இடுகைகள்

மனநல குறைபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரின் புத்திசாலித்தனம் மரபணு அல்லது கல்வி மூலம் தீர்மானிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய ஆய்வு!

படம்
  ஒருவர் பிறக்கும்போது மேதாவியாக இருக்கிறாரா, பிறந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வஸ்தாது ஆகிறாரா என்ற பஞ்சாயத்து இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 1900களில் மேதாவிகளாக இருந்த லியானார்டோ டாவின்சி, பீத்தோவன் பற்றி மக்கள் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். புத்திசாலித்தனம் ரத்தம் மூலம் உருவாகி வளருகிறதா, அல்லது பிறந்து சூழ்நிலையில் உள்ள அம்சங்கள் மூலம் கல்வியால் அறிவு பிரகாசிக்கிறதா என்று முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர். அரிஸ்டாட்டில், மேதாவித்தனமும்,கிறுக்குத்தனமும் ஒன்றுக்குள் ஒன்று என்று கருத்து கூறினா். இதெல்லாம் மரபணு சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று கலந்தவை என எழுதினார்.  ஜெர்மனியைச் சேர்ந்த உளவியலாளர் ஹான்ஸ் ஐசென்ஸ்க், மேதாவித்தனம், கிறுக்குத்தனம் ஆகியவற்றை ஆராயாமல், முழு மனிதனை எந்த விஷயம் உருவாக்குகிறது என்பதில் மனதை செலுத்தினார். ஒருவரின் அறிவுத்திறன் 165 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் அவரை மேதாவி என அறிவியல் அழைக்கிறது. இதேபோல ஒருவர் செய்யும் செயல்களில் மனநல குறைபாடுகளின் அறிகுறிகள் தெரிந்தால் அவரை மன நோயாளி என முத்திரை குத்தி சிகிச்சை செய்கின்றனர். ஹான்ஸ் உருவாக்கிய பெ

சீரியல் கொலைகாரனிடமிருந்து தங்கையைக் காக்க போராடும் மனநல குறைபாடு கொண்ட பெண்! - ஜட்ஜ்மென்டல் ஹை கியா?

படம்
  ஜட்ஜ்மென்டல் ஹை கியா ராஜ்குமார் ராவ், கங்கனா ரணாவத் இயக்கம் பிரகாஷ் கோவலமுடி கதை, திரைக்கதை, வசனம் – கனிகா தில்லான்   குடும்ப வன்முறை காரணமாக சிறுவயதில் இருந்தே மனநலக்குறைபாடு கொண்டவள் பாபி. தனது பாதிப்பினூடே சீரியல் கொலைகாரன் ஒருவனை எப்படி கண்டுபிடித்து அவனிடமிருந்து தன் தங்கையைக் காக்கிறாள் என்பதே மையக் கதை.   சைக்கோசிஸ் வந்த நோயாளியாக பாபி இருக்கிறாள். இவளை பைத்தியம் என்று பலரும் பேசினாலும் அவளது உலகத்தில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையில்   பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறாள். செய்யும் அதிரடி காரியங்களுக்காக நீதிமன்றம் விதிக்கும் அபராதம் கூட கட்டமுடியாத நிலை. நான் மனநல மையத்திற்கு போகிறேன். அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்   என்று செல்பவளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? குடும்ப வன்முறை காரணமாக அவளது அப்பா, அம்மாவை அடித்து உதைத்து வசைபாடுகிறார். ஒருநாள் ஹோலி பண்டிகை அன்று இன்னொருவரோடு சேர்ந்து நடனம் ஆடினாள் என தனது மனைவியை பாபியின் அப்பா அடித்து உதைக்கிறார். அம்மா அடிபடுவதிலிருந்து காப்பாற்ற பாபி முயலும்போதுதான் பெற்றோர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்த