இடுகைகள்

அலிபாபா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள்! முன்னிலை வகிக்கும் அலிபாபா!

படம்
          அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள் இவை சாப்ட் பேங் டோக்கியோ ஜப்பான் 89.7 பில்லியன் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க் பெரும்பாலும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்து வெற்றி பெற்றுவருகிறது. உபர், பைட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளது. முதலீட்டு விஷயங்களை விஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த முயன்று வருகிறது.லாபம் வராத வீவொர்க் நிறுவனத்திற்கான முதலீட்டை முட்டாள்தனதானது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார் இதன் சிஇஓவான மசோயாஷி சன். டிசிஎஸ் 100. 7 பில்லியன் மும்பை, இந்தியா இந்த நிறுவனத்தை டாடா குழுமம் இயக்குகிறது. இந்த குழுமம் உப்பு, உரம், இரும்பு, வேதிப்பொருட்கள், வாகனங்கள் என பல்துறை சார்ந்தும் இயங்குகிறது. கோவிட் -19 சார்ந்து பல்வேற செயல்பாடுகளை அரசுடன் இணைந்து செய்துள்ளது டாடா. ஏஎஸ்எம்எல் ஹோல்டிங் 124.5 பில்லியன் டாலர் வெல்தோவன், நெதர்லாந்து பெரு நிறுவனங்களின் பட்டியலில் உள்ள டச்சு நிறுவனம் இது ஒன்றுதான். மென்பொருள், வன்பொருள் ஆகிய நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. உலகின்

இந்தியாவில் சூப்பர் ஆப்பிற்கான தேவை உள்ளதா? வரிசை கட்டும் டாடா, ஜியோ, பேடிஎம்

படம்
    சூப்பர் ஆப்பின் தேவை இருக்கிறதா? இன்று நம் அனைவரின் போன்களிலும் ஷாப்பிங் தளங்களுக்கான ஆப் குறைந்தபட்சம் ஒன்றேனும் உள்ளது. இதுபோக பிற ஓடிடி தளங்களுக்கான ஆப்கள் தனி. இவை அனைத்தும் ஒன்றாக ஒரே ஆப்பில் இணைந்திருந்தால் அதுதான் சூப்பர் ஆப். சூப்பர் ஆப்பில் ஒரு வணிக குழுமத்தின் அனைத்து சேவைகளும், அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள பிற நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் ஒரு கிளிக்கில் கிடைக்கும். இதன்மூலம் தேவையில்லாமல் தனித்தனியாக பல்வேறு ஆப்களை ஒருவர் தரவிறக்கும் அவசியம் இல்லை. இந்த சூப்பர் ஆப் ஐடியாவை டாடா குழுமமே முன்னதாக யோசித்து அதே வேகத்தில் அறிவித்துவிட்டது. டாடா குழுமம் இந்த சூப்பர் ஆப்பை வால்மார்ட் குழுமத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதற்கான பட்ஜெட்டாக வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃபிளிப்கார்ட் 25 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உணவு, உடை, வாழ்க்கை முறை, கல்வி, நிதி, பொழுதுபோக்கு என அனைத்து பிரிவுகளும் ஒரே ஆப்பில் உள்ளடங்கிவிடும். இதற்கடுத்த சூப்பர் ஆப் வாய்ப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் உள்ளது. இதன் மை ஜியோ ஆப் சூப்பர் ஆப்பாக மாறினால், கல்வி, மருத்துவமனை, பொழுதுபோக்கு, சில்லற

சீனாவில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்! - சீனாவின் நடவடிக்கை என்ன?

படம்
giphy.com நவ.11 ஆம் தேதி உலக அளவில் சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. தினம் என்று வந்தால் யாருக்கு கொண்டாட்டம்? ஆம். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்குத்தானே? 2009ஆம் ஆண்டிலிருந்து அலிபாபா நிறுவனம், இதனை மிகப்பெரிய விற்பனைக்கான நாளாக பார்க்கிறது. அப்படித்தான் தனது வலைத்தளத்தில் விளம்பரம் செய்கிறது. 2015 ஆம் ஆண்டு 140 மில்லியன் பார்சல்களாக இருந்த விற்பனை, 2017ஆம் ஆண்டு 331  மில்லியன் பார்சல்களாக உயர்ந்துள்ளது. நான்கில் ஒருவர் என ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு கூறியது சீனாவில் மட்டும் என நினைவில் கொள்ளுங்கள். இதனை எப்படி கற்பனை செய்யலாம் தெரியுமா? அமெரிக்க நாட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் ஆளுக்கொரு பார்சல் வாங்கியுள்ளதாக கருதலாம். விற்பனை, சாதனை என மார்தட்டிக்கொள்வது சரிதான். ஆனால், இதனால் ஆண்டுதோறும் 9.4 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன என்று க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும் ஃப்ரீ டு பிளாஸ்டிக் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு சிங்கிள்ஸ் தினத்தில் அலிபாபா நிறுவனம் 22 பில்லியன் டாலர்களுக்கு வணிகம் ச