கேம் சூத்திரா!- கேமராக்களோடு இனிய இல்லறம்!
கேம் சூத்திரா!
கடந்தாண்டு செப்டம்பரில் பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். தனது நிர்வாண வீடியோ ஆபாச தளங்களில் உலவுவதுதான் புகாரின் சாராம்சம். டெக்ஸ்டைல் துறையில் பணியாற்றும் அப்பெண், அங்குள்ள அதிகாரியுடன் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டார். அந்த அதிகாரி அதனை பதிவு செய்வார் அவர் எதிர்பார்க்கவில்லை. இது சரியா? தவறா என்பது அவரவரின் மனம் பொறுத்த விஷயம். ஆனால் உடலுறவு கொள்வதை போனில் பதிவு செய்து ரசிக்கும் நார்சிஸ்டுகள் அதிகரித்து வருகின்றனர். சிலர் இதனை லைவ் ஜாஸ்மின், சதுர்பேட் உள்ளிட்ட லைவ் கேம் தளங்ளகளில் பதிவிட்டு சம்பாதிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் இதனை போரடிக்கும் வாழ்க்கையை சுவாரசியமாக்க செய்கின்றனர்.
இந்த வீடியோக்கள் எக்ஸ் தளங்களில் பதிவு செய்யப்படும்போது வரும் கமெண்டுகள் ஆகியவற்றை ரசித்து மகிழ்வதே இக்குழுக்களின் கலாசாரம். ஏறத்தாழ செல்பி செக்ஸ் என இதனை கூறலாம். படைப்பாளிகள் பலரும் இதனை வரவே்ற்கின்றனர். உதாரணத்திற்கு இயக்குநர் க்யூ. "நான் இதுபோல எனது நிர்வாண வீடியோவை எடுத்தேன். இது செக்ஸ் முயற்சிக்காக அல்ல. என்னுடைய சுயதிருப்திக்காக " என்கிறார்.
தன்னைத்தானே விரும்பும் சுயமோகம் என தோன்றினாலும் இவை பல்வேறு கமெண்டுகள், விமர்சனங்கள், கிண்டல்கள் வழியாக சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களுக்கே வரும்போது நிலைமை சாதகமாக இருக்கும் என கூறமுடியாது. தினசரி அலுவலகம் சென்று வருவதற்குள் 20 க்கும் மேற்பட்ட தனியார் கேமராக்களின் நமது உடல் பதிவாகிறது உண்மை. அதே கேமராவுக்கு அந்தரங்கத்தையும் பலியாக்குவது பின்னாளில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? என்ற கேள்விக்கு, "தனது அந்தரங்கங்களை வெளிப்படுத்தும்விதமாக இளம் தலைமுறை உருவாகிவருகிறது. தனது தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு நானோநொடியும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள்." என்கிறார் எழுத்தாளர் சிவ் விஸ்வநாதன்.
இது இங்கு செய்தியாகவே பதியப்படுகிறது. ஒருவரின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவது தனிப்பட்டவர்களின் விருப்பம். ஆனால் அரசின் விதி 67 ஏ படி சமூக வலைதளங்களில் நிர்வாண வீடியோக்களை பதிவிட்டால் 5 ஆண்டுகள் தண்டனை உறுதி. கேமராக்கள் இனிமையான இல்லறத்தை கூர்ந்து கவனிக்கும்முன் அதை அணைக்க மறுக்காதீர்கள்.
மூலம்: அவுட்லுக்(Pathi patni aur Cam)