இடுகைகள்

உலகம்-ஆப்கானிஸ்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறிக்கப்படும் ஆப்கன் குழந்தைகளின் கல்வி!

படம்
கல்வியின்றி தவிக்கும் ஆப்கன் குழந்தைகள் ! ஆப்கானிஸ்தானின் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர் . போர் , வறுமை , கலாசாரம் என பல்வேறு தடைகள் இதற்கு காரணங்களாக உள்ளன . ஐ . நா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் , 2001 ஆம் ஆண்டு தாலிபன் வீழ்ந்தபிறகு பள்ளிகளில் பெண்குழந்தைகள் சேரும் விகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது . ஆனாலும் 7-17 வயதுள்ள பெண்குழந்தைகளில் 44% பேர் (3.7 மில்லியன் ) பள்ளிக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர் என்பதை யுனிசெஃப் மற்றும் நாட்டின் கல்வித்துறை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது . தீவிரவாதம் தலைதூக்கிய பகுதிகளில் பள்ளி செல்லாத சிறுமிகளின் எண்ணிக்கை 85%. தலைதூக்கும் தீவிரவாதமும் , ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியளிக்க முடியாத ஆப்கன் அரசின் திறனின்மையும் , குழந்தை திருமணங்களும் பெண்குழந்தைகளை பள்ளிகளிலிருந்து எளிதில் விலக்கிவைக்கிறது . புதிய பெண் ஆசிரியர்களை பயிற்சியளித்து பணியளிப்பதை ஐ . நா அறிக்கை ஊக்குவித்தாலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் ஆப்கனில் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்படுவது நம்பிக்