பூஞ்சை நோயை தவளை பரப்புகிறது!
தவளை அபாயம்!
தவளை மூலம் பரவிவரும் chytridiomycosis எனும் பூஞ்சைநோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இப்பூஞ்சை
நோய் உடலிலுள்ள நீர் அளவை குறைத்து எலக்ட்ரோலைட்டுகளையும் பங்கம் செய்வதால் இதயம் செயலிழந்து
மரணம் நிகழும்.
உலகிலுள்ள 38 அறிவியல்
அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பூஞ்சை குறித்த 234 டிஎன்ஏ மாதிரிகளை ஆராய்ந்து வருகின்றனர். இதில் நான்கு
முக்கிய மரபணுக்களில் மூன்று ஏற்கனவே பரவத்தொடங்கிவிடது.
எனவே தவளைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் சற்று
யோசிப்பது நல்லது. "இப்பூஞ்சை குறித்து துல்லியமான செய்திகளை
நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிழக்கு ஆசியாவில் பாதிப்பு
ஏற்படுத்தும் பூஞ்சை குறித்த விஷயங்களை விரைவில் கண்டுபிடிப்போம்" என தகவல் கூறுகிறார் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் சைமன் ஓ ஹனோலன்.