"சமகாலத்தை விமர்சிப்பது எழுத்தாளனின் கடமை"

நேர்காணல்


"சமகாலத்தை விமர்சிப்பது எழுத்தாளனின் கடமை"

பாஸ்கல் பிரெஸ்ஸன், கிராபிக் எழுத்தாளர்.
தமிழில்: .அன்பரசு

1927 ஆம் ஆண்டு பிறந்த சைமன் அன்னி வெய்ல், ஜெர்மனின் ஆஷ்விட்ச் முகாமிலிருந்து தப்பி பிழைத்து வழக்குரைஞராக பணியாற்றியவர். பின்னாளில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதல் தலைவராக பணியாற்றியதோடு,பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் உறுப்பினராகவும் மனித உரிமைகளுக்காக போராடியவர். அண்மையில் காலமான சைமன் வெய்லின் வாழ்க்கையை கிராபிக் நாவலாக்கியுள்ளார் பாஸ்கல் பிரெஸ்ஸன்.

சைமன் வெய்ல் பற்றிய கிராபிக் நாவலை எழுத எப்படி உத்வேகம் பெற்றீர்கள்?

வெய்ல் குடும்பம் அங்கீகரித்த கிராபிக் நாவல் இதுவே. நாட்டிற்கு உழைத்த ஸோலா, ஜீன் ஜாரெஸ், விக்டர் ஹியூகோ, மேரி க்யூரி, ஜீன் மௌலின், அய்மே சீஸைரே ஆளுமைகள் மீது அக்கறை உண்டு. ஆஷ்விட்ச் முகாமிலிருந்து தப்பித்த சைமன், கருக்கலைப்பு சட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராடியதோடு ஐரோப்பாவை ஒன்றாக்கிய தலைவர் அவர். 176 பக்கங்களில் சைமன்ஜேக்கப் என்ற பெயரில் பிறந்த நம்காலத்தின் மிகச்சிறந்த தலைவர் வாழ்க்கையை மூன்றாண்டு உழைப்பில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.

இருபத்தைந்து ஆண்டுகளாக மனிதநேயம், இனவெறி, கருணை உள்ளிட்ட தீம்களில் கிராபிக் நாவல்களை எழுதிவருகிறீர்கள். உலகம் முன்பை விட குரூரமானதாக மாறிவருகிற நிலையில் இதற்கான தீர்வாக எதனைக் கருதுகிறீர்கள்?

அநீதி மற்றும் சமத்துவமின்மை என்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. மனிதநேயம், நீதி, சமூகம், இனவெறி, சூழலியல் உள்ளிட்ட கருத்துக்களில் நான் எழுதியுள்ளேன். இதன் விளைவாகவே விக்டர் ஹியூகோ எனக்கு பிடித்தமான எழுத்தாளராக உள்ளார். எழுத்தாளன் தான் வாழும் காலகட்டத்தின் பிரதிநிதி. நன்மை, தீமை என இரண்டையும் விமர்சித்து ஆராய்வது அவனின் கடமை. இக்காலகட்டத்தின் தூதனாக மக்களிடன் அறிமுகமாகவே விரும்புகிறேன். மனிதர்களின் குரூரமான செயல்பாடுகள் அதிகரித்து வருவது உண்மையே. எதிர்காலத்தில் ஆண் என்பது பெண்தான் என்பார் பிரெஞ்சு கவி லூயிஸ் ஆரகன். ஆண், பெண் இருவருக்குமான சமத்துவ சூழலை மீட்பது மிகஅவசியம்.

சைமன் வெய்ல் 1974 ஆம் ஆண்டே கருக்கலைப்புக்கான சட்டரீதியான உரிமையை வலியுறுத்தினார். இன்றும் இதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலையில் சைமன், பெண்களுக்காக செய்த முயற்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

கருக்கலைப்பு தொடர்பான பிரெஞ்சு மக்களின் கருத்துகள் நாற்பது ஆண்டுகளில் பெருமளவு மாறியுள்ளன. இன்று 75 சதவிகிதம் பேர் கருக்கலைப்பை ஆதரிக்கிறார்கள். கடுமையான விதிமுறைகளுக்குள்ளாகவே மருத்துவர்கள் இன்று கருக்கலைப்பு செய்ய அரசுகள் அனுமதிக்கின்றன. கருக்கலைப்பை ஏன் அரசு தீர்மானிக்கவேண்டும்? குழந்தையை தேவையா இல்லையா என பெண் தீர்மானிக்க ஏன் உரிமை மறுக்கப்படுகிறது? என புரட்சிக்குரல் எழுப்பியர் சைமன் வெய்ல்.

பிரெஞ்சு வரலாற்றில் முக்கிய ஆளுமையான சைமன் வெய்லின் பணிகள் சமூகம் முழுக்க பலரும் அறியாத நிலையை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?

'எ லைஃப்' எனும் அவரின் நூலை வாசித்தவர்கள் 1974 ஆம் ஆண்டு பெண்ணுரிமைக்கான போராட்டம், அல்ஜீரியா விடுதலை முன்னணி இயக்க உறுப்பினர்களுக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்தவை முக்கியமான நிகழ்வுகள். பாந்தியன் கல்லறை மாளிகையில் புதைக்கப்பட்ட ஐந்தாவது பெண்மணி சைமன் வெய்ல், அவரது கணவர் அன்டோனி வெய்லைத் தொடர்ந்து அங்கு இடம்பெறுகிறார். அன்டோனி தன் பதவியை தியாகம் செய்து சைமனை சுகாதாரத்துறை அமைச்சராக்கினார். இருவரின் உடல்களும் ஒன்றாக இருப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் ஆன்ம அஞ்சலி.


நன்றி:Rakotomalala,globalvoices.org