வானிலை மாற முகம் மாறுதோ!- மெலானியா ட்ரம்ப் ரியாக்‌ஷன்






பிட்ஸ்!

மாறிய முகம்!

புடினுடன் பின்லாந்தில் நடைபெற்ற வரலாற்று சந்திப்பில் ட்ரம்ப் பேசிய ரஷ்ய ஆதரவு பேச்சினால் அமெரிக்கர்களின் கோபத்திற்கு வறுகடலையானார். அதைவிட புடினை வரவேற்ற ட்ரம்பின் மனைவி மெலானியாவின் மலர்ச்சியான முகம் சட்டென மிரட்சியாகும் முகமாற்றத்தை சொல்லும் 6 நொடி வீடியோதான் தற்போது இணையத்தில் வைரல் ஹிட்டாகிவருகிறது. மரண பயத்தை காட்டிட்டான் பரமா!
விதை இன்விடேஷன்!
கேரளாவின் சுயேச்சை எம்எல்ஏ வி.அப்துரஹிமான் தன் மகள் ரிஸ்வானாவுக்கு மறுசுழற்சி காகிதம், காய்கறிவிதைகளை பதித்து செய்த அழைப்பிதழ் மக்களை வசீகரித்துள்ளது.  "பூக்கள் மற்றும் விதைகளிலான அழைப்பிதழை மண்ணில் புதைத்து நீரூற்றினால் வெண்டைக்காய், தக்காளி ஆகியவை விளையும்.அழைப்பிதழை மக்கள் தூக்கியெறியாமல் பயன்படுத்தவே விதை இன்விடேஷனை நண்பரின் ஆலோசனையைப் பெற்று ஸ்க்ரீன் பிரிண்டிங் முறையில் டிசைன் செய்தோம்." என்கிறார் எம்எல்ஏ வி.அப்துரஹிமான்

பேஷன்ஷோவில் தாய்ப்பால்!

அமெரிக்காவின் மியாமி நகரில் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டட் இதழின் சார்பாக நீச்சலுடை தீமில் அழகிகளின் பேஷன்ஷோ நடைபெற்றது. அதில் பங்கேற்ற பதினாறு பேர்களில் ஒருவரான மாரா மார்ட்டின் தன் ஐந்து மாத குழந்தை ஆரியாவுக்கு தாய்ப்பால் ஊட்டியபடியே பிகினியில் நடந்து வந்தது பலருக்கு ஷாக். ஆனால் அதன் வழியாக சொன்ன செய்தி செம ஹிட். "தாய்ப்பால் ஊட்டுவது தலைப்புச்செய்தியானது ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் சாதாரணமாக செய்வதுதானே இது?" அசால்ட்டாக பேட்டியளித்துள்ளார் மாரா. நாங்க இன்னும் செட் ஆகலியே மேடம்!

பாசப்பறவைகள் ரீயூனியன்!

மத்திய அமெரிக்காவின் குவாத்திமாலாவிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக இடம்பெயர்ந்த ஹெர்மெலிண்டோ செகாக், ட்ரம்பின் அகதி கொள்கையால் தன் ஆறுவயது மகன் ஜெஃபர்சனை பிரிய நேர்ந்தது. கடும் எதிர்ப்பால் அகதி விதிகள் தளர்த்தப்பட, பல மாதங்களுக்கு பிறகு செகாக் மகனோடு இணைந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் ஜெஃபர்சனுக்காக பலூனோடு காத்திருந்து அடையாளம் கண்டு அள்ளியணைத்து கொஞ்சும் வீடியோ பலரது கண்களையும் நனைத்துவருகிறது.
  

பிரபலமான இடுகைகள்