இடுகைகள்

நேர்காணல் - வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"சமகாலத்தை விமர்சிப்பது எழுத்தாளனின் கடமை"

நேர்காணல் "சமகாலத்தை விமர்சிப்பது எழுத்தாளனின் கடமை" பாஸ்கல் பிரெஸ்ஸன் , கிராபிக் எழுத்தாளர் . தமிழில் : ச . அன்பரசு 1927 ஆம் ஆண்டு பிறந்த சைமன் அன்னி வெய்ல் , ஜெர்மனின் ஆஷ்விட்ச் முகாமிலிருந்து தப்பி பிழைத்து வழக்குரைஞராக பணியாற்றியவர் . பின்னாளில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதல் தலைவராக பணியாற்றியதோடு , பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் உறுப்பினராகவும் மனித உரிமைகளுக்காக போராடியவர் . அண்மையில் காலமான சைமன் வெய்லின் வாழ்க்கையை கிராபிக் நாவலாக்கியுள்ளார் பாஸ்கல் பிரெஸ்ஸன் . சைமன் வெய்ல் பற்றிய கிராபிக் நாவலை எழுத எப்படி உத்வேகம் பெற்றீர்கள் ? வெய்ல் குடும்பம் அங்கீகரித்த கிராபிக் நாவல் இதுவே . நாட்டிற்கு உழைத்த ஸோலா , ஜீன் ஜாரெஸ் , விக்டர் ஹியூகோ , மேரி க்யூரி , ஜீன் மௌலின் , அய்மே சீஸைரே ஆளுமைகள் மீது அக்கறை உண்டு . ஆஷ்விட்ச் முகாமிலிருந்து தப்பித்த சைமன் , கருக்கலைப்பு சட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராடியதோடு ஐரோப்பாவை ஒன்றாக்கிய தலைவர் அவர் . 176 பக்கங்களில் சைமன்ஜேக்கப் என்ற பெயரில் பிறந்த நம்காலத்தின் மிகச்சிறந்த தலைவர் வாழ்க்கையை மூன்றாண்டு உ