காதல் மீட்டர் - சமரசம் செய்து காதலிக்கலாமா?
காதல் மீட்டர் 4 இன்று பல்வேறு கலாசாரங்களை சேர்ந்தவர்கள் காதலால் வேறுபாடுகளை மறக்கிறார்கள். ஒன்றாக சேர்கிறார்கள். எனவே, நீங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. எந்தளவு திறந்த மனது கொண்டவராக இருக்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதே முக்கியம். இணையர்கள் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுடைய வாழ்வை முழுமையான திருப்தியோடு வாழ்ந்தால் போதும். டேட்டிங் செல்பவர்கள், திருமண வாழ்க்கைக்கு அந்த செயல்பாடு கூட்டிச்செல்லும் என ஈடுபடலாம். சிலர், அதில் பாலுறவிலும் கூட ஈடுபடுகிறார்கள். இதெல்லாம் சரியானதா இல்லையா என்றால் அதை தனிப்பட்ட இருநபர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இங்கு நான் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தல்களைக் கூறலாம். அவற்றை நீங்கள் பகுத்தாய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மறுக்கலாம். ஒருவர் கூறும் அறிவரையை அப்படியே நம்புவதும் தவறு. தன்னுடைய அறிவை முழுக்க புறக்கணிப்பதும் அழிவையே கொண்டு வரும். சமரசம் செய்துகொண்டால் சமாதான வாழ்க்கை என்று சில பழம்பெருச்சாளிகள் அறிவுரை கூறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை தரம், விதிகள் என எதிலும் பின்வ...