ஸ்மார்ட்சிட்டி பிளான்!


Image result for smart city


ஸ்மார்ட் நகரங்கள்!


2015 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று நரேந்திரமோடி அறிவித்த ஸ்மார்ட்சிட்டி திட்டம்(Smart Cities Mission (SCM) நூறு நகரங்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டில் ஆண்டுதோறும் நகரங்களுக்கு நூறுகோடி ரூபாய் நிதியளிப்பது இந்திய அரசின் திட்டம்.

வீடு, போக்குவரத்து, திறந்தவெளிபரப்புகள், கழிவு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகியவை ஸ்மார்ட் நகரங்களில் மேம்படுத்தப்படும்.

மெட்ரோரயில் பணி (35.9%), பிஎம்ஆவாஸ் யோஜனா(15.6%), ஸ்மார்ட் சிட்டி(14.8%), ஸ்வட்ச் பாரத்(6%), அடல்நகரமேம்பாடு(14.4%) என 2018-2019 ஆண்டு அரசின் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட நூறு நகரங்களில் நடைபெறவுள்ள திட்டங்கள் 4,500. திட்ட மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 கோடி ரூபாய். நூறு கோடிக்கு மேற்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 329. வீடு கட்டுமான திட்டங்களின் மதிப்பு - 17,036 கோடி. 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக திட்டமதிப்பு கொண்ட 98 திட்டங்கள் அரசு -தனியார் கூட்டில் நடைபெறவிருக்கின்றன.  

ஜனவரி 2016 ஆம் ஆண்டு ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்காக முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்கள் புனே, புவனேஸ்வர், ஜபல்பூர்.


பிரபலமான இடுகைகள்