவிபத்து ஆகியவை ஏற்பட்டு பயிர்கள் அழிந்துபோனால் நிலத்தில் உழுது பயிரிட  நெல் , கோதுமை , சோளம் ஆகிய தானியங்கள் வேண்டுமே ? அதற்காகத்தான் . இந்த பாதுகாப்பான விதைவங்கி .

ரிப்பேர் கஃபே!- ச.அன்பரசு

படம்
ரிப்பேர் கஃபே !- ச . அன்பரசு      உங்கள் கைகளிலுள்ள வாட்ச் , சுவரிலுள்ள கடிகாரம் , மாவு அரைக்கும் கிரைண்டர் , பிரேக்கிங் நியூஸ் சொல்லும் ஸ்மார்ட்போன் இதையெல்லாம் பிரச்னை வரும்போது பழுதுபார்க்க கடைக்கு கொண்டு செல்வீர்களா ? அல்லது புத்தாண்டில் அனைத்து புதுசுதான் என தூக்கியெறிந்து விட்டு புதுசாக ஆன்லைனில் இறக்குமதி செய்வீர்களா ? இரண்டாவது ஆப்ஷனை செலக்ட் செய்பவர்களே அதிகம் . ரிப்பேர் செலவுகள் புதிய பொருளின் விலையருகே வந்தால் வேறு என்ன செய்வது ? என பதில்கள் வரலாம் . ஆனால் இது தீர்வே கிடைக்காத சூழல் பிரச்னையாக மாறிவிட்டது .        யூஸ் அண்ட் த்ரோ கலாசாரத்தால் பாதிக்கப்படுவது முதலில் இயற்கை சூழல் என்ற கவனத்தில் பொருட்களை பழுதுபார்க்க கற்றுக்கொடுக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ரிப்பேர் கஃபே தன்னார்வ நிறுவனம் . " முந்தைய தலைமுறை மனிதர்கள் தான் வாங்கிய பொருட்களை ரிப்பேர் செய்து கவனமாக பராமரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் "  என பணியை விவரிக்கிறார் அன்தாரா முகர்ஜி . 2015 ஆம் ஆண்டு பூர்ணா சர்காருடன் இணைந்து இருவருமாக  ரிப்பேர் கஃபே அமைப்பை பெங்களூரில் தொடங்கினர் . தமது

லேடி டார்ஸான் ஜமுனா!

படம்
லேடி டார்ஸான் ஜமுனா !- ச . அன்பரசு ரக் ‌ ஷா பந்தனின் அர்த்தம் தெரியுமா ? சகோதரர்களுக்கு சகோதரிகள் மணிக்கட்டில் அணிவிக்கும் கயிறு , சகோதரனுக்கான நலனைத் தருவதோடு , சகோதரியை பாதுகாக்கும் பொறுப்பையும் வலியுறுத்துகிறது . அதேதான் ஜார்க்கண்டின் புர்பி சிங்பம் மாவட்டத்திலுள்ள முதுர்காம் கிராமத்திலும் நடந்தது . கிராமத்தைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் சால் வனப்பகுதியிலுள்ள மரங்களுக்கு ராக்கி கட்டியுள்ளனர் என்பதுதான் மிராக்கிள் மேட்டர் . இப்பெண்கள் படைக்கு தலைமை வகித்த ஜமுனா துடு , 50 ஹெக்டேர் வனப்பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக டிம்பர் மாஃபியாக்களின் கொலைவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டு இரவும் பகலுமாக காவல் காத்து வருகிறார் . 1998 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புவரை படித்திருந்த ஒடிஷாவைச் சேர்ந்த ஜமுனா திருமணமாகி , முதுர்காம் கிராமத்திற்கு வந்தார் . காட்டை நம்பியே வாழும் மக்களை ஏமாற்றி வனத்தை சிலர் சுரண்டுவதை விரைவிலேயே அறிந்துகொண்டார் . டிம்பர் மாஃபியா குறித்து பலர் கூறிய கதைகளை கேட்டு பயந்தாலும் , வனத்தை இழந்தால் எதிர்காலம் இல்லை என்று உடனே புரிந்துகொண்டு சக கிராமத்தினர

ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை!

படம்
ஜாரவா பழங்குடிகளை அழிக்கும் ரயில்பாதை - இந்தியாவின் சீக்ரெட் பிளான் - ச . அன்பரசு ஓர் அரசின் மேலாதிக்கம் , மற்றுமொரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் வளத்தை உறிஞ்சியே வளர்கிறது என்பதற்கு நிகழ்கால சாட்சி அந்தமான் நிக்கோபார் தீவுகள் . இந்திய அரசு அங்கு விரைவில் அமைக்கவுள்ள 240 கி . மீ ரயில்பாதை அங்கு ஏற்கனவே வாழிடங்களை இழந்து எஞ்சியுள்ள ஜாரவா ஆதிவாசியினத்தை முற்றிலுமாக துடைத்தழிக்ககூடும் என அச்சம் எழுந்துள்ளது . வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேரிலிருந்து 90 கி . மீ உள்ளே சென்றால் காதம்தலாவிலுள்ள ஹாம்லெட் என்ற ஜாரவா வனப்பகுதி . சூரியன் மறையத் தொடங்கினாலே அங்கு அமைந்துள்ள அரசு பழங்குடி நலவாழ்வு அமைப்பான அந்தமான் ஜன்ஜதி விகாஸ் சமிதி (AAJVS) யின் அலுவலகம் பரபரப்பாகிவிடும் . அந்தமானின் ஜாரவா பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து திருப்பி அனுப்புவதே அங்குள்ள அரசு அதிகாரிகளின் தினசரிபணி . ஜாரவா ஆதிவாசி மக்களின் ஆக்ரோஷம் அப்படியே நம் விராட் கோலி போல . தங்கள் பகுதியின் மீது விமானம் பறந்தாலே அதன் மீது அம்பு