ஒலியை மிஞ்சும் சூப்பர் ஜெட்!









நாசாவின் சூப்பர்சோனிக்!

நாசாவின் ஆர்ம்ஸ்ட்ராங் விமான ஆராய்ச்சி மையத்தின் F/A-18 விமானத்தை விமானி ஓட்டும் வீடியோவை அண்மையில் வெளியிட்டுள்ளது. மணிக்கு 767 மைல் கி.மீ என ஒலியையும் மிஞ்சும் வேகத்தில் செல்லும் விமானம் என்பது இதன் ஸ்பெஷல்.

விமானியின் திறனை சோதிக்க நடந்த சோதனையல்ல. நாசா தயாரித்துள்ள எக்ஸ் -59 என்ற சூப்பர்சோனிக் விமானத்தை சோதிப்பதற்கான முன்மாதிரி சோதனை இது. அமெரிக்கா 1973 ஆம் ஆண்டு சூப்பர்சோனிக் விமானத்தை தடை செய்துவிட்டது. மண்டையைப் பிளக்கும் அதீத ஒலியே தடைக்கு காரணம். ஒலியின் வேகத்தை மிஞ்சி விமானம் செல்லும்போது காற்றின் மூலக்கூறுகளில் ஏற்படும் அழுத்தம் சோனிக் பூம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

2016 ஆம் ஆண்டு நாசா லோக்கீது மார்ட்டின் நிறுவனத்திற்கு 20 கோடிரூபாயை வழங்கி அதிக ஒலியெழுப்பாத சூப்பர்சோனிக் ஜெட்டை(X59) உருவாக்கும் திட்டத்தை அளித்தது. 2021 ஆம் ஆண்டு இவ்விமானம் நாசாவுக்கு அளிக்கப்படலாம். அரசின் தடையை நாசா விலக்கிக்கொள்ள கோரி ஏற்கப்பட்டால் ஒலியையும் மிஞ்சி மக்கள் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.