ஃபிபா பார்க்க ஜாலி சைக்கிள் டூர்!
சைக்கிளில் ரஷ்யா
டூர்!
கேரளாவில் வசிக்கும்
கிளிஃபின் பிரான்சிஸுக்கு ரஷ்ய உலக கோப்பையைக் காண ஆசை. தினசரி
40 டாலர்களை சம்பாதிப்பவர் எப்படி ரஷ்யா சென்று போட்டிகளைக் காண்பது?
அதற்கான வழி சைக்கிள். விமானத்தில் துபாய்,
இரான் சென்று அங்கிருந்து சைக்கிளில் 4200 கி.மீ. ரஷ்யத்தலைநகரை
சென்றடைவது பிளான்.
அர்ஜென்டினா வீரர் மெஸ்சியைக்காணவே
இப்படியொரு தவம். பாகிஸ்தான் வழியாக செல்ல நினைத்த பிரான்சிஸ்
அரசில் பிரச்னைகளால் விமானத்தில் துபாயை அடைந்து அங்கு சைக்கிளை 700 டாலர்களுக்கு வாங்கியவர் தினசரி 10 டாலர்களை செலவழித்தார்.
விடுதிகளில் தங்காமல் டென்டுகளில் தங்கி செல்லும் பாஸ்போர்ட்டுகளில்
போலீசால் எட்டு மணிநேரம் நிறுத்திவைத்து சோதித்ததும் உண்டாம். தஜகஸ்தானின் அருகிலுள்ள அசர்பைஜான் சென்றவர், ஜார்ஜியாவில்
ஆவணங்கள் இருந்தும் திருப்பி அனுப்ப பட்டிருக்கிறார். சாலை வழியாக
விரைவில் சைக்கிளில் மாஸ்கோவுக்கு சென்று பிரான்ஸ் மற்றும் டென்மார்க் மேட்சை பார்க்க
திட்டமிட்டுள்ளார்.